Tuesday, August 14, 2012

அழகுதீயே...



இது வரை
குளத்தில் மட்டுமே
மீன்களைப் பார்த்திருக்கிறேன்
முதன் முறையாக
உன் முகத்தில் கண்கள்
வலை வீசுவது யார்?
கரையில் இத்தனை காவலர்கள் - இமை
முழு நிலவு முகத்தில்
இடது வலதாய்
இரு மூன்றாம் பிறைகள் - புருவம்
என்ன அதிசயம்
தென்றலைத் தாலாட்டும் கூந்தல்
அய்யயோ... வார்த்தைகள் வரவில்லை
பார்த்து விட்டேன் இதழ்களை
வரைந்தது யார்?
ஏய்
அழகுத்தீவே சிரிக்காதே
நான் உயிர் வாழவேண்டும் - உனக்காக...

No comments:

Post a Comment

PAKEE Creation