Wednesday, January 23, 2013

நீ & நான்...

உனக்குள் நானும்
எனக்குள் நீயும்
இருப்பதை மறந்து
நம்மை நாமே தேடுகின்றோம்
காரணம் இன்றி
உள்ளமோ உனை நினைக்குதடி
உயிரோ தடுக்கிறதே
உறவின் உச்சம் நீ
என்பதை நினைத்து...

நட்பு...ஒன்று என்பது எண்களின் தொடக்கம்
அ என்பது எழுத்துக்களின் தொடக்கம்
அடக்கம் என்பது அறிவின் தொடக்கம்
ஆணவம் என்பது அழிவின் தொடக்கம்
ஆனால்
நட்பு என்பதே வாழ்க்கையின் தொடக்கம்...

Love...ஸ்வரங்களையும் ரதங்களையும்
சொல்லி புரிந்து கொள்ள முடியாது
இசைத்து பார்த்தல் தான் புரியும்
ஆனால் புரிந்து கொண்டேன்
நீ உன் பெயரை சொல்லும்போது...

காதல் விரக்தி...
நான் ஒரு முட்டாள்
ஏமாற்றப்பட்ட பின்பும் அவளுக்காக ஏங்கித்தவிக்கிறேன்
வெந்த பின்பும் உயிர் வாழத்துடிக்கும் மீன் போல
தோற்றுப்போன பின்பும் தெருத் தெருவாய் அலைகிறேன்
அவள் முகம் பார்க்க

காய்ந்து போன சருகு போல
தேய்ந்துபோன வேளையிலும்
போகத்துடிக்கும் உயிர கூட
அவளோடு ஒரு முறை பேசிவிட்டுசெல்லாதோ
என ஏங்கித் தவிக்கிறேன்

அன்றெல்லாம் வெந்து போன இதயத்தில்
இன்றெல்லாம் வித்தியாசமான
அவளின் நினைவுகளால்
சுடு மணலில் மாட்டிக்கொண்ட
மண்புழுவாய் துடித்துக்கொண்டிருக்கின்றேன்

எவ்வளவுதான் என்னை அவள் வெறுத்தாலும்
அவளின் இதயம் எனும் பூஜை அறையின்
எங்கோ ஒரு மூலையில் எனது நினைவுகளும்
உறக்கம் கொள்ளும் எனும் நப்பாசையில்
வழ்த்துகொண்டிருக்கிறேன் அவளுக்காக...

என்னை மறந்து விடு...

தெருவோரம் நீ நடக்க
உன்னோடு நான் நடக்க
நமக்குள்ளே லவ் என்று
ஊரெல்லாம் பேசிச்சிரிக்க
அதைக்கேட்டு
உன் அண்ணன் எனக்கடிக்க
என் அக்கா உனக்கடிக்க
வேண்டாமடி காதல்
நான் உன்னை மறந்து விட்டேன்
நீயும் என்னை மறந்து விடு...

சொல்லப்படாத காதல்...கரைதேடும் அலையாக 
கடல் தேடும் நதியாக
கவி பாடும் குயிலாக
மலை நாடு தாண்டி
நான் வந்தாலும்
உன் மீது நான் கொண்ட காதல்
என்னை தவிர நான் வணங்கும்
கடவுளுக்கு மட்டும் தான் தெரியும்...

அம்மா...கோவில் கருவறையிலே சிற்பம்
என்னை தான் கருவறையிலேயே
சுமந்ததேன்றல் அது நீ தானம்மா

நானே என்னை பாரமாக நினைத்த போதும்
நீ என்னை பாசமாகவே பெற்றுடுத்தாய்
பாரத்திற்கு நான் அடையலாம் என்றால்
பாசத்திற்கு நீயே அகராதி

அறியாத வயதில் உன்னை அழைத்தேன் அம்மாவென்று
அப்போது என் மீது காட்டினா புரியாத அன்பு
அன்பின் உரியது உயர் நிலையென்றால்
அன்பே உருவானது உன் நிலையம்மா...

Sunday, January 20, 2013

என் அவள் மீட்டும் போது...பளுதப் போனா
வயலின் கூட
அழகாக சிரித்து
சுகமான ராகம்
தருகின்றதே
என் அவள் விரலால் அதை
மீட்டும் போது...

Tuesday, January 8, 2013

இதயமெனும் கோவிலில் குடியிருக்கும் தெய்வம் நீ...

என்னுள் பூத்த முதல் கவிதை நீ
எனக்குள் உறைந்த உயிர் நீ
என் சுவாசத்தில் கலந்த காற்று நீ
என் இதயமெனும் கோவிலில்
குடியிருக்கும் தெய்வம் நீ...

என்னை சிதைத்து விட்டாய் பெண்ணே...என் இதயத்தை பாறையாக தான் வைத்திருந்தேன்
நீயோ உளியாக வந்தாய்
சிலையாக வடிப்பாய் என்று நினைத்தேன்
ஆனால் நீயோ
என்னை சிதைத்து விட்டாய் பெண்ணே...

இரட்டை குழந்தைகள்...நீயும் நானும்
இரட்டை குழந்தைகள்
நாம் இதய கருவறையில்...

மறக்க முடியாமல்...என்னை விட்டு சென்ற
உன்னை இன்னும்
காதலித்து கொண்டுதான் இருக்கிறேன்
உன்னை மறக்க தெரியாமல் இல்லை
உன்னை மறக்க முடியாமல்...

பயம்...கடவுளை வழிபட ஆசை தான்
ஆனால்
வழிபடும் அந்த ஒரு
நொடியில் உன்னை மறந்து
கடவுளை நினைத்து விடுவேனோ
என்ற பயம் எனக்கு...

என் கனவில்...ஒரு முறை
நீ
என் கனவில் வரவேண்டும்
என்பதற்காய்
ஒரு ஆயிரம்
தூக்க மாத்திரைகளையும்
நான் சாப்பிட தயார்...

காதல்...நிலாவின் அழகை சொல்லுவதை விட
அதை பார்த்தல் தான் தெரியும்
அதே மாதிரி காதல் பற்றி
சொல்லுவதை விட
காதலித்து பார் புரியும்...

கண் விழிப்பது உன் புகைப்படங்கள்...நான் அதிகாலையில்
எழுந்து கண் விழிப்பது
என்கவிதைகளில் தான்
ஏன்
என்றால் அவைகள் அனைத்திலும்
உன் புகைப்படங்கள்...

என் வாழ்க்கை...எல்லோரும் சொன்னார்கள்
உன் வாழ்க்கை உன் கையில் என்று
அவர்களுக்கு எங்கே
தெரிய போகிறது
என் வாழ்க்கை
உன் வார்த்தையில் உள்ளதென்று...

அம்மா மட்டும் தான்...நான் சிரித்தாலும் சரி
எனக்கு வலித்தாலும் சரி
கண்ணீர் என் அம்மாவின் 
கண்களில் மட்டும் தான்...

உன்னை பார்க்காத நாட்களில்...என்
கண்களுக்கு
இமைகளும் சுமைதான்
உன்னை
பார்க்காத நாட்களில்...

சாதனை...கடவுள் கூட
எதையாவது
சாதிக்க வேண்டும்
என்று நினைத்து தான்
உன்னை
படைத்து இருக்கிறான்...
PAKEE Creation