Wednesday, January 11, 2012

அதிகம் விரும்புகிறேன்...அன்பே!
வெற்றியில் கிடைக்கும்
பரிசுகளை விட
தோல்வியில் கிடைக்கும்
உன் தோள்களையே
அதிகம் விரும்புகிறேன்...

உன் நினைவுகள் மட்டும் தான்...படிப்பது என்னவோ பாடங்கள் தான்
ஆனால்
மனப்பாடம் ஆவதெல்லாம்
உன் நினைவுகள் மட்டும் தான்...

உன் நினைவுகள் புதைந்து இருப்பதால்...என் இதயம் கூட கல்லறை தான்
உன் நினைவுகள் அதில் புதைந்து இருப்பதால்...

வலி எவ்வளவு கொடுமை என்பது....தவிக்கும் உள்ளத்துக்குத் தான் தெரியும்
வலி எவ்வளவு கொடுமை என்பது....

என் இதயத்தில் என்றும் நீயிருப்பாய்...
அன்பே
நீ
நினைத்து பார்க்கும் அளவிற்கு
என் உருவம் அமையாவிட்டாலும்
நீயே நினைத்துபார்க்காத அளவிற்கு
என் இதயத்தில் என்றும் நீயிருப்பாய்...

ப்ரியமானவளே...
பிடியின்றி விழுந்த குழி
புதைக்குழி என்றறிந்தும்
உன் இதயக்குழி என்பதால்
எழுந்துவர மனமில்லையென்
ப்ரியமானவளே...

என்னுடைய கற்பனைகள் என்னவளுக்கு தெரியாது...சிலுவைகளின் வலி இறைவனுக்கு
தெரியாது ...!
சிற்பங்களின் ஆயுல் சிற்பிகளுக்கு
தெரியாது...!
சிறகுகளின் எடை பறவைகளுக்கு
தெரியாது... !
என்னுடைய கற்பனைகள் என்னவளுக்கு
தெரியாது...

உணர்வுகள் உனக்கிருந்தால் உணர்ந்திருப்பாய் என் அன்பை...
உணர்வுகள் இல்லையே
நடக்கும் கால்கள் எனக்கிருந்தும்
நடை பிணமாய் மாற்றினாய்

ஓடும் உள்ளம் எனக்கிருந்தும்
ஊனம் ஆக்கி என்னை அமர்த்தினாய்

உணர்வுகள் உனக்கிருந்தால்
உணர்ந்திருப்பாய் என் அன்பை

உனக்கது இல்லையே
என்ன செய்வேன் நான்...

நிஜமான வாழ்க்கை...கனவுகள் ஆயிரம் இருந்தாலும்,
நினைவுகள் ஒன்றை மட்டும் நேசிப்பதே
நிஜமான வாழ்க்கை...

அன்பு!..உலகில்
அனைத்துமே
சரிசமம்.
காதலில் மட்டும்
சற்று அதிகம் -
ஒருவர்மீது
மற்றொருவர் கொண்ட
அன்பு!..

சிரித்துக்கொண்டு போகிறாயே!...
பூங்காவின்

புல் தரையில்
நடந்தால்
புல் உடைந்து
அழுமே என்று
கவிதைப் பேசியவளே!
என் இதயத்தை
சுக்குநூறாக்கிவிட்டு -
இன்று
திரும்பிப்பார்த்து
சிரித்துக்கொண்டு போகிறாயே!...

இதயத்தை புண்ணாக்கி விடும்...காதலும் சிகரெட்டும் ஒன்று தான்
இரண்டுமே உதட்டோடு உறவாடிவிட்டு
இதயத்தை புண்ணாக்கி விடும்...

உன் நினைப்பை தவிர...வலிக்கும் தருணங்களுக்கு வழியில்லை
உன்னை தவிர..
வாடுதல்தனில் வருத்தமில்லை
உன் நினைப்பை தவிர...

உயிரும் போகிறது...உன்னை பிரியும் போது பாசத்தோடு பரிதவிப்பு
கூடுகின்றது எதிர்பாராமலே
உலகை பிரியும் சமயம் ஏக்கத்தோடு விம்மியே
உயிரும் போகிறது...

உலகம் முழுவதும் நீயாகவே இருக்கிறாய்...தொலைவிலிருக்கும் போது நிலவாக
தொட்டுத்தழுவும்போது தென்றலாக
கோபப்படுகையில் சுடர் சூரியனாக
கொஞ்சும்போது குளிர் நீராக
ஆசை வைப்பதில் மலையாக
அன்பு காட்டுவதில் ஓர் அருவியாக

இப்படி எனக்கான உலகம் முழுவதும் நீயாகவே இருக்கிறாய் என் குட்டி...

அதிகம் நேசிக்க கூடாது என்று...நேசிக்க யாரும் கற்றுக் கொள்வதில்லை
ஆனால் நேசித்த பின் அதிகம் கற்றுக் கொள்கிறார்கள்
இனி யாரையும் அதிகம் நேசிக்க கூடாது என்று...

