Tuesday, March 20, 2012

மனிதனே...


மனிதனே,
ரோஜாவை கண்டு,அதை போல்
வாழ ஆசை படுகிறாய்,ஆனால்
முட்களுக்கு நடுவில் தான் அது ,
பிறந்தது என்பதை மறக்கிறாய்.
படர்ந்த அழகிய மேகமாய் ,
வாழ ஆசை படுகிறாய்,ஆனால்
இடிக்கி நடுவில் தத்தளிக்கும்
அதன் தன்மையை மறக்கிறாய்.
உறுதியான பாறையை போல்
வாழ ஆசை படுகிறாய்,ஆனால்
சிற்பியின் உளியில் துர்கலாகும்,
அதன் முடிவை மறக்கிறாய்.

மனிதனே,
இருப்பதை வைத்து வாழ பழகு.
உன் பிறப்பின் அதியாயத்தை புரிந்துகொள்...

No comments:

Post a Comment

PAKEE Creation