Friday, July 17, 2009

நட்பு


என்னிடம் இருந்த
ஒரு இதயத்தையும்
பறித்துக் கொண்டது காதல்!
எனக்காக
ஒரு இதயத்தையே
பரிசளித்தது நட்பு!

கஷ்டங்களில்
யோசித்தது காதல்!
யோசிக்காமல்
கைகொடுத்தது நட்பு!

துயரங்களை நோக்கி
இழுத்துச்சென்றது காதல்!
உயரங்ளை நோக்கி
அழைத்துச் சென்றது நட்பு!

கட்டுப்பாடுகளை
தளர்த்த முயற்சித்தது காதல்!
கடமைகளை
உணர்த்த முயற்சித்தது நட்பு!

என் இலட்சியங்களை
கனவாக்கியது காதல்!
என் கனவுகளை
இலட்சியமாக்கியது நட்பு!

காயம் தரும்
காதல் வேண்டாம்!
நன்மை தரும்
நட்பைக்கொடு ....

நட்பு....


கண் இல்லாமல் காதல் வரலாம்....
கற்பனை இல்லாமல் கவிதை வரலாம்....
ஆனால் உண்மையான அன்பு இல்லாமல்...
நட்பு வராது.....

சிவப்பு மனிதனுக்கும் நிழல் கருப்பு தான்
கருப்பு மனிதனுக்கும் இறத்தம் சிவப்பு தான்
வண்ணங்களில் இல்லை வாழ்க்கை,
மனித எண்ணங்களில் தான் வாழ்க்கை...

நட்பு...


உன் அருகில் இருப்பவர் எல்லோரும்

உன்னை நேசிப்பது இல்லை,

உன்னை நேசிப்பவர்கள் அனைவரும்

உன் அருகில் இருப்பதில்லை...

நட்பு


நான் இறந்த பின்
என் கல்லரையின் முன்
வந்து அழுதுவிடாதே....

எழுந்தாலும் எழுந்த்துவிடுவேன்
உன் கண்ணீரை துடைப்பதற்காக.....

சிந்தனை


சாப்பிடுமுன் சிந்தித்தால் நோயில்லை

சமைக்கு முன் சிந்தித்தால் கோபமில்லை

கல்விகற்குமுன் சிந்தித்தால் வேலைக்கு கவலையில்லை

தொழிலைத் தொடங்குமுன் சிந்தித்தால் நஷ்டமில்லை

கோபப்படுமுன் சிந்தித்தால் கஷ்டமில்லை

வயதான பின் சிந்தித்தால் லாபமில்லை

வருவதற்கு முன் சிந்தித்தால் துயரமில்லை

கடவுளைப்பற்றி சிந்தித்தால் என்றும் துன்பமில்லை...

சிந்தனைக்கு...


உன்னை பலவீனப்படுத்தும்
எந்த ஒரு விஷயத்திடம்
இருந்தும் விலகியே இரு.
அது, அதிகபட்ச
அன்பாக இருந்தாலும்...

காதல் பூக்கள்...


கள்ளமில்லா உன் பார்வையால்
என்னைக் கொள்ளை கொண்டு
சென்று விட்டாய்
திசை மறந்த
பறவையாய்
திகைக்கிறோம்
நானும் என் காதலும்..


நாணயத்தை
தடவிப்பார்த்து மதிப்பிடும்
கண்ணில்லாக் கிழவி போல்
உன் மனம் தடவி
அறிந்து கொண்டேன்
நீ சொல்லாத காதலை..

சாளரத்தின் வழியே
உடல் நனைக்கும் மழைத்தூறலாய்
என் மனதை நனைத்தது
காதலுக்கு நம் பெற்றோரிடம்
சம்மதம் கிடைத்த தருணங்கள்..


பூட்டிய கதவை
இழுத்து சரிபார்ப்பதாய்
ஒவ்வொரு முறையும்
என்னிடம் செல்லச் சண்டையிட்டு
உறுதி செய்து கொள்கிறாய்
உன் மீதான என் காதலை..

செடி முழுக்க பூத்திருக்கும்
ரோஜாவாய்
நம் மனத்தோட்டத்தில்
மலர்ந்திருக்கின்றன‌

என்றும் வாடாத காதல் பூக்கள்...

காதல் ஒரு இனிய விஷம்


அன்று
காதல் காதல் என்று கவி சிந்தி
காவியமாக்கினாய்
நம் காதலை.
இன்று
காதலை
காணல் நீராக்கி விட்டாயே..


