
புயலாய் வந்தாய்... பனியாய் உருகினேன்
மேகமாய் மறைந்தாய்... குழத்தையாய் அழுகிறேன்.
கண்ணீரும் கவிதையுமாய் நான்
கணவனோடு நீ....
காதல் வந்ததால் கவலை வந்ததா
கவலை வரவே காதல் செய்தாயா?
முதல் காதலும் நீ
முழுதாய் காதலை முடித்தவளும் நீ.
இன்று மாற்றான் மனைவியாய் இருக்கிறாய்
உன்னை நினைத்து என் காதலை
மாசாக்கிக் கொள்ள விருப்பமில்லை
காலம் நம் கையில் என்று காதலித்தோம்
இன்றோ காலத்தின் கையில் நாம்
கலக்கம் வேண்டாம் கவலையும் வேண்டாம்
கணவனை மட்டும் நினைத்து கண்ணியமாக வாழ்
இந்த கவிதையோடு
என் காதலையும் முடித்துக் கொள்கிறேன்.


No comments:
Post a Comment