Monday, August 2, 2010

இனி எந்த வழியிலும்....


இனி எந்த வழியிலும்
எந்தச் சந்தர்ப்பத்திலும்
இறுகக் கைகள் குலுக்கி
சந்திக்கச் சாத்தியமே இல்லை!

இருந்த போதிலும்
இதய தேசத்தில்
நினைவின் பாதையில்
இன்னும் பல தடங்கள்
அழியாமல் கண்ணீர் சிந்தியபடி
நிழலாகத்தான் தொடர்கின்றன...

No comments:

Post a Comment

PAKEE Creation