Saturday, September 12, 2009

இப்படிக்கு உங்களை சந்திக்க சிந்திக்க ஒருவன்


என் உள்ளத்தின் ஆழத்தில்
உறங்கிக் கிடக்கின்றன
பல கனவுகள்.

உயிரின் அடி ஆழத்தில்
ஏக்கம் என்னும் நதி
பெருக்கெடுத்தோடுகின்றது.

எதையோ தொலைத்து
எதையோ தேடியபடி
வீதிகளின் ஓரங்களில்
விரைவுப் பயணங்கள்

விதியின் விளையாட்டால்
வீணாகும் என் வாழ்நாட்களை
எவரால் மீட்க முடியும்?

வாழும் நாட்கள்
தருகின்ற வலியை
யாரால் தாங்கமுடியும்?

எப்பொழுதும்
வானத்தை நோக்கியபடியே
வாசம் செய்கின்றேன்

என் சிறகுகள்
உடைந்து போனாலும்
நினைவுகள் ஏனோ
உயரவே பறக்கின்றன.

விழிகளைத் திறந்தபடிதான்
தூங்குகின்றேன்
விழி மூடும் பொழுதெல்லாம்
விழித்திருக்கின்றேன்

எனக்கும் சிறகுகள் முளைக்கும்
என்ற நம்பிக்கையில்
புதைந்து கிடந்தாலும்
புதையலாகவே கிடக்கின்றேன்.


இது எனது நண்பன் அஜய் என்பவரால் எழுதபட்டது

வாழ்வதற்கே வாழ்க்கை...


இந்த உலகம் உனக்கு
சிறையல்ல
நீதான் கைதியாய்
வாழ்கிறாய்

*

நீ
மண்ணுக்காக போராட
தயங்குகிறாய்
ஆனால்
ஒவ்வொரு விதையும்
மண்ணோடு போராடியே
மரமாகிறது

*

வியர்வை சிந்தாத
உன்னாலும் மை சிந்தாத
பேனாவாலும் எதையும்
சாதித்திட முடியாது

*

தடை தாண்டி ஓடிக் கொண்டிருப்பவனுக்கு
தடைகள் கண்ணுக்குத் தெரியாது
நீ நினைப்பது போல வாழ்க்கை
ஒன்றும் மரதன் ஓட்டமல்ல அது
தடைதாண்டும் ஒட்டாமே

*

பெருமை என்பது
உன்னைவிட
திறமைசாலிக்கு நீ
கைதட்டுவதில் அல்ல
அவனையும் உனக்காக
கைதட்ட வைப்பதுதான்

*

இந்த
உலகம் பூந்தோட்டமல்ல
நீ வளர தண்ணிர் ஊற்ற
இந்த உலகம் பெருங்காடு
நீயாத்தான் வளரவேண்டும்

*

உனக்கு
நண்பன் இருக்கிறானோ
இல்லையோ உனக்கு எதிரி
இருக்க வேண்டும்

ஏனெனில்
உன்னிடம் அணைக்கும் சக்தியைவிட
உன்னிடம் எதிர்க்கும் சக்தியையே
நான் அதிகம் எதிர்பார்க்கிறேன்

*

யாரு உன்னை உறிஞ்சி
எறிந்தாலும் முளைத்து வா
பனங்கொட்டையாய் அதில்தான்
உள்ளது தனித்தன்மை

*

யாருக்காகவும் கண்ணீர்விடு
யாரும் துடைக்க வருவார்கள்
என்பதற்காய் கண்ணீர் விடாதே

*

உன்னில்
வளரும் நகத்தையும்,
முடியையும் வெட்ட
மறப்பதில்லை நீ

ஆனால்..
நீ வளர மறந்தால்
இந்த உலகமே உன்
கழுத்துக்கு கத்தியாகும்

*

வாழ்க்கையில்
மிதக்க கற்றுக் கொள்ளாதே
நீ இறந்தால் தானாகவே
மிதப்பாய்

நீந்தக் கற்றுக்கொள் அதுவே
நீ கரைசேர உதவி செய்யும்

*

தோல்விகள் என்பது உன்னை
தூங்க வைக்க பாடும் தாலாட்டு
அல்ல
நீ நிமிர்ந்து நிற்பதற்கான
தேசிய கீதம்

*

குட்டக் குட்ட
கல்லாகாதே
குட்டக் குட்டக்
சிலையாகு

*

வாழ்க்கை என்பது
ஒரு புத்தகம்
அதில் ஒரு பக்கம்
மட்டும் வாழ்க்கையல்ல

ஒவ்வொரு
பக்கங்களானதே
வாழ்க்கை

*

உன் பேனாவைக் கூட
மூடிவைக்காதே அதை
திறக்கும் வினாடிகளில் கூட
நீ எழுத நினைத்ததை
மறந்துவிடக் கூடும்

**** PAKEE ****
PAKEE Creation