Monday, March 11, 2013

என்ன வாழ்க்கைடா...
வாழ்க்கை புரியாத புதிர்
விடை தெரியா பயணம்
முன்னுக்கு பின்
முரணான வாழ்கை
பேரும்,புகழும் கிடைக்குமென்றால்
எதை வேண்டுமானாலும்
விட்டுக்கொடுக்கிறார்கள்,
பணம் கிடைக்குமென்றால்
அந்த பேரையும், புகழையும்
விட்டுக்கொடுக்கிறார்கள்
என்ன வாழ்க்கைடா...

Saturday, March 9, 2013

இனிப்பு...இனிப்பு தேடி
இனி வேறெங்கும்
போவதில்லையாம்
உன் மேனி தொட்டு
இறங்கிய எறும்பு...

தெரியவில்லை...நிலம் பார்த்து நீ நடந்தாய்
உன் கால் தடம் பார்த்து
நான் நடந்தேன்
ஆனாலும்
சேருமிடம் தெரியவில்லை
இது தான் காதல் பயணமோ...

எழுந்து வா...கருவி இல்லாமல்
குருவி மரத்தைக்
கொத்திக் குதறுகிறது
மண்வெட்டி இல்லாமல்
மண்ணை குடைகிறது
சித்தெறும்பு
இளைஞனே
இதற்குப் பின்னும்
ஏன் தயக்கம் உனக்குள்?
சாதிக்க எல்லாமே
இருக்கிறது உன்னிடம்
எழுந்து வா...

காதல்...


மானின் துரத்தலில்
மண்டியிட்டது சிங்கம்
அம்மாடி
இதுதான் காதலா...?

என் தெய்வம்...அன்னையே அன்று என் இதயம்
உன் வரவில் சிரித்தது
இன்று உன் சிறுபிரிவால்
அழுகின்றது
ஆயிரம் கண்ணீர்
துளிகளை கண்கள்
பிரசவித்த போது கூட
வலிக்கவில்லை இந்த உயிருக்கு
உன் பிரிவை எதிர்நோக்கும் போது
இதயம் பிளக்கின்றதே என் தெய்வமே
உன் கருவறையில்
என்னை கல்லறையாக்கிவிடு
அன்றிலிருந்து நிம்மதி
எனும் தென்றலை சுவாசிக்கின்றேன்...

Wednesday, March 6, 2013

கண்ணீர்...


வழிகளில் கங்கை ஓடம் 
மனதினில் ஏனோ வாட்ம்
துன்ப மேகம் சூழ்ந்து
இன்ப மழை பொழிய
வடிகின்றான் சிறிது கண்ணீர்
துன்பத்தை தாங்கி தான் இன்பம்
இது இயற்கையின் நியதி...

காதல்...


பிழையின்றி தமிழ் எழுத தெரியாத என்னை
கவிஞன் ஆக்கவே
வந்து நுழைந்திருக்கிறது காதல்...

காதல்...
சூரியனின் வரவுக்காக
காத்திருந்தது தாமரை
Oh
விண்ணுக்கும் மண்ணுக்கும் காதலோ...

ஊனமுற்றோர்...


பிரம்மன் 
வரைந்த ஓவியம் தான்
பாதியில் முடித்ததோ
ஊனமுற்றோர்...

கவலைப்படாதீர்கள் நண்பர்களே...நீ ஆடு மாடு மேய்க்கத்தான் லாயக்கு
என திட்டும் ஆசான்
நீ படிச்சி பாஸ் ஆகாட்டி
ஆடு மாடு தான் மேய்ப்பாய்
என ஆசீர்வதிக்கும் தந்தை

ஆடு மாடு மேய்க்கத்தான்
லாயக்கு என‌
யார் திட்டினாலும் கவலைப்படாதீர்கள்
நண்பர்களே

ஆடு மாடு மேய்ப்பது ஒன்றும்
கேவலமான தொழில் அல்ல‌

இந்த உலகுக்கு
நேர்வழி காட்ட வந்த‌
இறைதூதர்களும் தீர்க்கதரிசிகளும்
ஆடு மாடு மேய்த்தவர்கள் தான்

