வலிகளை தாங்கிடும் இதயங்கள் எல்லாம்
விழிகளை மூடிஅழுதிடும் அன்பே
வலிகள் நிறைந்த என் இதயம்
விழிகள் மூடி அழவும் வசதியில்லை...
நீ இருக்கும் விழிகளுக்கு
நீர் இறைக்க தெரியாது
உனை சுமக்கும் நினைவுகளை
அழித்துவிட முடியாது...
ஏன் இந்த மனதுக்கு
காயங்கள் தந்தாய்
காயமும் உன் காதலென்று
தெரியாமல் சுமக்குதடி...
நீ தொட்ட தேகமெல்லாம்
பட்டாக எரியுதடி.
மலராமல் என் காதல்
மொட்டோடு கருகுதடி...
சிட்டாக பறந்து விட்டாய்
சில வேடந்தாங்கலைப் போல்
முட்டாள்கள் யாருமில்லை
என் போன்ற ஆண்களைப்போல்..
No comments:
Post a Comment