Wednesday, February 17, 2016

மனிதன் வாழ்வு...

வாழ்க்கையில் மிதமிஞ்சிய கஷ்டம் ஏற்பட்டால்
ஒன்று மனிதன் பண்படுகிறான்
இல்லை நாசமாகி விடுகிறான்
அவனவன் தரத்தைப் பொறுத்த விஷயம் அது
நெருப்பில் வைக்கோல் விழுந்தால்
சட்டென்று பற்றி எரிந்து தீய்ந்து போகிறது
தங்கம் விழுந்தால் முன்னைவிட
அதிகப் பளபளப்பைப் பெற்றுப் பிரகாசிக்கிறது
மனிதன் வாழ்வும் இப்பிடித்தான்...

எனது முதல் காதல்...

வானத்தில் திடிரென ஒரு நட்சத்திரம்
பளிச்சென்று கண்ணுக்குத் தோன்றி மறைந்துவிட்டால்
எப்பிடியிருக்கும் அதே போல தான்
எனது முதல் காதல்...

பெண்மனத்தின் ஆழம்...

பெண் மனத்தை ஆண்பிள்ளை
அவ்வளவு சுலபமாக உணர முடிந்தால்
உலகத்தின் சிக்கல் நூற்றுக்குத் தொண்ணூற்றொன்பது
எப்பொழுதுமே ஏற்பட்டிருக்காது...

வாழ்க்கை...

வானவில்லின் நிறங்களைப்போல்
கைகளுக்குள் அகப்படமால்
சிறகசைத்துப் பறக்கும்
வண்ணத்துப் பூச்சிகளைப் போல்
வாழ்க்கையென்றும் அழகாக இல்லை

அருவருப்பான மண் புழுவைப்போல்
சொத சொத வென நாட்கள் நகருகின்றது...

ஆசை...

ஆசை மனிதனுக்கு அபாரத் துணிச்சலைக் கொடுக்கிறது
பின்னால் வரக்கூடிய லாபத்தை உத்தேசித்து
எத்தகைய அபாயத்தையும் சமாளிக்க முன் வருகிறான்...

பொய்...

ஏழைகள் சொல்லும் உண்மையை விடப்
பெரிய இடத்துப் பொய்யைத்தான்
எல்லோரும் நம்புவார்கள்...

ஆண் பெண்...

ஆண் பெண் உறவில் ஒருவரைப் பற்றி
மற்றொருவருக்கு எழும் எண்ணங்கள்
புத்தியில் சஞ்சரிக்க ஆரம்பித்து விட்டால்
வேற்று மனிதர்கள் வேம்பாக இருப்பார்கள்
இந்த எண்ணங்களின் சஞ்சாரத்துக்கு
தனிமையில் கிடைக்கும் சுதந்திரம்
அத்தியாவசியமானது ஆகிறது...

காலத்தின் கரங்கள்...

காலத்தின் கரங்கள், நிகழ்ச்சிகளின் வேகம்
மனிதர்களை எவ்வளவு தூரம் மாற்றி விடுகிறது...

கஷ்டம் ,வெற்றி...

ஒவ்வொரு திட்டத்தை நிறைவேற்றுவதிலும்
உள்ள கஷ்டங்களை மட்டுமே யோசித்துக் கொண்டிருப்பவன்
உலகத்தில் எந்தக் காரியத்தையும் சாதிக்க மாட்டான்
கஷ்டத்தை உணர்ந்தாலும் அதற்குப் பரிகாரம்
தேடுபவனே வெற்றி பெறுகிறான்...

இரவு...

திருட்டுக்கும் காமத்துக்கும்
இருட்டு பலமான துணை...

மனித உணர்ச்சி...

மனிதனுக்கு எண்ணற்ற உணர்ச்சிகளை இறவன் படைத்திருக்கிறான்
ஒவ்வோர் உணர்ச்சியின் குணமும் தனித்தனியாக இருப்பது போல் தோன்றினாலும், ஓர் உணர்ச்சிக்கும் இன்னோர் உணர்ச்சிக்கும் நெருங்கிய சம்மந்தம் இருந்துகொண்டே இருக்கிறது.

உதாரணமாக அனுதாபம், அன்பு, ஆசை, இன்பம்
இந்த உணர்ச்சிகள் நான்கும் நால்வைகைப்பட்டவை.
ஆனால் அனுதாபத்திலிருந்து அன்பு முளைக்கிறது
அன்பு எதனிடம் ஏற்படுகிறதோ அதை அடைய ஆசைப்படுகிறோம்
ஆசை பூர்த்தியாகும் நிலைதான் இன்பம்
இப்படி நெருக்கமாகத் தொடுக்கபட்டிருக்கும் இந்த உணர்ச்சிகளிலிருந்து யாரும் விடுபடுவதில்லை...
PAKEE Creation