Thursday, July 4, 2013

புண்ணிய மலராகின்றன...



சாலையோரம்
உதிர்ந்த பூக்கள்
புண்ணிய மலராகின்றன
தேவதை உன்
பாதம்பட்டவுடன்...

தேவதை மொழி...



தாய்மொழி
தெரியுமெனக்கு
தேவதை மொழி
அறிந்து கொண்டேன்
உன்னால்...

அவள் கண்கள்...



தொலைவேன் எனத்
தெரிந்தே தொலையுமிடம்
அவள் கண்கள்...

திருமணம் குழந்தை...



திருமணம்
புரியாமல் ஒரு
புதிர்...

குழந்தை
எப்போதும் உண்மையாய்
சிரிக்கும் உலக அதிசயம்...

காதல் காதலி...



காதல்
என் கையெழுத்தையே
அழகாக்கிய அதிசயம்

காதலி
கடந்து போகும் தென்றல்...

அம்மா அப்பா...



அம்மா
என்னை விட
என்னை அதிகம் நேசிப்பவள்!


அப்பா
பாசத்தை மீசைக்குள்
ஒளித்து பாசாங்கு செய்பவர்..!

கண்ணாடியே நின்றுவிடுகிறது...



கண்ணாடியை
எங்கு பார்த்தாலும்
நான் நின்றுவிடுகிறேன்
அவளை எங்கே
பார்த்தாலும் கண்ணாடியே
நின்றுவிடுகிறது...

Tuesday, June 4, 2013

அவள் பிரிவால்...



மழையில் நனைந்த
பட்டாம்பூச்சியின்
சிறகாய் கனக்கிறது மனது
அவள் பிரிவால்...

மயிலிறகு...



வாழ்க்கை என்பது திறந்த புத்தகம்
அதில் காதல் என்பது
மனதை மயக்கும்
மயிலிறகு...

காதல்...



காதல் கைகூடினால் கல்யாணம்
கைதவறினால் காவியம்...
PAKEE Creation