அது ஒரு வசந்த காலமடி எனக்கு...
பழகியதோ மாதங்கள் ஏழு

ஆனால் என் மனதில்
நீ வாழ்ந்ததோ ஜென்மம் ஏழு
அது ஒரு வசந்த காலமடி எனக்கு...

நட்பு அறியா வாழ்க்கையில், வாழ்வது அர்த்தமில்லை...இவ்வுலம் இறைவன் தந்தது.
இனிமையின் உதயம் நட்பு தருவது.
இறப்பு வரை நீ இருந்தால் இழப்பில்லை,
இறக்கும் போது நீ இருந்தால் பயமில்லை.
நட்போடு வாழும் வரை மகிழ்வுக்கு பஞ்சமில்லை!
நட்பு அறியா வாழ்க்கையில், வாழ்வது அர்த்தமில்லை...

காதலோடு பயணிக்கிறேன்...சேரமுடியாது என தெரிந்தும்
தண்டவாளம் தொடர்ந்து
பயணிக்கிறது
உன்னோடு நான் சேரமுடியாது
என தெரிந்தும்
காதலோடு பயணிக்கிறேன்...

மறந்தாலும் மறுத்தாலும் மரணம் எனக்குத்தான்...உன்னை நேசித்திருந்தால்
மறுக்கவோ மறக்கவோ செய்திருப்பேன்
ஆனால் நான் உன்னை சுவாசிக்கிறேன்
மறந்தாலும் மறுத்தாலும் மரணம் எனக்குத்தான்...

என் இதய துடிப்பை...நீ ஒருமுறை எனக்காக துடிப்பாய் என்றால்
உன்னக்காக நான் பல முறை நிறுத்தி வைக்கிறேன்
என் இதய துடிப்பை...

ஆசைப்படுகிறேன்...நீ அழகிய முத்து
போன்று இருப்பதால்தான்
பெண்ணே…
உன்னைப் பாதுகாக்கும்
சிப்பியாக
நானிருக்க வேண்டுமென்று
ஆசைப்படுகிறேன்...

பெண்ணே...இந்த உலகின்
மிகச்சிறந்த
சிற்பிகள் யார்...?
என்று போட்டி வைத்தால்
முதல் பரிசு
உன்னுடைய
பெற்றோர்களுக்குத்தான்
பெண்ணே...

நீதான் சென்றுவிட்டாய்...வந்துபோகும் மேகம்கூட
கண்ணீர் வடிக்கிறது எனக்கு துணையாக
ஆனால்
நீதான் சென்றுவிட்டாய்
யாருக்கோ துணையாக...

உண்மையாக ஒரு பெண்ணை நேசித்தால்...
எமனும் ஒரு நாள் செத்து போவான்
உண்மையாக ஒரு பெண்ணை நேசித்தால்...

உன் அன்பு...உன் அன்பை பத்திரமாக
என் இதயத்தில் வைத்து இருந்தேன்
பின்புதான் தெரிந்து கொண்டேன்
உன் அன்புதான் என் இதயத்தை
பத்திரமாக வைத்திருக்கிறது என்று...

ஆண்களின் காதல்...ஆண்களின் காதல் உதை பந்து போல
எவ்வளவு உதைத்தாலும் உடையாது
பெண்களின் காதல் கண்ணாடி போல
அவர்களை போலவே நொறுங்கி விடுகிறது...♥♥

உன் காதல் நினைவுகளில்...வானம் தாண்டியும்
முடிவே தெரியாத
நிலையில் 'மனசு'
தேம்பித் திரிகிறதே
உன் காதல்
நினைவுகளில்...

காய்ந்துபோன கண்ணீர்த்துளி...வேதனை என்ற சொல்லுக்கு
வரை விலக்கணம் தனைக் கூறியது
கன்னங்களின் ஓரம்
காய்ந்துபோன கண்ணீர்த்துளி...

என் உயிர் வேகும் சமாதியில் என் கவிதைகளும் சாகும்...
உயிருள்ள காதலாக இருந்தால்
இந்த உலகம் உள்ளவரை
என் கவிதைகள் வாழும்
உயிரில்லா காதலாக இருப்பின்
என் உயிர் வேகும் சமாதியில்
என் கவிதைகளும் சாகும்...

ஏன் நீ அறிய மறுக்கிறாய்...


இதயத்தின் வலி அறிய
இமைகள் மறுப்பதில்லை
உள்ளத்தில் உணர் அறிய
உதடுகள் மறுப்பதில்லை
இருந்தாலும்
என் மனதின் தவிப்புகளை மட்டும்
ஏன் நீ அறிய மறுக்கிறாய்...


அதன் வலியை காதலித்தவர் மட்டுமே உணர முடியும்...காதல் என்பதை யார் வேண்டுமானாலும்
கற்பனை பண்ணமுடியும்
ஆனால் அதன் வலியை காதலித்தவர்
மட்டுமே உணர முடியும்...

மன்னித்துவிடு காதலனே...
மன்னித்துவிடு காதலனே!
உலகத்தில் நான் தான்
கடைசி பெண் என்று
ஒன்றுமில்லை...
PAKEE Creation