ஊர் அடங்கும் நேரம்
ஓசை உறையும் நேரம்
மௌனம் பேசும் நேரம்
தென்றல் வீசும் நேரம்
காதல் கடலில் மூழ்கும் கப்பலாக நான்
பூட்டிய அறைக்குள் புகுந்தாலும்
போர்வைக்குள் ஒளிந்தாலும்
ஓசை இன்றி துரத்துகிறது உன் நினைவு
ஆயிரம் மலைகளையும் தாண்டி
ஆயிரம் கடலையும் கடந்து
இன்பம் துன்பம் நினைக்காமல்
வருகிறேன் உனக்காக
நீ கடலாக நான் தீவாக
நீ இரவாக நான் நிலவாக
நீ வானமாக நான் மேகமாக
நீ பூவாக நான் தேனீயாக
என்றுமே உனக்குள் நானாக
என்னை சுற்றிலும் நீயாக
எங்குமே நீயாக
என் வாழ்க்கையே உனக்காக
வருவாயா என் துயர் நீக்க...?