Wednesday, December 25, 2013

என் எதிர்காலத்தை...

நான் மற்றவர்கள் போல் என் எதிர்காலத்தை பற்றி
கவலைப்படுவது இல்லை
ஆனால்
நான் கடந்து வந்த பாதையை மட்டும்
எப்போதும் நினைச்சு பார்த்துகிட்டு இருப்பேன்...

சில பேரின் மனம்...

சில பேரின் மனம்
கஸ்ரப்படுகிற மாதிரி நடந்து கொள்வதுக்கும்
காரணம் உண்டு

கொல்லன் பட்டறையில் இரும்பை
பழுக்க காய்ச்சி அடிக்கிறானே
ஏன்?
இரும்பின் மீது அவனுக்கு கோவமா இல்லை
அப்பிடி செய்தல் தான்
பயனுள்ள கத்தியாகவோ சுத்தியாகவோ மாறும்
என்பதுக்காக...

எல்லோருமே...

வாய் விட்டு சிரிக்கும் எல்லோருமே
இதயம் திறந்து சிரிக்கிறார்கள் என்று
நம்பிவிடக்கூடாது
அப்பிடி நம்புகிற குணம் நம்மிடம்
இருப்பதால் தான்
நாம்மோடு இருந்து கொண்டே
நமக்கு குழி பறிக்கிறார்கள்...

புகழ்ச்சி...

பொன்னுக்கும் போதைக்கும் பெண்ணுக்கும்
இல்லாத ஆளை மயக்கும் சக்தி
புகழ்ச்சிக்கு உண்டு...

என்ன வாழ்க்கைடா...

அன்பு என்னும் சொல்
வெறும் அலங்கார சொல் ஆகி விட்டது
காட்சிக்கு அளிக்கப்படும் மரியாதை
கடமைக்கு அளிக்கப்படுவதில்லை
பொய்யான விளம்பரத்திற்கு கிடைக்கும் புகழ்
மெய்யான உழைப்பிற்கு இல்லை
வெறும் பேச்சுக்கு அளிக்கப்படும் பட்டமும் பதவியும்
உண்மையான தொண்டுக்கும் சேவைக்கும் கிடைப்பதில்லை...

வாதிப்பவன் & சாதிப்பவன்...

ஒரு விஷயத்தைப்பற்றி வாதிப்பவன் 
ஏற்றுக்கொள்வான்
ஆனால்
சாதிப்பவன் ஏற்றுக் கொள்ளவேமாட்டன்...

ஒன்றுமில்லை...

ஒன்றுமில்லை என்ற சொல் 
ஒரு ஆணிடம் இருந்து வந்தால் 
அதற்கு அர்த்தமும் ஒன்றுமில்லை தான்
ஆனால் 
அதே ஒன்றுமில்லை என்ற வார்த்தை
ஒரு பெண்ணின் வாயில் இருந்து வந்து விட்டால்
அதற்குள் எண்ணிலடங்காத விஷயங்கள்
அடங்கி இருக்கிறது...

Monday, December 2, 2013

காதல்...

எல்லா காதலும் கல்யாணத்துல
முடியனும்னு நினைக்கிறதல தான்
இங்க யாராலயும்
கல்யாணத்துக்கு அப்புறம்
காதலிக்க முடியுறதில்லை...

காதலும் குழந்தையும்...

மனசுல சுமக்கிற காதலும்
வயித்துல சுமக்கிற குழந்தையும்
வெளிய வந்தால் தான் சந்தோசம்
இல்லை என்றால்
உயிரையே குடித்திரும்...

காதல்...காதல் வர வரைக்கும்
விடாம துரத்தனும்
அதுவே காதல் வந்துட்ட
விட்டு கொடுத்து வாழனும்...

மனிதனுடைய அந்தஸ்தை...


ஆடையினால் மனிதனுடைய அந்தஸ்தை
தெரிந்து கொள்ளலாமே தவிர
அவனுடைய உள்ளத்தை
தெரிந்து கொள்ள முடியாது
வெளி வேஷத்தை கண்டு
எதையும் தீர்மானிக்க கூடாது...

விதி...விதினா எனக்கு என்னனு தெரியாது
எங்க அம்மாதான் அதைப்பற்றி
அடிக்கடி சொல்லுவாங்க
இன்னைக்கு சாதரணம சின்ன ஆளா இருக்கிறவங்க
திடிர்னு நாளைக்கு பெரிய ஆளாகிடுரங்க
யாருக்கு எது எது எப்ப எப்ப நடக்கும்னு
தெரியாதுனு சொல்லுவாங்க
எனக்கு சில விஷயங்கள் நடக்கும் போது
அம்மா சொன்ன பல விஷயங்கள்
கண்ணுல கண்ணீரா ஞாபகம் வரும்...

