Wednesday, April 27, 2016

பெண்கள்...

பெண்கள் இதயத்தால் சிந்திப்பவர்கள்
ஆண்கள் மூளையால் சிந்திப்பவர்கள்
இதனால் தான் பெண்கள் பலவினமானவர்கள்
என்று சொல்கிறார்கள் பெரியவர்கள்...

இளமை...

பூவோடும் நிலாவோடும் பட்டம்பூச்சியோடு
பேச கற்றுத்தரும் இளமை
நிறைய பேருக்கு அவங்க அப்பா அம்மா பேச்ச கேட்கனும்
அப்பிடினு கற்றுத்தறதில்லை...

என்றே ஒரு நாள் வாழ்வதற்கு...

என்னிடம் நிறைய கனவுகள் இருக்கின்றன
ஆனால் விற்பதற்கு மனமில்லை
எல்லா கனவுகளையும் அழகாய் செதுக்கி வைத்து இருக்கிறேன்
என்றே ஒரு நாள் வாழ்வதற்கு...

கனவு...

இங்கு பல பேருடைய வாழ்க்கை
கனவுகளில் தான் மகிழ்ச்சியாக இருக்கிறது
நிஜத்தில் வெறுப்பாகவும் வேதனையாகவும் இருக்கிறது...

பெண்...

மனிதன் முழுத் துன்பத்துக்கோ
முழு மகிழ்ச்சிக்கோ ஆளாக்கக்கூடியது ஒரே ஒரு சிருஷ்டிதான்
அது பெண்
மனிதன் சித்தத்தைச் சிதைக்கவும் , பிரமை உண்டாக்கவும்
ஆனந்த வெள்ளத்தில் அழ்த்தவும் சக்தி உள்ளவள் பெண்தான்
அதனால்தான் உலகத்தை இயக்கும் சக்தியையும்
வேதாந்தம் பெண்ணாகச் சித்தரித்திருக்கிறது...

இழப்பு...

இழப்புகளில் தான் மனிதனின் வாழ்வு நடக்கிறது
சில நீர் துளிகளின் இழப்புதானே மனிதனை உருவாக்குகிறது
அறியாமையின் இழப்புதானே ஒரு மனிதனுக்கு அறிவைக்கொடுத்தது
வருடங்களின் இழப்புதானே வயதைக்கொடுத்தது
உடலின் உழைப்பு என்ற இழப்புதானே மனிதனுக்கு பொருளைக்கொடுக்கிறது...

வழிபாடுகளும் வணக்கங்களும்...

என் துயரங்களை ஆற்றும் கடவுள்களென்று
வெறும் கற்சிலைகளை நம்பினேன்
தூசி பட்டதுவோ என்று வருந்தி
அவைகளுக்கு கண்ணூதி விட்டேன்

போகும் இடமெல்லாம் பூனைபோல
காவ்விச் சென்றேன்
கடவுள் வடிவெடுத்த கற்சிலைகளை

எங்கயோ பிறந்து வளர்ந்து
என் வாழ்வில் புகுந்து வாழ்ந்து கொண்டிருக்கும்
வணக்கங்கள் வழிபாடுகள்
சுலபத்தில் என்னைவிட்டு போகாது
என்கைகளை கும்பிடவும் வைக்கிறது

இன்னும் பல உருவமாக மாறி மாறி
என்னைக் கூழக்கிப் பாழாக்கிக் கொண்டிருக்கிறது
என் பரம்பரைக் குள்ளாலே வந்த
வழிபாடுகளும் வணக்கங்களும்...

கண்ணீர்...

அம்மா பிள்ளையை
அழவைத்துத்தான் பெற்று எடுக்கிறாள்
உன் வாழ்க்கையில் கண்ணீரை புரிந்து கொள்வதற்கு...

நம் மூதாதையர்கள்...

மனிதன் வளர வளர ஆசையும் பாசமும் வளர்கின்றன
இளம் பருவத்தில் அவர்கள் உள்ளத்தில் அத்தனை மாசு இருப்பதில்லை
ஆதலால்தான் இளமையில் கல்வி கற்கும் வழக்கத்தை
நமது மூதாதையர்கள் வைத்து இருக்கிறார்கள்...

இழப்பு...

உண்மையில் இழப்புகள் தான்
மனிதனை செம்மைப்படுத்துகின்றன
கருவறையின் இழப்புதானே
ஒரு மனித உயிரை உலகிற்க்கு கொடுத்தது...

அழுகை...

திரிந்து போன பாலுக்காகவும்
கசந்து போன மனத்துக்காகவும்
அழுது என்ன பயன்...

சில பேர்கள்...

தோட்டத்து மயிலிடம் ஆட்டத்தின் அழகைத்தான்
எதிர்பார்க்க முடியுமே தவிர
நரியின் தந்திரத்தையோ ,
வேங்கையின் வீராவேசத்தையோ எதிர்பார்க்க முடியாது
அது போல் தான் சில பேர்களிடமும்...

சம்பிரதாயம்...

சம்பிரதாயம் என்று ஒன்று இருக்கிறதே
தவறு என்று தெரிந்தாலும் சொல்ல முடியாத
நிலையை அது ஏற்படுத்தி விடுகிறது...

முன்னேற்றம்...

என்று எமது சமுதாயம் இளையோரை மதிக்கிறதோ
அன்றேதான் நம்மவர்கள் வான் வீதி வலம் வரலாம்
இளைஞரது ஆற்றல்கள் இலைமறைவாய் இருக்கும் வரை
முன்னேற்றம் என்றதொரு பாதையை நாம் காண போவதில்லை...

ஆண்...

நிலவென்றான் உயிரென்றான்
நெருங்க முதல்!
சுவையென்றான் தேன் கனியென்றான்
இணைந்த பின்னால்!
விஷமென்றான் தேள் என்றான்
கை கழுவியபின்!
நரகமென்றான் தோல்வியென்றான்
பிரிந்த பின்னே...

நாம்...


பிரயாணக்களைப்பின் போது சற்று இளைப்பாற
நிழல்தேடி இவ்வுலகில் உட்கார்ந்தவர்கள் நாம்
இதனை மறந்து இங்கேயே என்றும்
ஆட்சி நடத்தலாமென
அகங்காரம் கொள்ளாதீர்கள்...

பெண் குழந்தை...

பெண் குழந்தையை எந்த தகப்பனும்
குழந்தையாக பார்ப்பதில்லை
தன் அம்மாவாக தான் பார்க்கிறான்...
PAKEE Creation