Thursday, July 21, 2011

எழுதிப்பாருங்கள்...

எழுதிப்பாருங்கள் என்னை போல
காதலில் தோற்று....
எழுதுவது பாவம்
ரசிப்பது புண்ணியம்..!

நீயும் நானும் சேர்ந்து வாழ்ந்தால் தீமை கூட நன்மை தான்...

சுடிகொண்ட சுடர் கொடி யார் தெரியுமா
சுடிதார் அனிகின்ற நீ தானடி.

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை தான் - ஆனால்
நீயும் நானும் சேர்ந்து வாழ்ந்தால் தீமை கூட நன்மை தான்...

காதலித்துப்பார் வலிகள் ஒன்றும் புதிது இல்லை...

கணப்பொழுதே மலரில் உட்கார்ந்து போகும் வண்ணத்துப்பூச்சிபோல
நீ வந்து போனாலும்
உன் தடங்களை சற்றே ஆழப்பதித்து சென்றுவிட்டாய்
அதனால்தான் வலிக்கிறது இன்னும்....
ஆனாலும்
வலிகள் ஒன்றும் புதிது இல்லையே எனக்கு,,,,
காதலித்துப்பார் வலிகள் ஒன்றும் புதிது இல்லை...

ஒரு ஆண் மதிப்படைகிறான் எப்போது தெரியுமா?..

ஒரு " ஆண் " மதிப்படைகிறான் ...
எப்போது தெரியுமா...?
ஒரு " பெண் " அவனுக்காக
கண்ணீர் சிந்தும்போது தான்...

உனக்காக கண்ணீர் சிந்துவார்கள்...

நீ வாழும் போது
எத்தனைபேரை சிரிக்க வைக்கிறாயோ
அவர்கள்தான்
நீ இறந்தபிறகு
உனக்காக கண்ணீர் சிந்துவார்கள்...

உன் பாதச் சுவடுகள்...

உன் பாதச் சுவடுகள்
பதிந்த மணல் கொண்டும்
உன் விரல் பட்ட
மரக்கிளைகள் கொண்டும்
உன் வெட்கத்தில்
வழிந்த வர்ணம் கொண்டும்
நமக்கான வீட்டைக் கட்டுவோம்...
அதில்
காற்றும் புகாத அளவுக்கு
காதலை நிரப்பி வைப்போம்...

பிப்ரவரி மாதத்திற்க்கு கூட ஆயுள் குறைவு...

காதலர் தினம்
இருப்பதானால் தானோ
என்னவோ
தெரியவில்லை
“பிப்ரவரி “
மாதத்திற்க்கு
கூட ஆயுள் குறைவு...

சாமி கூட உன்னை மட்டும் தான் பார்க்கிறது...

பாஸாக வேண்டும் என்று
கோவில் சுவற்றில் இருவருமே
பேர் எழுதினோம்!
ஆனால்
நீ மட்டும் பாஸானாய்
சாமி கூட உன்னை மட்டும் தான்
பார்க்கிறது...

என் வாழ்வின் இனியவளே...

உன் குரலை கேட்டாலே
உதிரத்தில் அலையடிக்கும்..
உன் குரல் போதும்..
உயிரின் அணுவும் அதிரும்
எந்த பாட்டு கேட்ட போதும்
உந்தன் நினைவே நெஞ்சில் மோதும்..
என்ன வேலை செய்த போதும்
உன் குரல் மட்டும் எனக்குள் கேட்கும்
என் காதும் உனக்கு கருவறைதான்..
உன் குரலைச் சுமக்கும் பலமுறை..
என் கண்ணீர் துளிகள் உன் விரல் தேடி வழிகின்றன…
என் கனவுப்பூக்கள் உன் குரல் கேட்டு விரிகின்றன…
உன்னோடுபேசத்தானே நெருங்கி வருகிறேன்..
என் மறுதலித்து என் நெஞ்சை நொறுங்க செய்கிறாய்
என் வாழ்வின் இனியவளே...

மீண்டும் ஒருமுறை என் முன் வந்துவிடாதே...

மீண்டும் ஒருமுறை என் முன் வந்துவிடாதே...
ஒருவேளை
மறுபடியும் உன்னை காதலித்தாலும் காதலித்து விடும்
என் பாழாய்ப்போன மனது...

