இந்த மரம் அந்த நதி எல்லாமே
இது எதுவுமே மாறல
ஆனால்
என் வாழ்க்கைல எவ்வளவு மாற்றங்கள்
இது எவ்வளவு பெரிய சோகம்
மறக்க முடியல
சந்தோசம் என்றால் ஓடி போய் அணைக்க நண்பன்
கவலை என்றால் மடியில் சாயா அம்மா
ஏதும் என்றால் தோளில் தட்டி கொடுக்கும் அப்பா
இப்ப எல்லாமே இழந்து தனிய இருக்கிற மாதிரி உணர்வு
சின்ன வயசில் வந்த காதல்
காதலிக்காக காத்திருந்த நாட்கள்
காதலியோடு போடும் குட்டி சண்டைகள்
அவள் ஒரு நாள் பேசவில்லை என்றால்
துடித்து போகும் நாட்கள்
அவள் பிரிந்து சென்ற போது
அவள் விட்டு சென்ற நினைவோடு வாழ்ந்த நாட்கள்
தனிமை கொடுமை தான்
ஆனால்
அந்த தனிமையில் தான் நம்மளை
நாங்களே உணர்ந்து கொள்ள முடியும்...
No comments:
Post a Comment