என் நிழல்...இருட்டு வெளிச்சத்தில்
என் நிழலையே
நான் பார்த்து
பயந்த நாட்கள் அதிகம்...

அரவணைப்பு இல்லாமல்...பெற்றவங்க அரவணைப்பு இல்லாமல்
அவங்க இல்லாமல் வளர்த்த பிள்ளைகள்
உலகத்தை சீக்கிரம்
புரிந்து கொள்கிறார்கள்...

கதை...

பல பேர் கதை சொல்றதுல கெட்டிக்காரர்கள்
அவங்க சொல்ற கதையை கேட்கும் போது
அத நேர்ல பார்க்கிற மாதிரி இருக்கும்
அந்த கதைல இருக்கிற
சம்பவங்களும் காதபாத்திரங்களும்
நம்மகிட்ட பேசுற மாதிரி ஒரு உணர்வு
ஏற்படும்
பல முறை அந்த உணர்வை நான் உணர்த்து இருக்கிறேன்...

நாக்கு...

அரையடி நாக்குக்கு
மகிழ்ச்சி
கொடுப்பதற்காகவே
பலவாறு பேசவேண்டி இருக்கிறது...

Monday, November 18, 2013

பெண்கள்...பெண்கள்
தேவையில்லாமல் சிரிக்கவும் கூடாது
காரணம்
இல்லமால் அழவும் கூடாது...

ஆண்டவன்...வாருங்காலத்தை பற்றி யோசியுங்கள்
கடந்த காலத்தை திரும்பியே பார்க்க கூடாது

அதற்காக தான்

ஆண்டவன் முகத்தை முதுகு பக்கம் வைக்கமால்
முன் பக்கமா படைச்சு இருக்கான்...

Sunday, November 3, 2013

உன் காதலன்...கவலைகள் என்னை
சூழ்த்திருக்கும் நேரங்களிலும்
அலை மோதும் குழப்பத்திலும்
நீ வேண்டும்
நான் நானாக இருக்க
நீ வேண்டும்
என் கருப்பு வெள்ளை கனவுகளில்
வந்து போகும் கலா தாரகையே
எனக்கு என்றென்றும்
நீ மட்டுமே வேண்டும்
உன் நிறைவான பதிலையும்
உன் முகம் கட்டும் வெளிச்சத்தையும்
எதிர் பார்த்து காத்திருக்கும்
உன் கனவு காதலன்
வலிக்கும் கண்ணுக்கு
மருந்தாய் வந்து உன் முகம் காட்டாயோ
என் இதயத்தில் உன் பெயர் தான்
என் நெஞ்சத்தில் காதை வைத்து கேளு...

Saturday, October 26, 2013

அம்மா...


நான் இறந்தால்
உங்களுக்கு வேறு பிள்ளை உண்டு


அம்மா

நீங்கள் இல்லாமல் போன
எனக்கு வேற தாய் இல்லை...

என்னுடைய அழகான நாட்கள்...பழைய நினைவுகளை மறக்கவே முடியாது
சில விஷயங்கள நினைச்ச அழுகை வரும்
சில விஷயங்கள் நமக்கு சிரிப்பை ஏற்படுத்தும்
ஆனால்
அழக்கூடிய விஷயங்கள் தான் நிறைய இருக்கும்
என்னுடைய அழகான நாட்கள்
நான் சின்ன பையனா இருந்தப்போதான்...

காலக் கரையான்கள்...


சிறு வயது புகைப்படங்களில்
ஒட்டிக்கொண்ட சிரிப்பையும், சந்தோசத்தையும்
காலக் கரையான்கள்
ஒரு ஓரமாய் அரித்துக் கொண்டே இருக்கின்றன...

தற்கொலை...


என் வாழ்க்கையில் பல
நேரங்களில் துன்பம் தங்காமல்
தற்கொலையைப் பற்றி
சிந்தித்ததுண்டு...

இதுதாண்டா அம்மா...
மகனே நடக்க ஆசைப்பட்டாய் 
நடை வண்டி வாங்கி கொடுத்தேன்

படிக்க ஆசைப்பட்டாய்
பள்ளிக்கு அனுப்பி வைத்தேன்

பட்டம் பெற ஆசைப்பட்டாய்
கல்லூரிக்கு அனுப்பி வைத்தேன்

நீ விரும்பிய பெண்ணை
மணம் முடிக்க ஆசைப்பட்டாய்
திருமணமும் செய்து வைத்தேன்

இப்பொழுது கூட

நீ விரும்பினாய் என்பதுற்காக
முதியோர் இல்லத்தில் வாழ்கிறோம்...