நீ என்னை இழ‌ப்பாய் என்று தெரியாம‌ல்...

உனக்காகவே
எல்லாரையும்
இழந்தேன்

நீ என்னை இழ‌ப்பாய்
என்று தெரியாம‌ல்...

என் ஆத்மா சாந்தி அடையும்...

பெண்ணே !
எனக்காக கண்ணீர் சிந்தாதே !
நீ அழுதால்
என்னால் தாங்க இயலாது

சேர்த்துவை ! உன் கண்ணீரை

என்றோ ஒரு நாள்
என் மரண செய்தி வருமே ! அன்று
எனக்காக ஒரு சொட்டு !
ஒரே ஒரு சொட்டு ,கண்ணீர் சிந்து

அது போதும் எனக்கு
உன் மனதிலாவது
நான் வாழ்ந்தேன் ,என்ற நிம்மதியுடன் !
என் ஆத்மா சாந்தி அடையும்...

மலர்களின் நடுவே புகைப்படமாய் நான்...

உன்னிடம் என் காதலை சொன்னேன்,
நீயோ அதை நிராகரித்தாய்,
என்றாவது ஒருநாள் உனக்கு என்மீது
காதல் வரும்,
அன்று உனை பார்த்து நான் சிரித்துக் கொண்டிருப்பேன் மலர்களின் நடுவே
புகைப்படமாய்….

வா பெண்ணே வா...

வானத்தில் மேகத்தோடு மேகமாய்
நாமும் ஒன்றாய் கலந்து விடுவோம்
அங்கிருந்து நம்சோக கண்ணீரை
மேகக்கண்ணீருடன் சேர்த்து மழையாய்
இந்த பூமியை நனைத்திடுவோம்
வா பெண்ணே வா….

என் வாழ்கை துணையாக வருவாயா...

பெண்ணே நீ யார்
உன் விழியில் பூர்வ ஜன்ம உறவே கண்டேன்.
உன் முகம் தெரிந்ததே
முகவரி தெரியவில்லை,
முகவரி தெரிந்தபின்
என் மனதை உனிடம் கூற முடியவில்லை,
கனவினில் வருகிறாய்,
நேரிலும் வருகிறாய்,
ஆனால் வாழ்வென்றும் என் வாழ்கை துணையாக வருவாயா...

உன் நினைவோடு...

கண்ணே!
என்மீது கொஞ்சமேனும்
கருணையிருந்தால்
உன் கரங்களால் என்னை
கருணைக்கொலை செய்துவிடு!
துடிக்கும் உயிர்
நிம்மதியாகத் தூங்கட்டும்!
உன் நினைவோடு...

என் கண்ணீரை...


மண்ணில் வாழும்
மலர்கள் யாவும் வாழ்ந்திட
தண்ணீரை தானடி கேட்கிறது...
நீ மட்டும் ஏனடி கேட்கிறாய்
என் கண்ணீரை...

உயிர் துறந்த என் இதயமும் தான்...

என் விரலிடுகில்
சாம்பலாகிக் கொண்டிருப்பது
சிகரெட் மட்டுமில்லையடி
உன் பிரிவால்
உயிர் துறந்த
என் இதயமும் தான்...

தெரியவில்லையடி எனக்கு...

பிறருக்கு
கொடுத்தே பழகியதால என்னவோ
உன் இதயம் வாங்கத்
தெரியவில்லையடி எனக்கு...

என்ன தான் தெரியும் உனக்கு?..

பணத்தின் மதிப்பு தெரியுமா...?
தெரியாது...

என் அன்பின் மதிப்பு தெரியுமா...?
தெரியாது...

என்ன தான் தெரியும் உனக்கு...?
நீ என்னுடன் இருந்தால் இந்த உலகமே என் காலடியில்
என்பது மட்டும் தெரியும்...

என்ன கேள்வி வரும்?...

