Wednesday, March 2, 2016

விதி..

வாழ்க்கை முறையை நிர்ணயிக்க மனிதன்
பல விதிகளை ஏற்படுத்தியிருக்கிறான்
அந்த விதிகளை மீறினால் தண்டிப்பதற்கும்
பல விதிகளைச் சிருஷ்டித்திருக்கிறான்
ஆனால் இந்த விதிகள் அனைத்தும் யுகத்துக்கு யுகம்
வருஷத்துக்கு வருஷம் மாறிக்கொண்டே வந்திருக்கின்றன
சமூகத்துக்குத் தகுந்த விதிகள் சமயத்துக்கு தகுந்த நீதிகளாக மாறின
பன்மையில் மனித சமூகத்தில் படர்ந்த இந்த விதிகள் ஒருமையில்
அநாதிகலமாகத் தனித்து நின்ற அந்த தலைவிதியை மட்டும் மாற்ற முடியவே இல்லை
கடவுள் எப்பிடி ஒருவனோ அப்பிடியே அவன் கட்டளையான அந்த விதியும்
பன்மைத் தொடரின்றி "விதி" என்ற ஒற்றைச் சொல்லாகவே தனித்து நின்று வருகிறது
மனிதன் வாழ்க்கை இப்பிடித்தான் ஓட வேண்டும் என்று
பரம்பொருள் விதித்த விதி எந்த நிலையிலும் எந்த யுகத்திலும்
ஆடாமல் அரங்காமல் தன்னிஷ்டப்படியே மனிதனைச் இழுத்து செல்கிறது...

No comments:

Post a Comment

PAKEE Creation