கடவுளுக்கு தெரியும் என் கண்ணீரின் வலி ஆறுதல் சொல்ல வரவில்லை தினக்குறிப்பிற்கு தெரியும் என் மனதின் வலி ஒரு வார்த்தை கூட பேசவில்லை
தோழிக்கு தெரியும் என் தனிமையின் வலி பகிர்ந்து கொள்ள அவள் அருகில் இல்லை நிலவிற்கு தெரியும் என் எதிர்பார்ப்பின் வலி வெளிச்சத்தை இன்னும் தரவில்லை
மரணத்திற்கு தெரியும் என் வாழ்க்கையின் வலி ஏனோ இன்னும் என்னை நெருங்கவில்லை அடுத்த ஜென்மத்திலாவது பிறக்க வேண்டும் நான் நானாக அல்ல கல்லறைக்கு அருகிலே காத்திருக்கும் ஓர் கல்லறை பூவாக...
இது வரை குளத்தில் மட்டுமே மீன்களைப் பார்த்திருக்கிறேன் முதன் முறையாக உன் முகத்தில் கண்கள் வலை வீசுவது யார்? கரையில் இத்தனை காவலர்கள் - இமை முழு நிலவு முகத்தில் இடது வலதாய் இரு மூன்றாம் பிறைகள் - புருவம் என்ன அதிசயம் தென்றலைத் தாலாட்டும் கூந்தல் அய்யயோ... வார்த்தைகள் வரவில்லை பார்த்து விட்டேன் இதழ்களை வரைந்தது யார்? ஏய் அழகுத்தீவே சிரிக்காதே நான் உயிர் வாழவேண்டும் - உனக்காக...
வாழ்க்கை ஒரு போராட்டம் போராடும் வரை லட்சக்கணக்கான விந்தணுக்களுடன் சண்டையிட்டு போராடி தான் பிறக்கின்றோம்
போராட்டத்தில் பிறந்து , போராட்டத்தில் வளர்ந்து போராட்டத்தில் மடிவது தான் நம் வாழ்க்கை . பிறப்பதற்கே லட்சக்கணக்கான அணுக்களை வென்ற நம்மால் வாழ்வதற்கான போராட்டத்தில் வெல்ல முடியாதா என்ன?!!! வாழ்ந்து தான் பார் நண்பா...
மனிதா நான் யாரு நீ யாரு சொந்த ஊர் ஏது அத எல்லாம் தூக்கி போடு பண்போடு நல்ல அன்போடு நீ முன்னேறு நீதான் ஸ்டார் வாழ்க்கை ஒரு புதிர் போல எது எப்ப நடக்கும் தெரியாது கடவுள் தந்த அழகிய வாழ்க்கையில் நல்லது நடக்கும் நம்புங்கள் முயற்சி இல்லாமல் பலன் ஏது? குறைகளை சொல்வதினால் தடுமாற்றம் உனக்குள் ஒருவன் யார் அதை தேடு அதை நீ அறிந்தால் தான் வரலாறு போட்டி இல்லாமல் வெற்றி ஏது? பொறமை கொள்வதால்தான் தகறாரு நமக்கு தெரியாது பல உண்டு கற்றது கையளவு நீ என்னும் தேடு வா நண்பா மர்மமான வாழ்க்கையில் வாழ்த்துதான் பார்க்கலாம்...
I am Working In PAKEE Creation Computer Center As a Manager.
வாழ்க்கையில் சந்தோஷம் வேணும் என்றால் காதலை நேசி...சந்தோஷமே வாழ்க்கையாக மாற வேண்டும் என்றால் நட்பை நேசி...
My Friend Web Site, Here u See All Kind Of Songs Lyrics...
எனது நண்பனின் இனைய தளம்
எனது நண்பன் மகிமன் அவர்களினால் இத் தளமானது வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்தளத்தில் கணினி பற்றிய விபரங்களை பெற்றுக் கொள்ளலாம்
http://ivmcreation.blogspot.com