Sunday, September 27, 2009

எப்படிச் சொல்வது...


பெண்ணே!
என் காதலை உன்னிடம்
எப்படிச் சொல்வது?

காதலுடன் பேசக்
காட்டாற்று வெள்ளமாய்க்
கரைபுரண்டு வந்த கவிதைகள் உன்
கண்களைக் கண்டதும் கானலாகின.

சொல்ல நினைத்துத் துடித்தவை
சொப்பனத்தில் கண்டனவாய்க் கலைந்து விட்டன.

ஒத்திகை பார்த்து வந்த வசனங்களும் உன்
ஓரவிழிப் பார்வைக்கு முன்னே ஓடியே விடுகின்றன.

கண்டவுடன்
கதவுக்குப் பின் மறையும் உன்னைக்
காண மனது துடித்தாலும்
பண்பாடு தடுக்கிறது;
என் பாடு சொல்ல வழியில்லையே?

சொல் பெண்ணே!
என் காதலை உன்னிடம்
எப்படிச் சொல்வது?

நம்பிக்கையின் அலட்சியமே...


நீ
விலகமாட்டாய் எனும்
என்
நம்பிக்கையின் அலட்சியமே
நீ
விலகிவிடக் காரணம்

ஒரே ஒரு சந்தேகம்...


இருட்டுக்குள்
ஒளிர்கிறீர்கள்
நீயும்,
உன் கை
மெழுகுவர்த்தியும்.
ஒரே ஒரு சந்தேகம்
யாருக்கு
யார்
ஒளி தந்தது ?

உன் கண்ணுக்குள் தான் காதலில்லை...


காதலுக்கு
கண்ணில்லை
என்பதெல்லாம்
பொய்
உன்
கண்ணுக்குள்
தான்
காதலில்லை.

நீ இருந்தால்...


எது
இல்லாமலும்
என்னால்
இருக்க
இயலும்,
நீ
இருந்தால்.

உன்னை...


உன்னை
அதிகமாய்
நேசிக்க
நேரம்
தேடுவதனாலேயே
என்னை
நேசிப்பதை
நிறுத்தி விட்டேன்.

நான் உன்னை நேசிக்கிறேன்...


உன்னைப் பற்றி
எத்தனை கவிதை எழுதினாலும்
அவை
அழகாய் தோன்றுவதில்லை எனக்கு.
என் நண்பர்களோ
அக் கவிதைகளை
பலமாய்
பாராட்டுகிறார்கள்.

அவர்கள் என்னை
நேசிக்கிறார்கள்.
நான் உன்னை நேசிக்கிறேன்.

உன்னை மட்டுமே பிடிக்கிறது...


மழையில்
நனைந்தால்
ஜலதோஷம்
பிடிக்குமாம்
எனக்கென்னவோ
மழையில்
நனைந்தாலும்
உன்னை
மட்டுமே பிடிக்கிறது
.

உணர்கிறேன்...


ஒவ்வொரு
கவிதை
முடிவிலும்,
உன்னை
இன்னும்
அதிகமாய்
நேசிப்பதாய்
உணர்கிறேன்.
அதற்காகவே
இடை விடாமல்
எழுதத் துடிக்கிறேன்.

காதல் தோல்விகள்...


இனியவளே!
காலை
கதிரவன்
கண் விழிக்கும்
முன்னே
காளையவன்
கண் விழிக்க...
சொந்தம்
கொண்ட
தென்றல்
இல்லாத
சோக சோலையிலும்
அவன்
மோகத்தில் இருக்க...
எதுகையும்
எதார்த்தமாக
மோனையும்
மொத்தத்தில்
அவன்
கவிதைகளில் இருக்க...
ஆனால்
கட்டும்
புடவையாக
காதலை
(ஏ)மாற்றும்
காதலிகள் இருக்க...
உலகம்
நிற்கும் வரை
காதல்
தோல்விகள் இருக்கும்!

