
இரவில் என் கண்கள்
தூங்கினாலும்,
என் நினைவுகள் இன்னும்
தூங்கவில்லை...
உன்னை மட்டும் நினைக்கும்
இந்த இதயத்திற்கு உன்
நினைவுகள் துணையாகி
விட்டது..!
உன்னுள் இருப்பது
நான் என்று உனக்குத்
தெரியுமா?
கடலில் விழுந்த நட்சத்திரத்தை
தேடுவது போல தேடுகிறேன்
என் காதலை உன்னிடத்திலே..!
காத்திருந்து பழகியவள் நான்
உன்னக்காக காத்திருப்பேன்..
என்னை புரிந்துக் கொள்ள
இந்த உலகில் எவரும்
பிறக்கவில்லை..
என்னை எனக்கே
பிடிக்கவில்லை..காரணம்
இன்னும் தெரியவில்லை..
உன் நினைவுகள் நெஞ்சினில்
புதைந்ததினால் என் ஆயுள்
முடியும் வரை
தொடரும் நினைவுகள்..!


No comments:
Post a Comment