Wednesday, March 2, 2016

சுதந்திரம்...

நாயும் பூனையும் சுதந்திரமாய் உலவுதல் போல்
மரம் செடிகள் தலை நிமிர்ந்து நிற்பது போல்
மனிதர்கள் எல்லோரும் இப் பூமி எங்கினும்
சென்று வர நிலை வர வேண்டும்
அது தான்யா சுதந்திரம்...

தன்னினத்தை...

தன்னினத்தைத் தாழ்த்தி
வேறு தயவுதனில் வாழ்வது
கண்ணை விற்றுச் சித்திரத்தை
கையிலேந்தும் தன்மையே...

ஞாபகப்படுத்திக் கொள்ளக் கூடாது...

எல்லாம் நடந்து முடிந்து
ஒரு குறிப்பிட்ட வயதைக் கடந்த பிறகு
பல விஷயங்களை மறக்கத்தான் கற்றுக்கொள்ள வேண்டுமே தவிர
ஞாபகப்படுத்திக் கொள்ளக் கூடாது...

சொர்க்கத்தில்...

சேரக்கூடாத பந்தங்கள் சேர்ந்து விடுகின்றன
அவை பிரியக் கூடாத நேரத்தில் பிரிந்து விடுகின்றன
திருமணம் மட்டுமா சொர்க்கத்தில் நிச்சயிக்கப் பெறுகிறது?
மரணமும் கூடத்தான்...

பெரிய எதிரி...

நம் வாழ்வில்
நாம் சந்திக்கக் கூடிய பெரிய எதிரி
நம்மை அதீதமாய் நேசிப்பவரே...

மனிதனின் சக்தி...

கோடை காலத்துக்குப் பின்னால்
வசந்த காலம் வந்தே தீரும் என்பது
கோடையில் புரிவதில்லை
வசந்தம் வந்ததும் தான் புரிகிறது

துன்பங்கள் முடியக்கூடியவையே
சோதனைகள் எதிர்பார்க்கப்பட வேண்டியவையே
அவற்றைச் சந்திப்பதில் தான்
மனிதனின் சக்தி அடங்கி கிடக்கிறது...

சந்திரன்...

சந்திரனை சாட்சிக்கு அழைக்காதீர்கள்
அவன் ஒரு நாள் இருப்பதைப்போல்
இன்னொரு நாள் இருப்பதில்லை
சில நாட்கள் தேய்கிறான்
சில நாட்கள் வளர்கிறான்
நிலையற்றவன்...

விவேகம்...

பெண் விஷயங்களில் குறுக்கிடும் போது
ஆணின் விவேகம் மறைகிறது
ஏனென்றால் பெண்களுக்கு விவேகம் குறைவு
அதுவும் ஒரு ஆண் மீது ஆசை ஏற்படும்போது
விவேகம் மிகக் குறைந்து விடுகிறது
பிடிவாதம் மிஞ்சுகிறது...

ஆசை வைத்த பொருள்கள் அதிகம் இல்லை...

நான் உலகத்தில் ஆசை வைத்த பொருள்கள் அதிகம் இல்லை
ஏதோ ஓரிடத்தில் என்னையும் மீறிப் பாசம் விழுகிறது
ஆனால் ஆசை நிராசையாகி விடுகிறது...

ஆச்சரியம்...

நம்பத்தகாத காரியங்கள் உலகத்தில்
எவ்வளவோ நடக்கின்றன
அப்பிடி நடக்கவிட்டால்
ஆச்சரியம் என்ற வார்த்தையே ஏற்பட்டிருக்காது...

அன்பு...

அன்பு மலரில் இந்த முட்கள் பல
எதற்காகத் தான் முளைக்கின்றனவோ?
எல்லையற்ற அன்பு கிளைக்கும்போது
தொட்டதற்கெல்லாம் சந்தேக முட்களும் கிளம்பி
மனத்தைக் குத்திப் புண்ணாக அடிப்பதில்
விதிக்கு அதிகச் சந்தோஷமிருப்பாதகத் தோன்றுகிறது...

சுகதுக்க உணர்ச்சிகள்...

வாழ்க்கையில் அதிகம் கசப்புத் தட்டிவிடும் சமயங்களில்
சுகதுக்க உணர்ச்சிகள் எதையுமே மனம் வாங்குவதில்லை
அப்படி மனம் மரத்து நிற்கும் சமயங்களில்
கண்கள் உணர்ச்சி ஏதுமின்றி வெறித்துப் பார்க்கும்...

தாய் மனைவி...