குமுறி வெடிக்கும் இதயம்...குமுறி வெடிக்கும் இதயம்

சாவை நோக்கிஅழைக்கிறது

நெருப்பு நீரில் குளித்தெழும்ப

மனம் என்னை இழுக்கிறது

நினைத்துக்கூடப் பார்க்கவில்லை

நிம்மதி தந்தவள்

நிறுத்திவிடுவால் என்று

காற்று நின்று இதயம் அடித்து

கண்கள் மூடும்வேளை

கானல் நீராய்ப்போன வாழ்க்கை

குறுகிப்போய்விடும் என் உடல் கருகிப்போய்விடும்

உடல் எரியும் சாம்பல் மேட்டில்

ஊளை இட்டு நாய் வாலை ஆட்டும்

காதல் நிலைத்தது எனக்காட்ட

காலால் கிளறும் என் இதயத்தை

ஆப்பொழுது தெரியும்

நாய்க்குத்தெரிந்தது

எனக்குத்தெரியவில்லையே என்று

காதல் வலி...


என் வாழ்வின் சந்தோசம்
என் காதல் என்றிருந்தேன்
உன் அழகை ரசித்தேன் - அதைவிட
உன் உள்மனதை புரிந்து கொண்டேன்

நீயோ! என்னை ஸ்பரிசத்துக்காக
ஏங்குபவன் என்றாய்
உன் வார்த்தை வலியை விட
என்னை காதல் வலி கொல்கிறது

ஞாபகங்கள் துரத்துகின்றன
தவிர்க்க முடியவில்லை
இன்றும் கானல் நீராய்,
என்னுள் என்னை ஏமாற்றுகின்றாய்

நித்திரை இன்றி, கனவுகள்
தொலைந்த இடம் தெரியவில்லை
உணவு இன்றி, பசி
தொலைந்த இடமும் தெரியவில்லை

மாரி மழை பொழிந்தாலும் - என்னை
சோக மழை நனைக்கிறது – ஆனால்
உன் எண்ணங்களை கரைக்காது
காப்பதற்கு என் நெஞ்சில் திடம் இருக்கிறது…

காதல் வலி...


காதல் என்ற ரோஜா
உன் கைகளை மட்டுமல்ல
இதயத்தையும் குத்திவிட்டதை
இதயம் திறந்து சொல்லாமலே
இனம் கண்டு கொண்டேன் நான்

அமைதியாக இருக்கும் உனக்குள்
ஒரு காதல் சமாதி கொண்டிருப்பதை
பார்த்த மருகணமே உணர்ந்துக்கொண்டேன்
குழந்தையின் பசி பெற்றவள் அறிவாள்
காதலின் வலி நானும் அறிவேன்!

இரத்தம் சிந்தா போர் இல்லை
பிறந்து அழாத குழந்தை இல்லை
விரல் சுடாத தீயும் இல்லை
கண்ணீர் இல்லா காதலும் இல்லை
தோல்வி என்பது நிலையும் இல்லை!

உண்மை...


என்
இறுதி ஊர்வலத்திலாவது
என்னை
காதலித்தது
உண்மை
என்று சொல்
அந்த
வார்த்தை
நிச்சயம்
என்னை
சொர்க்கம் கொண்டு செல்லும்.

என் இத‌யத்தில்....


நீ வந்த போதும்
என் இத‌யத்தில் நுழைந்த போதும்
தடுக்க நினைக்கவில்லை காதலை
நீ போகின்ற போதும்
இதயம் வேகுகின்ற போதும்
என்னால் அடக்க முடியவில்லை
சோகத்தைவார்த்தைகள் கொடுக்கும் வலியை
அறிந்து கொண்டேன்..!
நீ நம் காதலை
மறந்துவிடச் சொன்ன போது..!!


நீ சொன்னது கூட
எனக்கு வருத்தமில்லை...
என்னை நேசித்த உன் இதயத்தை
எங்கே கழற்றி வைத்தாய்
என்று மட்டும் சொல்லிவிட்டு செல்....!உன்னால்
சந்தோஷங்கள் என்றால்
என்ன என்று
அறிந்து கொண்டேன்!