கடவுளைத் திட்டி எழுதியபோதுஎன்னிடம் கேட்கப்பட்டது
'‘நீ நாத்திகவாதியா?’
அப்புறம் பெண்ணின் வலிசுமந்த ஒரு கவிதைக்கு
‘ஆண் பெயரில் எழுதும் நீ பெண் தானே?’
வன்கொடுமையை எதிர்த்து பேசியதும்
‘நீ தலித்தா?’
காதல் கவிதையெழுதும்போதெல்லாம்
‘உண்மையைச் சொல், நீ காதலிக்கிறாய்தானே?’
இப்பொழுது மரணம்பற்றிய கவிதையெழுதிக்கொண்டிருக்கிறேன்.
என்ன கேள்வி வரும்?...

மரணம் நிச்சயம்...


உன்னை நேசித்திருந்தால்
மறுக்கவோ, மறக்கவோ செய்திருப்பேன் ....
ஆனால் நான் உன்னை சுவாசிக்கிறேன் ...
மறுத்தாலோ, மறந்தாலோ,
மரணம் நிச்சயம்...

மழையே...

மழையே...


உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு
ஏன் தெரியுமா,
நான் இருக்கிற எந்த நிலையிலும்
எம் மேல அவ்வளவு உரிமையோடு வந்து
விழுகிறது நீ மட்டுந்தான்!..

நீண்ட நாள் உயிர் வாழவேண்டுமென்ற ஆசையே வருகிறது...

உயிர் அடங்கும் அந்த நாளில்
நினைவுகள் அடங்கிவிடும்...

நினைவுகள் அடங்கும் அதே நாளில்
உன் நினைவும் அடங்கிவிடுமென்று
நினைக்கும் போதுதான் அன்பே...

நீண்ட நாள் உயிர் வாழவேண்டுமென்ற
ஆசையே வருகிறது!...

உன்னோடு நான் வருவதற்கு...

உன் நிழலோடு
யூத்தமிடுகிறேன்....
உன் நிழலாய் உன்னோடு
நான் வருவதற்கு...
.

என் காதலும் அழுகிறது...


தன் பசியை தாயிக்கு
உணர்த்த அழுத்திடும்
குழ்ந்தையை போல தான்
என் காதலும் அழுகிறது
உன்னை பார்த்து ....

பெண்ணே...


பெண்ணே
உன்னோடு நான் இருந்த இருக்கையில்
தனிமையில் நான்
என் தோளிலே தலை சாய்ந்து

நீ அன்று கூறியதை
நினைத்து பார்க்கிறேன்
சாவு நம்மை
பிரிக்க நினைத்தாலும்
நாம் காதலைவிட்டு
பிரியக்கூடாது என்று கூறியதை

கூறிய நீயே
காதலைவிட்டு நீ பிரிந்ததேன்

காதலைவிட்டு நான் பிரியவில்லை
காதலும் என்னைவிட்டு பிரியவில்லை
பிரிந்தது நீ மட்டுமே

நீ பிரிந்தாலும்
நீ கூறிய வார்த்தை
என் காதலோடு கலந்துவிட்டதடி
சாவு என்னை பிரிக்கும் வரை
காதலைவிட்டு நான் பிரிவதும் இல்லை...

நீ என் காதலியானால்...

நீ நெருப்பானால்
எறிய விறகுகளாய்
இறப்பேனடி

நீ மழையானால்
கரைய மேகங்களாய்
திரள்வேனடி

நீ காற்றனால்
அடிபட மரங்களாய்
முளைப்பேனடி

நீ ரோஜாவானால்
உன்னை தாங்க
முட்காம்புகலாய் பிறப்பேனடி
நீ என் காதலியானால்..

என் நிழல் என தொடர்வாய் என நினைத்தேன்...





என் நிழல் என தொடர்வாய் என நினைத்தேன்
என் பகையென மாறினாய்....!

பாசமாய் இருப்பாய் என நினைத்தேன்
அது வேசம் என சொல்லாமல்
சொல்லிவிட்டு போனாய் ....!

நான் நீயாகவும் நீ நானாகவும்
இருப்பாய் என நினைத்தேன்...
ஆனால் என் உயிர் வாங்கி போக வந்தவள்
நீ என்று அப்போ நினைக்கவில்லையே ....!

பேசத் தெரிந்தும் ஊமையாய் மனதுக்குள்
குமுறி குமுறி கதறுகிறேன்...

பேதை இவன் தவியாய் தவிக்கிறான் ...!

வரும் கால வாழ்வை எண்ணி துடியாய் துடிக்கிறான்...

