
என் உள்ளக்கிடங்கில்
சேர்த்து வைத்த உன்
நினைவலைகளை அள்ளி
வீசுகிறேன்
அது கடலையும் மிஞ்சி
பொங்கி எழும் பேரலைகலாகி
உன்னை அள்ளி செல்லும்
என் எண்ண அலைகளில்
நீந்திப்பார்
என் மனம் எனும் ஆழ்கடல் எங்கும்
உன் நினைவுகள் பதிந்த
முத்துக்கள் ஒளிந்திருக்கும் உன் நினைவாலே உருவாகிய
காதல் கடலை
வற்றாமல் நிலை காப்பாய் என் ஜீவனே....


No comments:
Post a Comment