பிள்ளையின் கொளரவத்தைப் பார்த்து சந்தோசப்பட ஒரு தாயும்
கணவன் மகிழ்ச்சியைப் பகிர்த்து கொள்ள ஒரு மனைவியும்
இல்லாதவனுக்கு
உலகத்தில் சந்தோசம் எதற்கு? கொளரவந்தானெதற்கு?...

முகஸ்துதி...

தன்னைப் பற்றிய அபிப்ராயங்களை
நேருக்கு நேர் தெரிந்து கொள்ளும்படியான பாக்கியம்
எந்த மனிதனுக்கும் கிடைப்பது அரிது
எவ்வளவு அயோக்கியனைப் பார்த்தாலும்
முகஸ்துதியாகப் பேசிவிட்டு போவதுதானே உலகத்தின் இயல்பு...

விதி..

வாழ்க்கை முறையை நிர்ணயிக்க மனிதன்
பல விதிகளை ஏற்படுத்தியிருக்கிறான்
அந்த விதிகளை மீறினால் தண்டிப்பதற்கும்
பல விதிகளைச் சிருஷ்டித்திருக்கிறான்
ஆனால் இந்த விதிகள் அனைத்தும் யுகத்துக்கு யுகம்
வருஷத்துக்கு வருஷம் மாறிக்கொண்டே வந்திருக்கின்றன
சமூகத்துக்குத் தகுந்த விதிகள் சமயத்துக்கு தகுந்த நீதிகளாக மாறின
பன்மையில் மனித சமூகத்தில் படர்ந்த இந்த விதிகள் ஒருமையில்
அநாதிகலமாகத் தனித்து நின்ற அந்த தலைவிதியை மட்டும் மாற்ற முடியவே இல்லை
கடவுள் எப்பிடி ஒருவனோ அப்பிடியே அவன் கட்டளையான அந்த விதியும்
பன்மைத் தொடரின்றி "விதி" என்ற ஒற்றைச் சொல்லாகவே தனித்து நின்று வருகிறது
மனிதன் வாழ்க்கை இப்பிடித்தான் ஓட வேண்டும் என்று
பரம்பொருள் விதித்த விதி எந்த நிலையிலும் எந்த யுகத்திலும்
ஆடாமல் அரங்காமல் தன்னிஷ்டப்படியே மனிதனைச் இழுத்து செல்கிறது...

இயற்கையின் நியாதி...

ஆண்மகன் கைவசப்பட்ட பெண்
குயவன் கைக் களி மண்ணுக்குச் சமானம்
அவன் இஷ்டப்படியெல்லாம் வளைவாள்
இதுதான் இயற்கையின் நியாதி...

மனிதனுடைய புத்தி...

மனிதனுடைய புத்தி விசித்திரமானது
ஆபத்துக் காலத்தில் இயற்கையாக உள்ள தன் சோம்பேறித் தனத்தையெல்லாம் உதறித்தள்ளி
சுறுசுறுப்புடன் வேலை செய்யும் தன்மை வாய்ந்தது
எப்போர்ப்பட்ட தூங்கி வழியும் மூளையானாலும்
ஆபத்து நெருங்கியவுடன் உயிரால் அறைந்து
எழுப்பப் பட்டுத் தன்னைத்தானே
சாணை பிடித்துக்கொண்டு கூர்மையாகி விடுகிறது...

ஏதோ ஒரு வகையில்...

நாம் மற்றவர்களோடு
ஏதோ ஒரு வகையில் ஒரு நாளிலாவது
ஒற்றுமையா தான் இருக்கிறோம்
இன்பம் துன்பத்திலும் கூட...

வாழ்க்கை...

உலகத்தில பல பேர்
அவங்க அம்மாவோட வாழ்க்கைல இருந்தும்
தன்னோட வாழ்க்கைல இருந்தும்
எதையுமே கத்துகிறதில...

தீய பழக்க வழக்கங்கள் இல்லாதவர்கள்...

அழகான பாம்புகள் விஷத்தோடு இருப்பதைப்போல
வேறு தீய பழக்க வழக்கங்கள் இல்லாதவர்கள்
படுமோசமான ஆதிக்க வெறியர்களாக இருப்பார்கள்

உலகையே ஆழ விரும்பிய ஹிட்லர்
மது அருந்த மாட்டான் , மாமிசம் சாப்பிடமாட்டான்...

பொருட்கள்...

ஓடுகிற வரையிலும்தான் காருக்கு மதிப்பு
நின்னு தள்ளினா கேலிதான்
படாடோபமான பொருட்கள் எல்லாமே இப்படிதான்
ஒழுங்காயிருந்தால் மதிப்பு
ஒழுங்கு கெட்டால் ஊருக்கு நகைப்பு...
PAKEE Creation