தொலைந்துபோன தூக்கம்
மூடமறந்த இமைகள்
சுவையே இல்லாத உணவு
நிறங்கள் அற்ற மலர்கள்
யாருடனும் பேசப்பிடிக்காத தனிமை
இசையே இல்லாத பாடல்கள்
மலர்களே இல்லாத பூங்காக்கள்
வானவில் இல்லாத மழைநாள்
மழைமேகம் கடந்து போகையில்
தோகை விரித்து ஆடாத வண்ணமயில்
புன்னகை மறந்த முகங்கள்
உன்னைப் பிரிந்த பொழுதுகளில்
என்னை தொடரும் காட்சிகள் இவையே.
நீ மெல்லத் திரும்பும் ஒரு பொழுதில்
இவை எல்லாம் மெல்ல உயிர்பெறும்.
வருவேன் என்றொரு வார்த்தை சொல்.
அத்தனை ஆனந்தமும் மொத்தமாய்
திரும்பி என் நினைவில் புன்னகைக்கும்…
No comments:
Post a Comment