நெஞ்சமொன்று போதாது உன்
நினைவையெல்லாம் புதைத்து வைக்க
நிலவு கூட சுடுகின்றது
நீ இல்லாத கணங்களில்
காலங்கள் கரைபுரண்டு கனகாலமாச்சு
கண்மணியே கண்டதும்
உன்னில் கொண்டேன் காதல்
அது கண்ணீரில் முடியுமென்று
கடைசிவரை நான் எண்ணவில்லை
அதன் கற்ப்பனையில் இன்றும்
மிதக்கின்றேன் நினைவுகள் மீட்க்க
என் நிழலடி தேடிவருவாயோ
நித்தமும் காத்திருக்கின்றேன்
உன் நினைவினைச்சுமந்தபடி
வருடுகின்றது உன் நினைவுகள்
வாடுகின்றது என் இதயம்
வஞ்சகமின்றி என்நெஞ்சமது
கொஞ்சம் சாய்கின்றது கொடியிடையாளே
உன் நடைபயணத்தில் நானும் பயணிக்க
பாதையொன்று அமைப்பாயோ...
No comments:
Post a Comment