உன்னால்
துக்கங்கள் என்றால்
என்ன என்று
அறிந்து கொண்டேன்!

உன்னால்
சுகங்கள் என்றால்
என்ன என்று
அறிந்து கொண்டேன்!

உன்னால்
வலிகள் என்றால்
என்ன என்று
அறிந்து கொண்டேன்!


உன்னால்
காதல் என்றால்
என்ன என்று
அறிந்து கொண்டேன்!


உன்னால்
பிரிவு என்றால்
என்ன என்று
அறிந்து கொண்டேன்!

என் இதயம் துடிப்பது உனக்காக,
அதை நீ ஏன் புரிந்து கொள்ள மறுத்தாய்..?
என் சுவாசத்தில் கலந்திருப்பது நீயடி,
அதை நீ ஏன் உனர மறுத்தாய்...?

என் இதயம் இருப்பது உன்னிடம்,
அதை நீ ஏன் காயப்படுத்த நினைக்கிறாய்..?

நான் கண்ணீர் சிந்துவது உன்னால்,
அது தான் நீ விரும்புவது என்றால் சொல்லிவிடு..!
வாழ்னால் முழுவதும் கண்ணீரில் உருகி விடுகிறேன்..!

என்னை இழக்கப் போகிறேன்
உன்னை இழக்க முடியாமல்..!

நீயாக வந்தாய்
நான் நீயாக மறினேன்
நீயாக விலகுகிறாய்
முடியாதடி உன்னை பிரிய
அடுத்த நிமிடமும்..!

நான் வாழ்வது சந்தேகமடி உயிரே
இன்னுமொரு நிமிடம் நான் வாழ்வது
நீ என்னிடம் வருவாய் மீண்டும் என்று
உயிரே உயிர் வாழ்கிறேன் உனக்காகவே…!

மனசு மட்டும்
மாறவே இல்லையே
மறுபடியும் மறுபடியும்
உன்னையே கேட்கிறது

உன்னைத் தேடும் என் இதயம் தினம் கண்ணீர் வடிக்கின்றது
உன் எண்ணங்களை சுமந்த என் மனம் சோகங்களால் வாடி நிற்கிறது
ஒரு முறையாவது உன்னுடன் பேசக்கிடைக்காதா என்று - உன்
விழிகள் சந்திக்காத போதும் வார்த்தைகளாவது
எனை ஆறுதல்படுத்தாதா என.

என்னவளே ஏன்
என்னை மறந்தாய்
என் இனியவளே ஏன்
என்னை பிரிந்தாய்

எங்கிருந்தாலும்
நீ வாழ்கவென
வாழ்த்திட என்
உதடுகள் அசைந்தாலும்

உள்ளம் ஊமையாய்
தினமும் அழுகிறதே
உணர்வுகள் வெடித்து சிதற்கிறதே
உயிரும் விடை பெற துடிக்கிறதே

உறக்கம் மறந்து போனதே
இரக்கம் காட்ட மாட்டாயா
இதய வாசல் திறப்பாயா..?

பழகியகாலம் பசுமையாய் உள்ளத்தில்,
பிரிவின் துயரம் வலியாய் நெஞ்சத்தில்....

சிலர் இறந்து போனால் மனது மறந்து போகும்
சிலர் மறந்து போனாலே மனது இறந்து போகும்

முன்பு,
சாலையை கடக்கும் போது கேளாமல்,
என் கரம் பிடித்து வந்த என் தோழியே….
இன்று,
வாழ்க்கையை கடக்க, நான் கரம் நீட்டியும்,
என் கரம் பற்ற யோசனை ஏனோ…..

மழையில் நான் நனையவில்லை,
ஈரம் காய்ந்து போவதற்கு…..
மணலில் நான் விழவில்லை,
உதறி விட்டு நடப்பதற்கு…..
களவையும் கற்று மற என்றனர்….
காதலை கற்றேன், மறப்பதெப்படி?