நாம் எல்லாம்...நாயின் பிறந்தநாளை
நடிகை கொண்டடிக்கொண்டு இருக்கும் போது
நாமெல்லாம் நடிகையின் பிறந்தநாளை
கொண்டடிக்கொண்டு இருக்கிறோம்...

Saturday, August 3, 2013

மண்ணுக்கு வேண்டும்...
உரம் மண்ணுக்கு வேண்டும்
இரத்த உரம் வேண்டாம்

மதங்கள் மண்ணுக்கு வேண்டும்
மதச் சண்டைகள் வேண்டாம்

சாமிகள் மண்ணுக்கு வேண்டும்
போலிச் சாமியார்கள் வேண்டாம்

விஞ்ஞானம் மண்ணுக்கு வேண்டும்
அழிக்கும் விஞ்ஞானம் வேண்டாம்

தொழிற்சாலை மண்ணுக்கு வேண்டும்
இயற்கையை அழிக்கும் தொழிற்சாலை வேண்டாம்

தொழிலாளிகள் மண்ணுக்கு வேண்டும்
குழந்தை தொழிலாளிகள் வேண்டாம்

கல்வி மண்ணுக்கு வேண்டும்
பணத்திற்குக் கல்வி வேண்டாம்

மகாத்மாக்கள் மண்ணுக்கு வேண்டும்
கோட்சேக்கள் இங்கு வேண்டாம்

குழந்தைகள் மண்ணுக்கு வேண்டும்
ஆனால் அநாதைகள் வேண்டாம்

மரணங்கள் மண்ணுக்கு வேண்டும்
ஆனால் தற்கொலைகள் வேண்டாம்...

Thursday, July 25, 2013

தெரியவில்லையா உனக்கு?..தூரத்து நிலவில் கூட
மலையும் மண்ணும் தெரிகிறதாம்
தொட்டுவிடும் தூரம்தான்
என் மனசு
தெரியவில்லையா உனக்கு?..

எஸ்.எம்.எஸ்...ஸ்வீட்... சாக்லேட்
ஐஸ்கிரீம்... முத்தம்
எதுவும் கிடைப்பதில்லை
அழகான
பெண்ணின் தம்பிக்கு.

கடிதத்தின் இடத்தை
எஸ்.எம்.எஸ் பிடித்த பிறகு...

உன்னையும் உன் சிரிப்பையும் தவிர...எப்போதோ
தொலைந்தவையெல்லாம்
ஏதோ ஒன்றைத் தேடும்போது
கிடைத்து விடுகின்றன
உன்னையும்
உன் சிரிப்பையும் தவிர...

தேவதாஸாகிப் போனேன்...


பணக்காரிகளை மட்டுமே
காதலிக்கும் இந்த
சமூகத்தில் ஒரு
குணக்காரியை தேடியலைந்து
தேவதாஸாகிப் போனேன்...

உயிரே... உயிரே...என்னை நீ
ஏற்றுக்கொள்ளும் வரை
நான் வாழப் போவதுமில்லை
சாகப் போவதுமில்லை
ஆம்
நீ தரும் குழப்பம்
என்னை வாழ விடுவதில்லை
உன் கண்கள்
என்னை
சாக விடுவதுமில்லை...

என் நினைவு கொள்ளை அளவு இருக்கிறது உனக்கு...


உனக்கு
உள்ளூர என் நினைவு
கொள்ளை அளவு இருக்கிறது
ஆனால்
என்னைக் கண்டால்
அது உன்
இமைக்குள் ஒளிகிறது...

துன்பம்...


துன்பத்தைவிட அதிகத்
துன்பமானது துன்பம்
வந்துவிடுமோ என்கிற அச்சம்...

அப்பா...அன்னையர் தினத்திற்கு
அம்மாவுக்கு பரிசளிக்க
அப்பாவிடம் வாங்கினேன்
வேட்டியில் முடிந்திருந்த
வியர்வை பணம்.

அம்மா பத்து மாதங்கள்
தன் கருவரையில் சுமந்தாள்

நீயோ உன் உயிர் உள்ளவரை
உன் நெஞ்சில் சுமந்தாய்

கருவரையில்லாமல் வாழலாம்
இதயம் இல்லாமல் வாழ முடியுமா?..

