என் கண்ணில் மலர்ந்து
என்னுள் நுழைந்து
என்னவளாய் ஆனவளே..!
என் உறவில் கரைந்து
என் எழுத்தில் நிறைந்து
என் கவிதையுமாய் ஆனவளே..!
ஒவ்வொரு கணமும் உன்னைத்தானடி
தேடிக் கொண்டிருக்கிறேன்..?
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்..?
உனக்காக இங்கொருவன் பிறப்பெடுத்திருக்கிறான்
என்பதை அறியாமல்
இத்தனை நாளாய் நீ எங்கிருந்தாய்..?
இந்த ரோஜா ஏனடா
இவ்வளவு சிவப்பாக இருக்கிறது
என்று என்னிடம் கேட்கிறாய்..?
அடி அசட்டுப் பெண்ணே
உனைக் கண்ட ரோஜா மலர் இவள் அழகிற்கு
நான் ஈடில்லையே
என்று வெட்கப்பட்டு நிற்பதால்
வந்த சிவப்படி..!
உன் செவ்விதழ் திறந்து பேசுவதில்…
நீ வள்ளல் என்பதை ஒத்துக் கொள்கிறேன்..!
அதே வேளையில்
உன் செவ்விதழ்களை மூடி
எனக்கொரு முத்தமிடு…
என்றால் மட்டும் கொடுக்க மாட்டேன்
என கஞ்சத் தனம் செய்கிறாயே அது ஏன்?
வள்ளலிடம் கஞ்சத்தனம் கூடாது பெண்ணே..!
நீ வள்ளலாய் இருந்தால்தான்
இந்த வறியவனுக்கு வாழக்கையே..!
உன் கார்மேகக் கூந்தலின் வாசம் பிடித்து
வானில் நடக்க ஆசை..!
உன் வெண்டை விரல்களைக்
களைந்து விளையாட ஆசை..!
உன் தண்டைக் கால்களில்
கொலுசாய் மாறி கலகலவென ஒலிக்க ஆசை ..!
உன் கெண்டை விழிகளின்
இமையாய் மாறி உன்னை
கண்ணடிக்க ஆசை..!
ஆசைகள் அன்புக்கு அடிபணியுமா..?
அன்புக்கு ஆசைகள் அடி பணியுமா..?
பெண்ணழகே பதில் சொல்..!
என் வீட்டுக் கண்ணாடி கூட
உன் கட்சிதானடி..!
என்னைக் காட்டச் சொன்னால்
அது உன்னைக் காட்டுகிறது பார்..!
வெண்முத்துப் பற்களை
வைத்துக் கொண்டு
பொன் முத்து வாங்க வாங்க வருகிறாயே..!
என்ன மேதாவித் தனம் இது..?
நீயோ முத்துச்
சிரிப்பை உதிர்த்து விட்டாய்..!
நானோ…
உன்னிடமிருந்து சிதறிய
முத்துக்களை
என்
மனதிற்குள் கோர்த்துக் கொண்டிருக்கிறேன்...
No comments:
Post a Comment