Monday, July 30, 2012

மனிதா...



மனிதா நான் யாரு நீ யாரு
சொந்த ஊர் ஏது அத எல்லாம் தூக்கி போடு
பண்போடு நல்ல அன்போடு
நீ முன்னேறு நீதான் ஸ்டார்
வாழ்க்கை ஒரு புதிர் போல
எது எப்ப நடக்கும் தெரியாது
கடவுள் தந்த அழகிய வாழ்க்கையில்
நல்லது நடக்கும் நம்புங்கள்
முயற்சி இல்லாமல் பலன் ஏது?
குறைகளை சொல்வதினால் தடுமாற்றம்
உனக்குள் ஒருவன் யார் அதை தேடு
அதை நீ அறிந்தால் தான் வரலாறு
போட்டி இல்லாமல் வெற்றி ஏது?
பொறமை கொள்வதால்தான் தகறாரு
நமக்கு தெரியாது பல உண்டு
கற்றது கையளவு
நீ என்னும் தேடு
வா நண்பா மர்மமான வாழ்க்கையில்
வாழ்த்துதான் பார்க்கலாம்...

றோஜாவே...



றோஜாவே...
நீ காதலிக்க தெரியாத பெண்ணின் கூந்தலில்
இருப்பதை விட..!
காதலிக்க தெரிந்த ஆணின் கல்லறையில்
இருக்கலாம்...

கவனம் தோழர்களே...



கைய விட்டு நழுவிய கண்ணாடியும்,
கைய விட்டுட்டு போன காதலும்,
திருப்பி கைக்கு வந்தால்
நமக்கு தான் ஆபத்து...

Saturday, July 28, 2012

கவிதைகளை...


கவிதைகளை அனைவரும் அமைதியாக
தான் வாசிப்போம்
ஏன் தெரியுமா
அது ஒரு உடைந்த இதயத்தின் அழுகை..!

உன் பாசம்...



ஏழை துடிப்பது இரண்டு நேர
சாப்பாடாவது வேண்டுமென்று
நான் துடிப்பது என் மரணம்
வரை உன் பாசம் வேண்டுமென்றே...

ஏன் யாருக்கும் தெரியாத மாதிரி மனசை படைக்கிற...


நான் எப்பவுமே கோவிலுக்கு வந்த
உன்னை திட்டுறதுக்கு தான் வருவேன்
ஆனா இப்ப உனக்கு நன்றி சொல்ல வந்து இருக்கேன்
அந்த பொண்ணு சொன்ன வார்த்தை மட்டும்
முதல் சொல்லி இருந்தால்
நான் இந் நேரத்துக்கு உயிரோட இருந்திருக்க மாட்டேன்
நான் யாரு எப்பல்லாம் மறக்கிறானோ?
அப்ப எல்லாம் நீ சரியாய் ஞாபகபடுத்திர
எல்லாருக்கும் தெரியுர மாதிரி முகத்தை படைக்கிற நீ
ஏன் யாருக்கும் தெரியாத மாதிரி "மனசை" படைக்கிற...

Thursday, July 26, 2012

உயிரின் உயிரே...




மெழுகாய் என்னை உருக வைக்கும் அழகிய ஒளியே
ஒளி தரும் விளக்கினிலே திரியாக நானிருப்பேன்
என் உடலை உருக்கி நெய் தருவேன்
நீயும் வாழ்த்திடவே
என் உயிரின் உயிரே
விழி இரண்டும் உறங்கிய பின்
உயிர் வருமே உன்னைத் தேடி...

Thursday, July 5, 2012

பிரிவு...

எங்களுக்கு பிடித்த ஒன்றை 
இழக்கும் போது தான்
சோகத்தோடு 
கவிதைகளும் பிறக்கின்றது...

நீயும் ஒருத்திடி...


பலருடன் பழகலாம் - ஆனால்
சிலரைத்தான் நெஞ்சில் வைத்து
அன்பு கொள்ள முடியும்
அந்த வகையில் நீயும் ஒருத்திடி
உன் நினைவுகளோடு வாழ்கிறேன்...
PAKEE Creation