நேசிக்கும் முன் யோசி
நேசித்தப்பின் யோசிக்காதே அது
நேசித்த இதயத்தையே காயப்படுத்தும்

வாழ்க்கையெனும் பேருந்தில் ஏறிச் செல்ல…
நாம் எடுத்துக் கொண்ட பயணச்சீட்டு….. காதல்.

அதை பாதியிலேயே கிழித்தெறிந்து விட்டு
என்னை இறக்கி விட்டுச் சென்று விடாதே!

உன்
கோபங்களை
தாபங்களை
மன்னித்துவிடுகிறேன்
முத்தத்தால் நீ முடிப்பதானால்!

என் கண்ணீர்
துளிகளால்;
உனக்கு வைரமாலை!

காய்வதேயில்லை!
நீ தந்த
முத்தங்களின் ஈரம்!

பார்வை விட்டு
போன பின்னும்
என்னில் சிறகடிக்கும்
உனக்கான எண்ணங்கள்
பெய்த பிற்பாடும்
மழைக்கின்ற
மரம் கணக்காய்.

மறக்கவே முடியவில்லை...


கண்கள் மூடி தூக்கத்தை தேடினேன் முடியவில்லை
கண்ணுக்குள் தெரிவது
நீ அல்லவா?

நீதான் என்னை
மறந்து விட்டாயே
இல்லை...இல்லை..
நம் காதலை..
மறுபடியும் ஏன்
வருகிறாய்? என்
நினைவுக்குள்.

மறக்கவே முடியவில்லை
உன்னையும் நம்
காதல் நினைவுகளையும்
மறந்துவிட
அது என்ன நினைவுகளா?
இல்லை..
என் வாழ்வின் நியங்கள்.

நானும் உன்னை
மறந்திடலாம்
என்றென்னி இறைவனிடம்
வேண்டி நின்றேன்
அவனும் என்னை மறுத்துவிட்டான்

மறுபடியும் வேண்டுகிறேன்
என் வாழ்வில்
நீ வேண்டும் இல்லையேல்
உன் நினைவில்
சிறிதேனும் எனக்கு வேண்டாம்.

ஏமாற்றங்களின் நெடும் பயணம்...


தொடரும் ஏமாற்றங்களின்
நெடும் பயணத்தை
மீண்டும் புதுப்பித்திருக்கிறாய்
நீ………..

விடு
குட்டக்குட்ட குனியும்
என் இயலாமையை
சொல்ல வேண்டும்

வரங்களை சாபங்களாக்கிய
தேவதை உனக்காகவா
நான் கடுந்தவம் புரிந்தேன்…?

எனக்கு நிழல் தரும்
என்றெண்ணிய உன்
வார்த்தைகள்
சுட்டெரிக்கும் சூரியனாய்
பொசுக்குகிறது
என்னையும்
மனசையும்…..

இறுதியாக கேட்டுச் செல்...


வேண்டும் என்று
எமை விரட்டி வரும்
வேண்டாத வேதனைகள்!

ம்…!
பிரிவுகள் என்பது
உனக்குள்ளும் எனக்குள்ளும்
இறுதிவரை இல்லை
என்றுதானே இருவரும்
இறுமாப்புக் கொண்டிருந்தோம்…?

இதற்குள் எப்படி
இருவரையும் மீறி
இப்படி ஒரு பிரிவு…?

ஓ…!
என் மனதை
புரிந்து கொள்ளாமல்…

பூ மீது
ஆணி அடிக்கும்
வலியை தந்து
பிரிந்து செல்கிறேன் என்கிறாய்!

ம்… சரி
பிரியப் போகும் இவ்வேளையில்
ஒன்று சொல்கிறேன்
இதையும்
இறுதியாக கேட்டுச் செல்!

பிரிவு என்பது
எனக்கும் உனக்கும் மட்டும்தான்
நம் காதலுக்கு அல்ல

ஊமைக் குயிலடி நான்...