புதையாது காதல்...ஒவ்வொரு முறையும்
நான் மாறாத காதலெனும்
கயிறு கொண்டு
உன்னைத் தூக்கும்போதெல்லாம்
அவநம்பிக்கைச் சகதியில்
நீயாகவே விழுகிறாய்

உன் பயத்தை
வாழ்க்கை தந்தது
என் துணிவை
காதல் தந்தது
நிச்சயம் ஜெயிக்கும் காதல்...

முயற்சியில்லாத ஆசை...


ஆசையில்லாத முயற்சி
அசட்டுத்தனமானது
முயற்சியில்லாத ஆசை
ஆபத்தானது...

உன்னை நீயே...


மற்றவரோடு
உன்னை நீ ஒப்பிட்டுப்
பார்த்துக் கொள்கிறாயா
அப்பிடியானால்
உன்னை நீயே
அவமதித்துக் கொள்கிறாய்...

சவால்...தன்னோடு
போட்டி போட்டு ஓடி வர
மற்ற குதிரைகள்
இருப்பதால் தான்
ஒவ்வொரு குதிரையும்
வேகமாக ஓடுகிறது...

Saturday, July 13, 2013

மறக்க முடியவில்லை...என்னை வேணும்னாலும்
நான் மறந்திருவேன்

என்னவளை மறக்க முடியவில்லை...

Thursday, July 4, 2013

விழிவெட்கத்தை...வெட்கப்பட்டு
முகம் மூடாதே
ஒரு முறை
பார்த்து கொள்கிறேன்
உன் விழிவெட்கத்தை...

புண்ணிய மலராகின்றன...சாலையோரம்
உதிர்ந்த பூக்கள்
புண்ணிய மலராகின்றன
தேவதை உன்
பாதம்பட்டவுடன்...

தேவதை மொழி...தாய்மொழி
தெரியுமெனக்கு
தேவதை மொழி
அறிந்து கொண்டேன்
உன்னால்...

அவள் கண்கள்...தொலைவேன் எனத்
தெரிந்தே தொலையுமிடம்
அவள் கண்கள்...

திருமணம் குழந்தை...திருமணம்
புரியாமல் ஒரு
புதிர்...

குழந்தை
எப்போதும் உண்மையாய்
சிரிக்கும் உலக அதிசயம்...

காதல் காதலி...காதல்
என் கையெழுத்தையே
அழகாக்கிய அதிசயம்

காதலி
கடந்து போகும் தென்றல்...

அம்மா அப்பா...அம்மா
என்னை விட
என்னை அதிகம் நேசிப்பவள்!


அப்பா
பாசத்தை மீசைக்குள்
ஒளித்து பாசாங்கு செய்பவர்..!

கண்ணாடியே நின்றுவிடுகிறது...கண்ணாடியை
எங்கு பார்த்தாலும்
நான் நின்றுவிடுகிறேன்
அவளை எங்கே
பார்த்தாலும் கண்ணாடியே
நின்றுவிடுகிறது...

Tuesday, June 4, 2013

அவள் பிரிவால்...மழையில் நனைந்த
பட்டாம்பூச்சியின்
சிறகாய் கனக்கிறது மனது
அவள் பிரிவால்...

மயிலிறகு...வாழ்க்கை என்பது திறந்த புத்தகம்
அதில் காதல் என்பது
மனதை மயக்கும்
மயிலிறகு...

காதல்...காதல் கைகூடினால் கல்யாணம்
கைதவறினால் காவியம்...

Friday, May 10, 2013

வாழ்வு...


கனவு கண்டா 'நிஜம்
மாதிரியே இருந்துச்சு'னு பயந்துக்கறதும்,
நிஜத்தை 'கனவு மாதிரி
இருந்தது' என
வியந்துக்கறதுமாய்
இருக்கிறது வாழ்வு...!

துயரங்களுக்கும் ஆசைகளுக்கும் எப்போதும் பஞ்சமில்லை மனதில்...


எப்போது கடக்கும் என நினைக்க சில துயரங்களுக்கும்
எப்போது நடக்கும் என நினைக்க சில ஆசைகளுக்கும்
எப்போதும் பஞ்சமில்லை மனதில்...

புன்னகை...


என் வலிகளை மறைக்க
என்னை விட
என் உதடுகள் பழகிவைத்துள்ளது
புன்னகை...

அம்மா...


சாப்பிட மறந்து விட்ட வே(லை)ளைகளின் முடிவில்
பசியாய் நினைவுக்கு வருவாள் அம்மா...

பெண்ணே...


முப்பொழுதும் உன் கற்பனையில் திரிந்தவனை
பரதேசியாய் மாற்றியவள் நீ பெண்ணே...

