உன்னோடு பேசாமல்
இருக்கும் பொழுதெல்லாம்
உன்னை மறந்தேன் என்றில்லை!
உன்னோடு பேசாத
பொழுதுகள் எல்லாமே
உன் நினைவிலேயே
மூழ்கித் தவிக்கிறேன் நான்!
கண்ணைத் தழுவாத
தூக்கத்தில் கூட
கனவு நுரைக்கும் கண்களோடு
கனவுகளைத் தேடித் தேடி
அலைகிறது இந்த மனம்!
இப்படியே மிக இயல்பாக
தூங்கும் இரவினிலும்
தூங்காத விழிகளுடன்
நிலவின் மடியினில்
நிறைந்து வழிகிறது
எனக்கும் உனக்குமான நேசம்...
No comments:
Post a Comment