Friday, February 26, 2021

காதல்...



காதல்
தன் எல்லைகளில் மலர்களை நட்டு
மத்தியில் சூனியத்தை வைத்துள்ள
போலி நந்தவனம்...

உண்மை...



நமக்கு எல்லாரும் இருக்கிறார்கள்
என்னும் போலியான
நம்பிக்கையை விட...
நமக்காக யாரும் இல்லை
என்கிற "உண்மை"
அதிக தன்னம்பிக்கை தருகிறது...

வாழ்க்கை வாடகைக்கு உண்டு...



என் வாழ்க்கையின்
ஒவ்வொரு அத்தியாயமும்
கண்ணீரால் கழுவப்படுவதால்
வாழ்க்கை
ஈரமாய்...
வெறுமையாய்...
வாடகைக்காய்...
காத்துக்கிடக்கிறது
வாழ்க்கை வாடகைக்கு உண்டு...

கண்களால் தீண்டும் இன்பம் உயிரில்...



உயிருக்கு உருவம் உண்டு
அந்த உயிரையும் என்னவளிடம்
நான் கண்டதுண்டு
கைகளால் தீண்டும் இன்பம்
உடலில்
கண்களால் தீண்டும் இன்பம்
உயிரில்...

அந்நியதேசம்



காற்றில் அடிபட்டு வந்து
ஒட்டிக்கொள்ளும் காகிதம் போல்
ஊரையும் உறவையும் பிரிந்து
உரிமையேதும் இல்லாத
ஓர் தேசத்தில் வந்து
ஒட்டிக்கொண்டுவிட்டேன்...

ஓராயிரம் உயிர்கள்...


பூமித் தாயின் ஓர் கோணத்தில்
செல்வத்தென்றல் வீசுகின்ற
போதிலும் கூட
மறு திசையில் வறுமைப்புயலோடு
போராடி துடிதுடித்து
உயிர் துறந்து போகின்றன
ஓராயிரம் உயிர்கள்...

எத்தனையாண்டுகள் கடந்த போதிலும்...


வல்லரசுகளின் பலப் பரீட்சைக்குள்
சிக்குண்டு சீரழிந்த தேசங்கள்
சமாதானப் போர்வை போர்த்தி
நிழல் யுத்தம் நடந்தேறும்
பூமிப்பாகங்கள் - என
அனைத்து மண்ணும்
கண்ணீரில் குளித்து
துடைக்காமல்தான் கிடக்கின்றன
எத்தனையாண்டுகள் கடந்த போதிலும்...

Tuesday, February 2, 2021

வாழ்க்கை ஒரு அதிசயமான கட்டுரை



வாழ்க்கை ஒரு அதிசயமான கட்டுரை
அது காற்புள்ளிகள் மூலம்தான்
நீண்டு கொண்டிருக்கின்றது
சந்தோசம்,
வெற்றி,
திருப்தி என்பன
வினாக்குறிகள் மீது
தொங்கிக் கொண்டிருப்பவை...

விறகு...



என்னதான் தெரிந்தாலும்
என்னிடம் இருக்கும் விளக்குகளை விடவும்
தூக்கி எறிந்த விறகுகளிடமிருந்துதான்
வாழ்க்கைக்கு இங்கே வெளிச்சம் கிடைக்கிறது...

காதல்...


விடியலை விபச்சாரம் செய்த
பனிக்கூட்டங்களின்
ரகசியத்தை
சேவலின் கூவல்
மொழி பெயர்ப்பதைப்போலானது
எனது காதல்...

என் காதல்...

 


வயதுக்கு வந்த மலர்களை
சூரியன் வந்து முத்தமிட
உடைந்து போகும்
பருக்களைப் போலல்ல
என் காதல்...

உன் நினைவு




என் மூளை முழுக்கப் படர்ந்து
உயிர் தடவும் உன் நினைவுகளை
நாள்தோறும்
கவியாத்துக் கொண்டிருக்கிறேன்...
PAKEE Creation