Monday, December 7, 2009

இது உன் பழக்க தோஷமா?....


அன்று அன்பாய்
இருந்த நீ
இன்று அமைதியாய்
மாறியதேன்...

இது உன் பழக்க தோஷமா?

இல்லை
என்னுடன்
பழகிய வேஷமா?

Thursday, October 22, 2009

அழவும் மனமில்லை...


அழவும்
மனமில்லை
என் கண்ணீரில்
உன் நினைவுகள்
கரைந்து விடும்
என்ற பயம்.

உன்னை நினைத்தால் மட்டும்...


இருட்டிலும் தனியாக
செல்லும் நான்
உன்னை நினைத்தால் மட்டும்
கையாலாகாத்தனமான
கண்ணீரையல்லவா துணைக்கு
அழைக்கின்றேன்.

காதலியே...


காதலியே
உலகத்தில்
அன்பை
எதனாலும்
அளக்க
முடியாது
என்பதை
புரிந்து
கொண்டேன்
உன் அன்பால்...

உன் பின் தான் மனம் போகிறது...


ஆயிரம் பேர்
வந்தாலும்
வேண்டாம்
என்று
விலகிப் போகும்
உன் பின் தான்
மனம் போகிறது.!!!

பிரிந்தவுடன் தான் தெரிகிறது...


பிரிந்தவுடன் தான்
தெரிகிறது
உன்னுடன்
சேர்ந்திருந்து
சண்டை
போடுவதன்
சுகம்.

உன்னை நினைக்காத நாளே இல்லை...


என்
வாழ்வில்
உன்னை
நினைக்காத
நாளே இல்லை
உன்னை
நினைக்காத
நாளும்
நாளே இல்லை.

Wednesday, October 21, 2009

நீ என்னை வெறுக்கும் போது...!!!


உன்னை ரசித்து கவிதை எழுத தெரித்தது
உன்னை வெறுத்து எழுத தெரியவில்லை
முட்கள் நிறைந்த காதல் பயணத்தில்
காயப்பட்டது என் பாதங்கள் மட்டுமல்ல
என் மனமும் கூட தான்...

அன்பு...நட்பு...காதல் என்ற முன்றெழுத்தில்
இணைந்த நாம்...
பிரிவு என்ற அதே முன்றெழுத்தில் பிரிவதா?
ஒரு முறைதான் பிறப்பு வரும்
ஒரு முறைதான் இறப்பு வரும்
நீ என்னை விரும்பும் போது பிறக்கிறேன்
மறுபடியும் நான் இறக்கிறேன்
நீ என்னை வெறுக்கும் போது...!!!

சொர்க்கமாம்!.. நரகமாம்!...


சொர்க்கமாம்!..
நரகமாம்!..

உன்னருகில்
இல்லாத போது..

நான்
எங்கிருந்தால் என்ன.?

அன்றே அழுதிருப்பேன் மொத்தமாய்...


அன்று நீ
சிரித்துப் பேசிய
நிமிடங்கள்
ஒவ்வொன்றும்...

இன்று முள்ளாய்
குத்துகிறது!

பிரிய
வேண்டும் என்று
தெரிந்திருத்தால்Align Center
அன்றே
அழுதிருப்பேன்...

மொத்தமாய்.



PAKEE Creation