காலத்தையும் கனிய வைப்பேன்
என நம்பிக்கை தந்தாய்
இப்போ..
என்னையும் மறந்து
காலத்தையும் மறந்து

நேரத்தையும் மறந்து
தூங்குகின்றாயே

உனக்காக எதையும் தியாகம்
செய்வேன்
காதலை மட்டும் தியாகம்
செய்து கொள்ள மாட்டேன்


உன்னை நினைத்து
கண்ணீர் சிந்தியும்
காதல் கரைந்து போகவில்லை
என்னும்...

நிலவை சுற்றவைக்கும்



நிலவை சுற்றவைக்கும்
பூமிக்கு நிலா சொந்தம்
பூமியை சுற்றவைக்கும்
சூரியனுக்கு பூமி சொந்தம்
இவை சூரிய குடும்பம்

என்னை
உன்பின்னால் சுற்றவைப்பதால்
நான் உனக்கு சொந்தம்
காதல்
உன்னை சுற்றவைப்பதல்
நீ காதலுக்கு சொந்தம்
நாம் காதல் குடும்பம்...

என்னால் முடிந்தது


நீரை எரிக்கவோ
மணலை திரிக்கவோ
நெருப்பை பணியாக்கவோ
காற்றை பிடிக்கவோ
ஆகாயத்தை அளக்கவோ
என்னால் முடியாது ……….

என்னால் முடிந்தது எல்லாம்
ஒன்றே ஒன்றுதான்
உன் நினைவுடன்
வாழ்வது....

அழகுசுற்றி


தன்னைத்தானே சுற்றிக்கொண்டு
சூரியனையும் சுற்ற
பூமிக்கு ஒரு ஆண்டு ஆகிறது
உன்னைமட்டுமே சுற்றும் எனக்கு
ஒரு ஆயுள்போதாது

உலகை சுற்றிவர
முப்பது நாட்கள்போதுமாம்
உன் அழகை சுற்றிவர
முன்னுறு ஆண்டுகள் வேண்டும்

நான் ஊர் சுற்றியல்ல
உன் அழகை சுற்றும்
அழகுசுற்றி...

காதலே காதலிக்கும் காதல்


காதல்வயப்பட்டவர்கள்
அனைவரும் சொல்லுகிறார்கள்
தான் காதலில் வீழ்ந்துவிட்டதாக

எப்போது வீழ்ந்தாலும் என்னை
மீட்டெடுப்பது காதல் பின்னெப்படி
சொல்லுவது நான் வீழ்ந்தேனென்று
வேண்டுமானால் காதலில் மீள்’தேன்னென்று
சொல்லிக்கொள்கிறேன்

காதலேன்னை சாய்த்துவிடுவதுதில்லை
மாறாக நான் துவண்டுவிடும்போதெல்லாம்
உன் மார்பில் சாய்த்து கொள்கிறது
நம் காதல் ஆறுதலாக

காதல் ஒரு சுறுக்குகயுறு என்கிறார்கள்
எனக்கு காதல் கொடிக்கம்பத்தில்
கட்டப்பட்டகயறு என்னை
எப்போதுமே உச்சியில் பறக்கவிடுகிறது

காதலித்தால் காதல்தவிரபிற
இயக்கம் மறந்துபோகுமேன்பார்கள்
என் வாழ்க்கை சக்கரம் சுழலுவதே
காதல் தரும் என்னையால்தான்

காதல் பார்த்து பாழாய்போனவர்
காதலில் வீழ்ந்து வீனாய்போனவர்
பலர்வுண்டு
காதலே காதலிக்கும் காதல்
நம்முடையாது

எல்லோரும் காதல் பிரிந்துவிட்டதென்று
என்றாவது ஒருநாள் சொல்லுகிறார்கள்
நாம் எப்படி சொல்லிகொள்ளுவது
ஒவொரு நாளும் இறுக்கமாக
பிணைத்துவைக்கிறது என்பதைதவிர

எல்லோருக்கும் எல்லாவயதினர்க்கும்
காதல் ” வந்து ” ” போகும் ” மென்பார்கள்
நமக்கு மட்டும் காதல்
நம்முடனே இருந்துவிடுகிறது ஒவொருநாளும்...

வீதி வழிபோகையில்


வீதி வழிபோகையில்
தலை நிமிர்ந்து
நெஞ்சு விரிந்து
கை வீசி
கால் நடக்கும்
ஆண்மையாய்

என் எதிரில்
நீ வந்தால்

தலைகுனிந்து
பாதம் பார்த்து
உள்ளம்துடிக்க
உதடுகடித்து
இதயம் ஏங்கும்
உன் ஓர விழி
விழியம்பு என்னை
தைக்காதவென்று...