இறைதூதர் முகமது நபி அவர்கள்
நான் ஆடு மேய்த்திருக்கிறேன்
எல்லா இறைத்தூதர்களும்
ஆடு மேய்த்திருக்கிறார்கள் என்று
கூறி இருக்கிறார்

கீதாபதேசம் செய்த கிருக்ஷ்ணர்
ஆயர் குடியில் பிறந்தவர் தான்

இறைவனின் தூதுவர்களான‌
மோசே,யோசுவா, தாவீது
இவர்களும் மேய்ப்பவர்களே

இயேசு பெருமான்
ந‌ல்ல‌ மேய்ப்ப‌ன் என்றே அழைக்க‌ப்ப‌ட்டார்

மேய்ப்ப‌வ‌ர்க‌ளுக்கு
ஞான‌ம் பெற‌ த‌குதி கிடைக்கிற‌து
மேய்ப்ப‌வ‌ன் த‌ன‌து ம‌ந்தையை காப்பாற்ற‌
எப்போதும் விழித்திருக்கிறான்
விழிப்புண‌ர்வு ஞான‌த்தின் வாச‌ல்

அடுத்து அவ‌ர்க‌ளுக்கு
வாயில்லா பிராணிக‌ள் மேல்
அன்பும் ப‌ரிவும் உண்டாகுகிற‌து
அன்பு ஞான‌ மாளிகைக்கு
அழைத்து செல்லும் ப‌டிக்க‌ட்டு

அவ‌ர்க‌ளுக்கு கிடைக்கும்
த‌னிமையும் ஓய்வும்
அவ‌ர்க‌ளை சிந்திக்க‌ வைக்கிற‌து
சிந்த‌னை ஞான‌த்தின் திற‌வுகோல்...

கனவு...கனவு காணாதவர் யார்
தெரிந்தால் சொல்லுங்கள்
கனவு காணாதவர் எவரும் இல்லை

இயற்கை கூட
கனவு காண்கிறது
மேகத்தின் கனவு
வானவில்
இரவின் கனவு
ந்ட்சத்திரங்கள்
பூமியின் கனவு
மழை நீர்
ஆணின் கனவு
பெண்
கண்ணீரின் கனவு
புன்னகை
சொற்களின் கனவு
கவிதை
உண்மையின் கனவு
பொய்

கனவு கண்மூடி காணும் காட்சி
கனவு உறக்கத்தின் விழிப்பு
கனவு தூக்கம் போடும் புதிர்
கனவு ஆசைகளின் அந்தரங்க நீலப்படம்
கனவு காயங்கள் முகம் பார்க்கும் கண்ணாடி
கனவு நினைவுகளின் உளறல்
க‌ன‌வு ந‌ம‌க்கு நாமே பேசும் புரியாத‌ மொழி

க‌ன‌வு பொய்ய‌ல்ல‌
அது உண்மையின் நிர்வாண‌ம்
க‌ன‌வு ம‌னித‌னின்
அந்த‌ர‌ங்க‌ அறை
அங்கே தான் அவ‌ன்
த‌ன‌து நாட‌க‌ வேச‌ங்க‌ள் அனைத்தையும்
க‌ளைந்து விட்டு
நிஜ‌மாக‌ இருக்கிறான்

க‌ன‌வுக‌ளே ந‌ம‌க்கு
சிற‌குக‌ள் த‌ந்த‌ன‌
க‌ன‌வுக‌ளே புதிய‌ க‌ரைக‌ளுக்கு
ந‌ம்மை கொண்டு செல்லும்
க‌ல‌ங்க‌ரை விள‌க்காக‌ இருக்கின்ற‌ன‌

ஆக‌வே
க‌ன‌வுக‌ளால் வாழுங்க‌ள்
க‌ன‌வில் வாழாதீர்க‌ள்...
PAKEE Creation