Thursday, July 21, 2011

அணையத் துடிக்கிறது உயிர்...


என் தொலைபேசி

என்னை அழைக்கும் போதெல்லாம்

உன் நினைவு என்னை

கொல்லாமல் கொல்லுது .....

அழைக்காத பொழுதுகளில்

அணையத் துடிக்கிறது உயிர்

உன் பார்வை பட்ட இடம் யாவும்

நீ விட்டு சென்ற நினைவுகள்..!!!

மெளனத்தை பதிலாய் அளித்த

உன் தொலைபேசி அறியும்...!!!

என் அவஸ்தை என்று ........

உன் துணை தர மறுத்து

என்னை தனிமையில் விட்டாய்.......

உயிர் கொடுத்து

எனை வாழ வைப்பாய்

என்று தான் எண்ணினேன்

ஆனால் எனக்கு

கடைசிவரை ஆயுள் பிச்சை

தர மறுத்தது தான் ஏனோ.....

காதல் கொண்ட உன் கண்களை

தேடி தேடி பார்த்தேன்

தேடிய விழிகள்

ஓய்ந்தது தான் மிச்சம் ....

வாழ்க்கையும் பிடிக்கவில்லை

வாழவும் எண்ணமில்லை

வலி என்று சொல்லி அழ

யாரும் அருகிலும் இல்லை

எப்படி சொல்வேன்...

என் துயரம் தனை .......

எண்ணங்கள் யாவும்

எட்டாத தூரத்தில்

ஏற்க மனமும் இல்லை

ஏற்காமல் இருக்கவும் முடியவில்லை

இது தான் வாழ்க்கையோ ....

என் மனம் நாளும் நடத்தும்

போராட்டம் இது ..........

என் உள்ளத்துக் கேள்விகளுக்கு

பதில் தருவார் யாரோ...

No comments:

Post a Comment

PAKEE Creation