தேவதைகள் பூமிக்கு வருவதில்லை என்று..

உன்னை பார்க்காத எவனோ
சொல்லியிருக்கிறான்!
தேவதைகள் பூமிக்கு
வருவதில்லை என்று...

என் சிரிப்பை மட்டும் திருப்பிக்கொடு...


ஒவ்வொரு முறையும்

மறக்கத்தான் நினைக்கிறேன்

கன்னங்களில் வழியும் கண்ணீரை

துடைத்த பின்…

காதலை எந்த

வடிவில் கண்டாலும்

மறுபடியும் கண்ணீர்

வருவதை ஏன் என்னால்

தடுக்க முடிவதில்லை?

மெமரி கார்டில்

என்னை அழித்துவிட்டாய்

என் மெமரியை

என்ன செய்ய முடிந்தது உன்னால்?

யாருக்கெல்லாமோ கால் செய்தேன்

உனக்கு மட்டுமே காதல் செய்தேன்.

கால் கொண்டு எட்டி உதைத்தாய்

அட, எட்டி உதைத்தாலும்

உன்னிலே ஒட்டிக்கொள்ளும்

ஒட்டுண்ணியாய்

வேடிக்கை காட்டுகிறது பார் என் காதல்.

நீ வாழ தொடங்கிவிட்டாய்

உன் வாழ்க்கையை..

அதில் தவறேதும் இல்லை

என் வாழ்க்கையையை

ஏன் என்னிடம் தர மறுக்கிறாய்?

எடுத்துக்கொள் என்று

இயல்பாக சொல்கிறாய்.

வர மாட்டேன் என

அடம்பிடிக்கும் இதயத்தை

சிலுவையிலா அறைய முடியும்?

அதுவும் சரிதான்.

நேற்று என் இதயத்தை

சிறையில் வைத்தாய்

இன்று சிலுவையில்....

எப்போதும் இல்லாமல்

விழித்திரை இப்போதெல்லாம்

அதிகநேரம் வேலை செய்கிறது.

தூக்கத்தை விடவும்

துடிப்பதைதான் அவைகள் அதிகம்

விரும்புகின்றன போலும்.

கண்ணில் விழுந்த தூசியை

முன்பெல்லாம் ஊதி எடுத்தாய்.

இப்போதெல்லாம் ஊசி கொண்டு

எடுக்கிறாய்..

உணவைக்கூட

இதழிலிருந்து இதழிற்கு

தடம் மாற்றினாய்.

ஏன் உணர்வை மட்டும்

மறுத்து விட்டாய்?

எத்தனை காதல் கடந்து வந்தாலும்

உன் இதயம் மட்டும்தான்

என் காதலுக்கான தாஜ்மகால்.

அங்கே எனக்கு

பள்ளியறை வேண்டாம்

கல்லறையாவது

கட்டிக்கொள்ள அனுமதி கொடு

இறக்கவும் விடவில்லை

இருக்கவும் விடவில்லை

என்னதான் வேண்டுமாம்

உன் நினைவுகளுக்கு?

நான் கொடுத்த எல்லாவற்றையும்

திருப்பி கொடுத்தாய்...

ஒன்றைத்தவிர..

அதை மட்டுமாவது

திருப்பிக் கொடுத்துவிடு.

திருப்பிக்கூட தரவேண்டாம்

ஒரே ஒரு முறை

கண்ணிலாவது காட்டிப்போ..

நீண்டநாள் ஆகிவிட்டது அதைப்பார்த்து..

ஆம். அனைவரும்

என்னிடம் கேட்கிறார்கள்.

தயவுசெய்து

தவணை முறையிலாவது

எனக்கு காட்டு

என் சிரிப்பை.

உன்னைப் பிரிந்த பொழுதுகளில்…


தொலைந்துபோன தூக்கம்

மூடமறந்த இமைகள்

சுவையே இல்லாத உணவு

நிறங்கள் அற்ற மலர்கள்

யாருடனும் பேசப்பிடிக்காத தனிமை

இசையே இல்லாத பாடல்கள்

மலர்களே இல்லாத பூங்காக்கள்

வானவில் இல்லாத மழைநாள்

மழைமேகம் கடந்து போகையில்

தோகை விரித்து ஆடாத வண்ணமயில்

புன்னகை மறந்த முகங்கள்

உன்னைப் பிரிந்த பொழுதுகளில்

என்னை தொடரும் காட்சிகள் இவையே.

