கடவுளுக்கு தெரியும் என் கண்ணீரின் வலி
ஆறுதல் சொல்ல வரவில்லை
தினக்குறிப்பிற்கு தெரியும் என் மனதின் வலி
ஒரு வார்த்தை கூட பேசவில்லை
தோழிக்கு தெரியும் என் தனிமையின் வலி
பகிர்ந்து கொள்ள அவள் அருகில் இல்லை
நிலவிற்கு தெரியும் என் எதிர்பார்ப்பின் வலி
வெளிச்சத்தை இன்னும் தரவில்லை
மரணத்திற்கு தெரியும் என் வாழ்க்கையின் வலி
ஏனோ இன்னும் என்னை நெருங்கவில்லை
அடுத்த ஜென்மத்திலாவது பிறக்க வேண்டும்
நான் நானாக அல்ல கல்லறைக்கு அருகிலே
காத்திருக்கும் ஓர் கல்லறை பூவாக...
வலியின் வரிகள் !!!!
ReplyDeleteநன்றி தமிழ்...
ReplyDelete