கடல் வெள்ளம் போல் புகுந்து
கனவுகளை வளர்த்தவளே

காந்தப் பார்வையாலே
கண்களுக்குள் இனித்தவளே

தவறு நான் செய்யவில்லை
தண்டனை நீ தருகின்றாய்

சிறைக்குள் நான் துடிதுடிக்க
சிரித்து நீ போகின்றாய்

ஊமைக் குயிலடி நான்
உள்ளுக்குள் அழுகின்றேன்

ஓரிரு வார்த்தைளோ
மெல்ல மெல்ல கொல்லுதடி

என்
உதிரத்தால் எழுதி வைக்கும்
உண்மையடி பெண்ணே

நீ போகுமிடமெங்கும்
பாதி உயிரோடும்
என் பயணம் தொடரும்

புத்தகப் பையுக்குள்ளே
பாவத்தை சுமப்பவளே

இறந்து நான் போன பின்னே
என் இதயத்தை அறுத்துப்பார்

இதயச் சுவர்களில்
எழுதப்பட்டிருக்கும் உன் பெயர்

அப்போதாவது
நீ என்னைக் காதலி.

புரியவில்லை...


காதல் விளையாட்டு
உனக்கும் எனக்குமா..?
இல்லை...
இன்னும் புரியவில்லை
எனக்கு....

என்றோ ஓர் நாள்
காணாமல் போகும்
என் இதயம்...
அப்போ
சொல்வாயா - நீ
காதலித்ததை...

சோகங்களையும்
சுகமாக சுமக்கிறேன்
நீ விட்ட
மூச்சுக் காற்றுக்காக...
அப்போது தான்
என் மூச்சு வாழும்
சில காலம்...

என் இதயம் இயங்கிக்
கொண்டிருப்பது
நீ போடும்
பிச்சையடி...
பிச்சையை நிறுத்தி விடாதே
நின்று விடும் - என்
சுவாசம்...

எல்லோருக்கும்
சாவு ஒரு நாள் தான்
ஆனால்
எனக்கு மட்டும்
ஒவ்வொரு நாளும்...

நீ
என்னை பிரிந்தாலும்
என் மூச்சை பிரிக்காதே
நான்
தொட்டுக்கொள்ளும் - உன்
பாதங்கள் நடந்த
மண்களால் பூசிக்கின்றேன்
மீண்டும் ஓர்
ஜென்மம் வேண்டும் - உன்
பாதங்களை நிரந்தரமாக
தொட்டுக் கொள்ள...

காதல் சோகம்...


புயலாய் வந்தாய்... பனியாய் உருகினேன்
மேகமாய் மறைந்தாய்... குழத்தையாய் அழுகிறேன்.

கண்ணீரும் கவிதையுமாய் நான்
கணவனோடு நீ....

காதல் வந்ததால் கவலை வந்ததா
கவலை வரவே காதல் செய்தாயா?

முதல் காதலும் நீ
முழுதாய் காதலை முடித்தவளும் நீ.

இன்று மாற்றான் மனைவியாய் இருக்கிறாய்
உன்னை நினைத்து என் காதலை
மாசாக்கிக் கொள்ள விருப்பமில்லை

காலம் நம் கையில் என்று காதலித்தோம்
இன்றோ காலத்தின் கையில் நாம்

கலக்கம் வேண்டாம் கவலையும் வேண்டாம்
கணவனை மட்டும் நினைத்து கண்ணியமாக வாழ்

இந்த கவிதையோடு
என் காதலையும் முடித்துக் கொள்கிறேன்.

மனம்....


நினைப்பது
நீ
இல்லை
என்று
தெரிந்தும்
உன்னை
மட்டுமே
நினைக்கும்
என்
பொல்லாத மனம் .....

நினைவு...


பிரிவு
என்பது நீ
என்னிடம் விட்டு
சென்றது...
நினைவு
என்பது நான்
உன்னிடம் பெற்று
கொண்டது.
PAKEE Creation