நீ மெல்லத் திரும்பும் ஒரு பொழுதில்

இவை எல்லாம் மெல்ல உயிர்பெறும்.

வருவேன் என்றொரு வார்த்தை சொல்.

அத்தனை ஆனந்தமும் மொத்தமாய்

திரும்பி என் நினைவில் புன்னகைக்கும்…


என்ன உலகம்டா காதல் காதல் எல்லாமே பொய்யா...


சற்றே வியந்துதான் போகிறேன்

உன் மனதின் நிறம் மாறும்

குணத்தை எண்ணி....

அளவில்லா ப்ரியங்களுடன்

அணுஅணுவாய் என்னை காதலிக்க

முடிந்த உன்னால் எப்படி இன்னொரு

இதயத்தையும் காதலிக்க முடிந்தது?

நேற்று விளையாட்டாய் உன் கைப்பேசியை

எடுத்துப் பார்க்கையில்தான் என் மனம்

தற்கொலை செய்துகொண்டது.

எனக்கு மட்டுமே சொந்தமான

உன் Sent items' ல் யாரோ ஒருவருக்கு

நீ அனுப்பிய ஐலவ்யூக்களும், உம்மாக்களும்

என்னுள் ஏற்படுத்திய வலியை

உன்னால் உணரக்கூடுமா?

என் குரல் சேமித்து வைக்கப்பட்டிருந்த

உன் ரெக்கார்டிங்கில் இப்போது

இன்னொருவர் குரல்...

உன் தொலைபேசியில் இருந்த என்

அத்தனை புகைப்படங்களும் எங்கே போயிற்று?

உன்னால் பதில் சொல்ல முடிகிறதா?

என் முன்னாலே நீ உன் புதுக்காதலுடன்

சிரித்து பேசுகையில் நொடிக்கொருமுறை

உன் காதலின் நினைவுகளால்

கற்பழிக்கப்படுகிறேன்.

இறைவா என் எதிரிக்கும் வேண்டாம்

இப்படி ஒரு வேதனை.

எனக்கு நிச்சயமாய் தெரிகிறது

உன் ஸ்பரிசங்களும், உன் முத்தங்களும்

இனி இன்னொருவருக்கு தான் சொந்தம் என்று...

மூளைக்கு புரியும் இந்த உண்மையை

மனம் அடம்பிடித்து ஒப்புக்கொள்ள மறுக்கிறது.

உன் வாசம் படிந்த கைக்குட்டை..

உன்னுடன் கண்டு களித்த சினிமா டிக்கெட்..

ஓயாமல் சிரிக்கும் உன் புகைப்படம்..

காதலுடன் நீ வரைந்த கிரீட்டிங் கார்ட்

என உன்னை மட்டுமே நினைத்துக் கொண்டே

இருக்க வேண்டும் என நான் பத்திரப்படுத்திய

உன் நினைவுகள் அனைத்தும் வெறும்

நினைவுச் சின்னங்களாக மட்டுமே இருக்கும் என

சத்தியமாய் நினைக்கவில்லை...

என் வசந்த காலத்தின்

ஒரு பக்கத்தை முற்றிலும்

இலையுதிர் காலமாய் செய்தாய்.

மனம் வலிக்கும் நேரங்களில்

உன் நினைவுகள் மட்டுமே சுகமாய் இருக்கும்.

ஆனால் இன்றோ என் மனவலிக்கு

முழுமுதற் காரணமும் நீயாய்...

அழுவது அவமானச் சின்னம்

என்பது என் கொள்கை.

ஆனால் இன்றோ என் கண்ணீர்

சுரப்பிகள் கூட வற்றிவிட்டன.

தற்கொலை செய்துகொள்வது

கோழைத்தனத்தின் உச்சம் என நினைத்திருந்தேன்.

கண் முன்னே இப்படி ஒரு வலியை

உணர்கையில்தான் தோன்றுகிறது

தற்கொலை பாலைவனத்தில் நீரைப்போல்...