சொர்க்கம்...


சொர்க்கம் என்பது சிறுவயதில்
அம்மாவோடு படுத்து உறங்கிய நாட்கள்...

நட்புக்குள் பிரிவுகள் நிரந்தரம் அல்ல...

நட்புக்குள் பிரிவுகள் நிரந்தரம் அல்ல
நம்மை நாம் உணரவே
சில தடவை பிரிவுகளை நாம் விரும்பி ஏற்கிறோம்...

வாழ்க்கையே ஒரு நாடக மேடை...

வாழ்க்கையே ஒரு நாடக மேடை - அதில்
நாம் கஷ்டப்பட்டாலும்
பிறரை ரசிக்க வைக்க
நடித்துதான் ஆகனும்...

காதல் , கண்ணீர்...

இன்பம் துன்பம் இரண்டும் தருவது காதல்
உண்மையான காதலின் சாட்சி கண்ணீர்...

மறக்க நினைப்பதில்லை...

நமக்கு அருகில் இருந்தால் அருமை தெரிவதில்லை
தொலைவில் இருந்தால் மறக்க நினைப்பதில்லை...

நன்றி இறைவா...பலரது வாழ்க்கை
அவரது இஷ்டத்தில் நகர்கிறது
எனது வாழ்க்கை பல கஷ்டத்தில் நகர்கிறது
வலிகள் தந்த இறைவனுக்கு நன்றி சொல்லி வாழ்த்துகிறேன்
இவ் சின்ன வயதிலேயே வாழ்க்கையை புரியவைத்தமைக்கு...

வாழ்க்கை என்னும் ஓட்ட பந்தயத்தில்...வாழ்க்கை என்னும் ஓட்ட பந்தயத்தில்

எல்லோரும் ஓட வேண்டி தான் இருக்கிறது
சிலர் விருப்பட்டு ஓடுகிறார்கள்

பலர் ஓடியே ஆகனும் என்னும் கட்டாயத்தில் ஓடுகிறார்கள்
அதில் நானும் ஒருவன்...

வாழ்க்கையும் ஒரு தழும்புதான்...வாழ்க்கையே ஒரு நாடகம்தான் என்று சொல்வதினால் தான்
அனைவரும் நம் கஷ்டத்தை கூட மிகவும் ரசித்து பார்க்கிறார்களோ.
பார்க்கும் நம் கஷ்டங்கள் கூட அவர்களுக்கு காட்சிகளாகவே தென்படுகின்றனவே தவிர
நம் காயங்கள் தெரிவதில்லை தெரிந்தாலும்
அது காய்ந்து போய்விடும் என்றுதான் எண்ணுகிறார்கள்
அவர்களுக்கு என்ன தெரியும்
அந்த கஷ்டம் காயத்தோடு நிற்கவில்லை
தழும்பாகிதான் போனது என்று...

காதல்...உலகில் வாழ்கிற அனைவரையும்
தழுவி செல்லும் தென்றல் தான்
காதல்...

வாழ்க்கையோடு ஓடியாக வேண்டும்...


எல்லா பிரச்சனைகளையும்
விட்டு நான் எங்கேனும் ஓடினாலும்
என்னை அழைத்துக் கொண்டுதானே
ஓடியாக வேண்டும்..!?

மரண வலி...

அன்பை மறுதலிக்கும் போது
பல நூறு மரண வலி வந்து செல்லும்...

நீ...நீ 
என் மனதிலிருந்த 
செடியைப் பறித்துப் போயிருக்கலாம்
ஆனால் 
வேரின் வாசனை 
முளைத்துக்கொண்டுதான் இருக்கும்...

வாழ்க்கை...ஏதோ ஒரு சில தவறுகள்
நம் பல சரிகளை அடிமையாக்கி
ஆண்டு விட்டு செல்வதற்க்கு மறுபெயர் தான்
வாழ்க்கை...

நேசிப்போம்...இல்லை எனக் கூற ஏதுமே இல்லை
என் பகுதிக்கவிதைகளை
யாரோ தொடர்கிறார்கள்
என் மறைவிற்குபிறகு
யாரோ வரப் போகிறார்கள்

ஒன்றை இழந்ததும்
ஒன்று கிடைக்கிறது
ஜனனம் மரணம்
சுழற்சி நிற்காது
இருக்கும் வரைக்கும்

இருப்போரை நேசிப்போம்
நேசதேசத்தில்
என்றைக்கும் இல்லை
நிபந்தனைகள்...
PAKEE Creation