Friday, May 10, 2013

வாழ்வு...


கனவு கண்டா 'நிஜம்
மாதிரியே இருந்துச்சு'னு பயந்துக்கறதும்,
நிஜத்தை 'கனவு மாதிரி
இருந்தது' என
வியந்துக்கறதுமாய்
இருக்கிறது வாழ்வு...!

துயரங்களுக்கும் ஆசைகளுக்கும் எப்போதும் பஞ்சமில்லை மனதில்...


எப்போது கடக்கும் என நினைக்க சில துயரங்களுக்கும்
எப்போது நடக்கும் என நினைக்க சில ஆசைகளுக்கும்
எப்போதும் பஞ்சமில்லை மனதில்...

புன்னகை...


என் வலிகளை மறைக்க
என்னை விட
என் உதடுகள் பழகிவைத்துள்ளது
புன்னகை...

அம்மா...


சாப்பிட மறந்து விட்ட வே(லை)ளைகளின் முடிவில்
பசியாய் நினைவுக்கு வருவாள் அம்மா...

பெண்ணே...


முப்பொழுதும் உன் கற்பனையில் திரிந்தவனை
பரதேசியாய் மாற்றியவள் நீ பெண்ணே...

சொர்க்கம்...


சொர்க்கம் என்பது சிறுவயதில்
அம்மாவோடு படுத்து உறங்கிய நாட்கள்...

நட்புக்குள் பிரிவுகள் நிரந்தரம் அல்ல...

நட்புக்குள் பிரிவுகள் நிரந்தரம் அல்ல
நம்மை நாம் உணரவே
சில தடவை பிரிவுகளை நாம் விரும்பி ஏற்கிறோம்...

வாழ்க்கையே ஒரு நாடக மேடை...

வாழ்க்கையே ஒரு நாடக மேடை - அதில்
நாம் கஷ்டப்பட்டாலும்
பிறரை ரசிக்க வைக்க
நடித்துதான் ஆகனும்...

காதல் , கண்ணீர்...

இன்பம் துன்பம் இரண்டும் தருவது காதல்
உண்மையான காதலின் சாட்சி கண்ணீர்...

மறக்க நினைப்பதில்லை...

நமக்கு அருகில் இருந்தால் அருமை தெரிவதில்லை
தொலைவில் இருந்தால் மறக்க நினைப்பதில்லை...

நன்றி இறைவா...



பலரது வாழ்க்கை
அவரது இஷ்டத்தில் நகர்கிறது
எனது வாழ்க்கை பல கஷ்டத்தில் நகர்கிறது
வலிகள் தந்த இறைவனுக்கு நன்றி சொல்லி வாழ்த்துகிறேன்
இவ் சின்ன வயதிலேயே வாழ்க்கையை புரியவைத்தமைக்கு...

வாழ்க்கை என்னும் ஓட்ட பந்தயத்தில்...



வாழ்க்கை என்னும் ஓட்ட பந்தயத்தில்

எல்லோரும் ஓட வேண்டி தான் இருக்கிறது
சிலர் விருப்பட்டு ஓடுகிறார்கள்

பலர் ஓடியே ஆகனும் என்னும் கட்டாயத்தில் ஓடுகிறார்கள்
அதில் நானும் ஒருவன்...

வாழ்க்கையும் ஒரு தழும்புதான்...



வாழ்க்கையே ஒரு நாடகம்தான் என்று சொல்வதினால் தான்
அனைவரும் நம் கஷ்டத்தை கூட மிகவும் ரசித்து பார்க்கிறார்களோ.
பார்க்கும் நம் கஷ்டங்கள் கூட அவர்களுக்கு காட்சிகளாகவே தென்படுகின்றனவே தவிர
நம் காயங்கள் தெரிவதில்லை தெரிந்தாலும்
அது காய்ந்து போய்விடும் என்றுதான் எண்ணுகிறார்கள்
அவர்களுக்கு என்ன தெரியும்
அந்த கஷ்டம் காயத்தோடு நிற்கவில்லை
தழும்பாகிதான் போனது என்று...

காதல்...



உலகில் வாழ்கிற அனைவரையும்
தழுவி செல்லும் தென்றல் தான்
காதல்...

வாழ்க்கையோடு ஓடியாக வேண்டும்...


எல்லா பிரச்சனைகளையும்
விட்டு நான் எங்கேனும் ஓடினாலும்
என்னை அழைத்துக் கொண்டுதானே
ஓடியாக வேண்டும்..!?

மரண வலி...

அன்பை மறுதலிக்கும் போது
பல நூறு மரண வலி வந்து செல்லும்...

நீ...



நீ 
என் மனதிலிருந்த 
செடியைப் பறித்துப் போயிருக்கலாம்
ஆனால் 
வேரின் வாசனை 
முளைத்துக்கொண்டுதான் இருக்கும்...

வாழ்க்கை...



ஏதோ ஒரு சில தவறுகள்
நம் பல சரிகளை அடிமையாக்கி
ஆண்டு விட்டு செல்வதற்க்கு மறுபெயர் தான்
வாழ்க்கை...

நேசிப்போம்...



இல்லை எனக் கூற ஏதுமே இல்லை
என் பகுதிக்கவிதைகளை
யாரோ தொடர்கிறார்கள்
என் மறைவிற்குபிறகு
யாரோ வரப் போகிறார்கள்

ஒன்றை இழந்ததும்
ஒன்று கிடைக்கிறது
ஜனனம் மரணம்
சுழற்சி நிற்காது
இருக்கும் வரைக்கும்

இருப்போரை நேசிப்போம்
நேசதேசத்தில்
என்றைக்கும் இல்லை
நிபந்தனைகள்...
PAKEE Creation