
உன் புகைப்படத்தையும்
என் புகைப்படத்தையும்
வெட்டி ஜோடியாக
ஒட்டி ரசித்தது
உனக்கு தெரியுமா...
உன் பெயரோடு
என் பெயரை
இணைத்து எழுதி
இன்பத்தில் தவழ்ந்தது
உனக்கு தெரியுமா...
உன் மேலுள்ள
காதலினால்
கையை வெட்டி
இரத்தத்தில் கவிதை வடித்தது
உனக்கு தெரியுமா...
இவை எதுவுமே
தெரியாத உனக்கு
என் காதலின் ஆழம்
எங்கே தெரிய போகிறது...?
No comments:
Post a Comment