Tuesday, November 20, 2012

வருவாயா என் துயர் நீக்க...?




ஊர் அடங்கும் நேரம்
ஓசை உறையும் நேரம்
மௌனம் பேசும் நேரம்
தென்றல் வீசும் நேரம்
காதல் கடலில் மூழ்கும் கப்பலாக நான்
பூட்டிய அறைக்குள் புகுந்தாலும்
போர்வைக்குள் ஒளிந்தாலும்
ஓசை இன்றி துரத்துகிறது உன் நினைவு
ஆயிரம் மலைகளையும் தாண்டி
ஆயிரம் கடலையும் கடந்து
இன்பம் துன்பம் நினைக்காமல்
வருகிறேன் உனக்காக
நீ கடலாக நான் தீவாக
நீ இரவாக நான் நிலவாக
நீ வானமாக நான் மேகமாக
நீ பூவாக நான் தேனீயாக
என்றுமே உனக்குள் நானாக
என்னை சுற்றிலும் நீயாக
எங்குமே நீயாக
என் வாழ்க்கையே உனக்காக
வருவாயா என் துயர் நீக்க...?

மனைவி...




மரங்கள் மறைந்து நின்றால்
மரநிழல் தெரிவதில்லை
மனைவியாய் அவள் வருவதனால்
மரணம் கூட எனக்கு பெரிதில்லை...

அரலிவிதை...



அரலிவிதையும்
இப்போது அழுகிறது
எனென்றால்
"தன்னால்" இறப்பவர்களை காட்டிலும்
"பெண்ணால்"
இறப்பவர்களே அதிகம் என்று...

கண்ணீர்...



கருவறையில் இருக்கும் குழந்தைகூட
கண்ணீர்விடும் எனது காதலின்
தோல்வியின் வேதனை உணர்ந்தால்.

ஆனால் நானோ என் கண்களில் வரும்
கண்ணீரைக்கூட துடைப்பதில்லை
ஏனெனில் நான் கண்களை துடைக்கும் போது
அதற்க்குள் இருக்கும் உனக்கு வலிக்குமே என்று...
PAKEE Creation