
உன்
இமைகள்
பாடும் தாலாட்டில்
என்
இதயம் விழிக்கும்
சுகமாக!
உன்
விழிகள்
வீசும் பூங்காற்றில்
என்
உள்ளம் இசைக்கும்
பூபாளம்!
உதட்டில்
உயிரை வைத்தாயோ
என்
உள்ளம் முழுதும்
மின்னல்
அடிக்குதடி!
எத்தனை அழகு
உன்
கூந்தல்
என்னை மறந்தேன்
கண்
சிமிட்டவில்லை!
நிலவை பிழிந்து
வடித்தாரோ?
இல்லை
தங்கத்தை செதுக்கி
செய்தாரோ?
சேலைப்போர்த்திய
உன் அழகு
சிந்தும் கவர்ச்சி
சிலிர்க்குதடி!
உன்
பாதம் கொஞ்சும்
மொழியழகோ
உன்
கொலுசுகள்
பாடும் இரரகங்கள்!
வார்த்தைகள்
இன்னும்
உதிர்க்கவில்லை
ஏன்
பாற்கடல் அமுதம்
ஏதுமுண்டோ?
எதை
எதையெல்லாம்
அழகென்றேன்
இன்று வெட்கித்
தலைக் குனிந்தேன்!
இத்தனை அழகை
ரசிப்பதற்கு
எனக்கு
எத்தனை பிறவி
வேண்டுமடி?


No comments:
Post a Comment