உன் தோழிகளுடன்


உன் தோழிகளுடன்
பேசிக்கொண்டு இருப்பாய்
நானும் சற்றே எட்ட நின்று என்
தொழளர்களுடன் பேசிக்கொண்டு இருப்பேன்
உன்னை கானது போல்

இங்கே பாரடா

நான் இங்கேதானே இருக்கேன் என்று

உன் காதோரம் தலை நிவுவாய்
சரியாத உடையை சரிசெய்வதாக
செய்கைகள் புரிவாய்
என் கவனம் உன்மீது திரும்ப
இதற்கு பெயர் தான்
காதல்ஈர்ப்பு...

நீ பார்க்கும்


நீ பார்க்கும் போதெல்லாம்
பரிசாய் கொடுக்க எனக்கு
இதயங்கள் இல்லை
இருப்பதோ ஒரு இதயம்
பேசாமல் என்னை பார்த்துக்கொண்டே
இருந்துவிடு

நீ கண்களை வைத்திறுகிறாயா ?
காந்தங்களை வைத்திறுகிறாயா ?
நீ எப்போது பார்த்தாலும்
என்னை ஈர்த்துகொள்கிறது

நீ சிரிக்கும் போதெல்லாம்
எனக்கு சந்தேகம்
உன் பற்கள் எல்லாம் மணியாக
இருக்குமோவென்று

காற்றில் எதையோவரைந்து
கொண்டே இருக்கிறது உன்
நேற்றியோர கற்றை முடி
எப்படி பார்க்க அதுவரையும்
ஓவியத்தை

நீ நடனம் ஆடுகிராய ?..
நடக்கிறாயா ?..
உன்னை பொறுத்தமட்டில்
என் வரையில் இரண்டுமே
ஒன்றுதான்

நீ என்ன வாசனைதிரவிய
தொழிற்சாலையா ?..
உன்னை கடக்கும் காற்றில்
வீசும் வாசத்தை வைத்துசொல்கிறேன்...

நான் உன்னை


நான் உன்னை போ போ
என்று சொல்லுவது
நீ என்னைவிட்டு போகவேண்டும்
என்பதற்க்காக அல்ல
என் இதயத்தினுள் போ போ
என்பதற்க்காக

என்னை மறக்க சொல்லுவது
ஒரே அடியாக மறந்துவிடுவதற்கு
அல்ல மறுபடியும் என்னை
நினைக்க செய்வதற்காக

உன்னை நேசிக்க
நான் யோசிப்பது இல்லை
நான் யோசிப்பதே
எவ்வாறு எல்லாம் உன்னை
நேசிக்கலாம் என்பதற்காகத்தான்

உன்னை பார்க்காமலிருப்பது
தவிர்க்க வேண்டும் என்பதற்கல்ல
எப்போதும் உன் நினைவாலே
தவித்துகிடக்க வேண்டும் என்பதற்குத்தான்

கடைசியாக ஒன்று
என்னை காதலிக்கவேண்டம்
எண சொல்லுவது எதற்குதெரியுமா
உனக்கும் சேர்த்து நானே
காதலித்து கொள்கிறேன் என்பதற்க்காகதான்...

சத்தமின்றி தான் அழுகிறேன்.


சத்தமின்றி தான் அழுகிறேன்.
நான் ஆனாலும்
எப்படியோ தெரிந்த்து விடுகிறது
என் விரலுக்கு..
கண்ணுக்கும் விரலுக்கும்.
என்ன அப்படி ஒரு அன்பு....

நினைவலைகளை அள்ளி


என் உள்ளக்கிடங்கில்
சேர்த்து வைத்த உன்
நினைவலைகளை அள்ளி
வீசுகிறேன்
அது கடலையும் மிஞ்சி
பொங்கி எழும் பேரலைகலாகி
உன்னை அள்ளி செல்லும்

என் எண்ண அலைகளில்
நீந்திப்பார்
என் மனம் எனும் ஆழ்கடல் எங்கும்
உன் நினைவுகள் பதிந்த
முத்துக்கள் ஒளிந்திருக்கும்
உன் நினைவாலே உருவாகிய
காதல் கடலை
வற்றாமல் நிலை காப்பாய் என் ஜீவனே....

உன் கடிதத்தை


உன் கடிதத்தை
எங்கு வைக்க?
எங்கு வைத்தாலும் ...
இனிப்பென்று நினைத்து
எறும்புகள் கடித்திடுமோ?
என்று
சட்டைப்பையில் வைக்கிறேன்
இதோ கடிக்கிறது இதயத்தை
உன் நினைவுகளின் எறும்புகள்..