உன் மனதின் கொடூரத்தை தாங்க இயலாமல்

ஒரு நொடியில் மணிக்கட்டை

கூரிய பிளேடால் அறுத்துக் கொண்டேன்.

நீ கொடுத்த வலியைவிட அது ஒன்றும்

வேதனை நிறைந்ததாய் இருக்கவில்லை.

என் காதல் நரம்புகளை அறுத்துவிட்டு,

நீ வீணை வாசிக்கிறாய்.

என் சந்தோஷ சிறகுகளுக்கு தீ வைத்துவிட்டு,

நீ குளிர்காய்கிறாய்.

யாரை நோக்கியோ உன் பார்வைகள்.

குருடாய் போனது என் உலகம்.

யார் பெயரையோ உச்சரிக்க தயாராய் உன் இதழ்கள்,

ஊமையாகிப் போனது என் தேசம்.

என் SMS சேமித்து வைத்திருப்பாய்.

எதற்கு என்று கேட்டால்,

உன் நினைவுகள் வரும் போது

எடுத்து படித்து கொள்ள என்பாய்...

இப்போது உன் Outbox' ல் கூட என் SMS இல்லை.

ஏன் இப்போதெல்லாம் என் நியாபகம்

உனக்கு வருவதில்லையா?

நான் அனுப்பிய

சில காதல் மெசேஜ்களையும்,

படங்களையும் சேமித்து வைத்திருந்தாய்.

சில நொடிகள் சந்தோஷப்பட்டது என் மனம்.

பிறகுதான் தெரிந்து கொண்டேன்

யாரோ ஒருவருக்கு Forward செய்ய அதை

எல்லாம் நீ பத்திரப்படுத்தி வைத்திருக்கிறாய் என்று..

"மனம் மரணமடைந்தது" என்ற ஷெல்லியின்

வார்த்தையை அனுபவித்து உணர்ந்தேன் அன்று..

வாழ்ந்துகாட்டு! வாழ்ந்துகாட்டு

என்று என் உறவுகள் எனக்கு

ஆறுதல் சொல்கின்றனர்.

இனி நான் எத்தனை கோடிகள் சம்பாதித்தாலும்

நீ எனக்கு கொடுத்த அந்த காதலை

என்னால் சம்பாதிக்க முடியுமா?

என்னதான் நான் பென்ஸ் காரிலே வந்து

உன் முன்னால் இறங்கினாலும்

உன் துணையுடன் உன்னை பார்க்க நேர்கையில்

என்னால் சிரிக்க முடியுமா?

வேறு யாரை நான் கட்டி அணைத்தாலும்

அந்த அணைப்பில் உன் வெப்பத்தை

என்னால் மறந்துவிட முடியுமா?

எத்தனையோ அழகான கவிதைகளை

என்னை எழுத தூண்டியது நீதான்.

இன்று துயரங்களையும் சுமக்கும் பக்குவத்தை

எனக்கு தந்து இப்படியும் கவிதைகள் எழுதலாம்

என புதிய அனுபவத்தையும் எனக்கு கற்று தந்தாய்.

உனக்கு நன்றி.

என் பெயர் சொல்லி அழைக்க மறந்து,

யாரோ ஒருவர் பெயரை சொல்லி நீ அழைத்தாய்,

அந்த ஒரு நொடியில் லேசாய் உதடு கடித்து

ஒற்றை வார்த்தையில் "சாரி" என்று

சொல்லிவிட்டு போய் விட்டாய்.

நேற்றே நான் இறந்து விட்டேன்...

எதுவாய் மாறி உன் இதயத்தில் நுழைவது?...



நீ என்னை ஏற்கா

விட்டால் என்ன...

மீண்டும்

மூங்கிலாய் பிறந்து

புல்லாங்குழலாய்

உருமாறி

உன் இதழ் ஸ்பரிசம்

பெறுவேன்

மலராய் பூத்து

உன் கூந்தலில்

அமர்வேன்

மருதானியாய்

உன் விரல்களையும்

சிவக்கச்செய்வேன்

வளையலாய்

உன் கைகளோடு

உறவாடுவேன்

புற்களாய்

உன் பாதம் வருடுவேன்

ஆனால்.....

"எதுவாய்" மாறி

உன் இதயத்தில் நுழைவது???..


PAKEE Creation