சற்று நிமிடத்தில்
ஒரு குறைக் கனவின்
அழகிய காட்சிகள் யாவும்
கண்விழிக்கும் போது
புகார் மூட்டம் பரவி
கலைந்து போனது போல்
எல்லாமே கலைந்தே போனது!
ஓ…
என் அன்பே
என்செய்வேன்…?
நான் நேசிப்பது எல்லாமே
என்றுமே தொலைவில்தான்…
முன்பு அன்னை!
பின்பு தந்தை!!
அன்று நிலவு!
இன்று நீ...
No comments:
Post a Comment