வலிகளை தாங்கும் என் இதயம்
விழிகளை மூடி அழுகிறது
காரணம் என்னவென்று சொல்லாது
இதுவரைக்கும் உன் நினைவுகளை
என் இதயம் மட்டுமே சுமந்தது
இப்போது என் விழிகளும் சேர்ந்து
உன் விம்பத்தை சுமக்கிறது
உன்னால் ஏற்பட்டது
என் மனதிற்கு காயம்......
காயமும் உன் காதலென்று
தெரியாமல் போனது ஏனோ...
மலர்ந்தும் மலராது
மொட்டோடு கருகியது
என் காதல்...
என் இதயத்தை
என்றோ உன்னிடம் தந்தேன்
ஆனால் நீ இறந்தும்
என் இதயத்தில்
வாழ்கிறாய் உயிராக...
அன்பான அன்றைய காதல்
இன்று கலைந்தது கனவாக
கண்ணீர் மட்டும் மிச்சம்...
நீ இன்றி வாழ,
ஆசை இல்லை தான்...
இருந்தும் கல்லறை கேட்குமே என்னிடம்
உன் உயிர் எங்கே என்று,
என்னவென்று சொல்ல
என் உயிர் உன்னிடம் என்று....
உன்னோடு கை கோர்த்து
இந்த உலகத்தை சுற்றி வர
ஆசை இருந்து தான் அழிந்தது
உன் உயிர் பிரியும் போது கூட
என் மடி சாய வேண்டும்
என்று நினைத்தேன்..
ஆனால் உன் இறப்பு கூட
எனக்கு தெரியாது போனது ஏனோ....
நீ அருகில் இல்லை என்ற
ஒன்றை தவிர
உன் நினைவுகளோடு
நான் வாழ்கின்றேன்
என்பதே உண்மை ..
No comments:
Post a Comment