உன் கடிதத்தை
படிப்பதில் உள்ள ஆர்வத்தைவிடவும்
பார்த்துக் கொண்டிருப்பதில்தானடி
சுகம் இருக்கிறது.*கனவில்*
ஆகவே
வெற்றுத்தாளாயினும் பரவாயில்லை..
கடிதம் அனுப்பிக்கொண்டேயிரு
நான் பார்த்துக்கொண்டேயிருக்கிறேன்.

உனக்கு
கடிதம் எழுதும்பொழுது மட்டும்
கைகள்
அட்சயப்பாத்திரமாகிவிடுகிறதடி!

பாரேன்
எழுத எழுத..
வந்துகொண்டே இருக்கிறது
வார்த்தைகள்!
உன் நினைவுகளாக ......

அன்னை



ஈடு கொடுக்க முடியாத சொந்தம் ------- தாய்
முன்னேற்றத்தின் வழிக்காட்டி -------- தந்தை
மீள முடியாத பந்தம் -------- பாசம்
என்றும் நிலைக்காதது ------- கற்பனை
விடிந்தால் முடிந்து போகக் கூடிய வாழ்க்கை -------- கனவு
வெற்றி பெற முதல் வைப்பது ------------- நம்பிக்கை
வாழ்க்கையில் இருக்கக் கூடாதது --------------- எதிபார்ப்பு
புரிந்து கொண்டவர்களுக்கே -------------- வாழ்க்கை
கண்ணீருடன் முடிவடைவது --------------------- கஷ்டங்கள்
அழியாத சொந்தம் ---------------------------நட்பு
உலகத்தில் அனைவருக்கும் கிடைக்காதது ---------நிம்மதி
ஆசைப்படுதலின் முடிவு --------------------- அறிவு
வறுமையை விட கொடிய நோய் ---------------பிரிவு

ஒற்றை பூ


முதல் முறை
நான்
உன்னை பார்க்க வந்தேன் !

ஒற்றை பூவை
கூட உன்னால்
கொண்டு வரமுடியாத
என கோபித்தாய்
நீ ?

வெகு இயல்பாய்
சொன்னேன் உன்
விழி பார்த்து

"பூந்தோட்டத்துக்கு
வரும் போது யாரும்
பூக்களோடு வருவதில்"

உயிர் இல்லாத என் இதயத்தில்


உயிர்
இல்லாத என் இதயத்தில்
உன் நினேவுகள்
மட்டும் என்றும் உயிரோடு...

நினைத்துப்பார்க்கிறேன்


வேண்டாம் என்று சொல்லி
எனை விலகி நின்ற
நொடிகளை
நினைத்துப்பார்க்கிறேன்

இல்லை என்று சொல்லி
இதயத்தின் இயக்கம்
நிறுத்திய கணங்களை
நினைத்துப்பார்க்கிறேன்

வலிக்கவே இல்லையே
இன்னுமா - நீ
என் மீது கொண்ட
அந்த ஏதோ ஒன்று

உயிரோடு இருக்கிறது...

வரம்,தவம்


உன்னோடு வாழ்வதற்கும்
உன் நினைவுகளோடு வாழ்வதற்கும்
சிறு வித்தியாசம் தான் உண்டு
உன்னோடு வாழ்ந்தால் அது வரம்
உன் நினைவுகளோடு வாழ்ந்தால் அது தவம்...

நம்பிக்கை...


என் உள்ளத்தின் ஆழத்தில்
உறங்கிக் கிடக்கின்றன
பல கனவுகள்.

உயிரின் அடி ஆழத்தில்
ஏக்கம் என்னும் நதி
பெருக்கெடுத்தோடுகின்றது.

எதையோ தொலைத்து
எதையோ தேடியபடி
வீதிகளின் ஓரங்களில்
விரைவுப் பயணங்கள்

விதியின் விளையாட்டால்
வீணாகும் என் வாழ்நாட்களை
எவரால் மீட்க முடியும்?

வாழும் நாட்கள்
தருகின்ற வலியை
யாரால் தாங்கமுடியும்?

எப்பொழுதும்
வானத்தை நோக்கியபடியே
வாசம் செய்கின்றேன்

என் சிறகுகள்
உடைந்து போனாலும்
நினைவுகள் ஏனோ
உயரவே பறக்கின்றன.

விழிகளைத் திறந்தபடிதான்
தூங்குகின்றேன்
விழி மூடும் பொழுதெல்லாம்
விழித்திருக்கின்றேன்

எனக்கும் சிறகுகள் முளைக்கும்
என்ற நம்பிக்கையில்
புதைந்து கிடந்தாலும்
புதையலாகவே கிடக்கின்றேன்...
PAKEE Creation