மீன்களின் கண்ணீரை எவராலும்
உணர முடியாது ... !
பிறவி குருடனுக்கு வர்ணங்களை
எடுத்துரைக்க முடியாது ... !
கல்லிருந்து கசியும் நீரினை
கண்களில் காண முடியாது ...!
தண்ணீரில் எழுதிய எழுத்தை
பதிக்க முடியாது ... !
கற்பூரத்தை காற்றால்
கரைக்க முடியாது ...!
அதுபோல தான்
பெண்ணின் மௌனத்தை
எவராலும் உணர முடியாது ...!
உணர முடிந்தவன் கணவன் ...
உணர முடியாமல் தவிப்பவன் காதலன்..!
No comments:
Post a Comment