Wednesday, March 6, 2013

கவலைப்படாதீர்கள் நண்பர்களே...



நீ ஆடு மாடு மேய்க்கத்தான் லாயக்கு
என திட்டும் ஆசான்
நீ படிச்சி பாஸ் ஆகாட்டி
ஆடு மாடு தான் மேய்ப்பாய்
என ஆசீர்வதிக்கும் தந்தை

ஆடு மாடு மேய்க்கத்தான்
லாயக்கு என‌
யார் திட்டினாலும் கவலைப்படாதீர்கள்
நண்பர்களே

ஆடு மாடு மேய்ப்பது ஒன்றும்
கேவலமான தொழில் அல்ல‌

இந்த உலகுக்கு
நேர்வழி காட்ட வந்த‌
இறைதூதர்களும் தீர்க்கதரிசிகளும்
ஆடு மாடு மேய்த்தவர்கள் தான்

இறைதூதர் முகமது நபி அவர்கள்
நான் ஆடு மேய்த்திருக்கிறேன்
எல்லா இறைத்தூதர்களும்
ஆடு மேய்த்திருக்கிறார்கள் என்று
கூறி இருக்கிறார்

கீதாபதேசம் செய்த கிருக்ஷ்ணர்
ஆயர் குடியில் பிறந்தவர் தான்

இறைவனின் தூதுவர்களான‌
மோசே,யோசுவா, தாவீது
இவர்களும் மேய்ப்பவர்களே

இயேசு பெருமான்
ந‌ல்ல‌ மேய்ப்ப‌ன் என்றே அழைக்க‌ப்ப‌ட்டார்

மேய்ப்ப‌வ‌ர்க‌ளுக்கு
ஞான‌ம் பெற‌ த‌குதி கிடைக்கிற‌து
மேய்ப்ப‌வ‌ன் த‌ன‌து ம‌ந்தையை காப்பாற்ற‌
எப்போதும் விழித்திருக்கிறான்
விழிப்புண‌ர்வு ஞான‌த்தின் வாச‌ல்

அடுத்து அவ‌ர்க‌ளுக்கு
வாயில்லா பிராணிக‌ள் மேல்
அன்பும் ப‌ரிவும் உண்டாகுகிற‌து
அன்பு ஞான‌ மாளிகைக்கு
அழைத்து செல்லும் ப‌டிக்க‌ட்டு

அவ‌ர்க‌ளுக்கு கிடைக்கும்
த‌னிமையும் ஓய்வும்
அவ‌ர்க‌ளை சிந்திக்க‌ வைக்கிற‌து
சிந்த‌னை ஞான‌த்தின் திற‌வுகோல்...

கனவு...



கனவு காணாதவர் யார்
தெரிந்தால் சொல்லுங்கள்
கனவு காணாதவர் எவரும் இல்லை

இயற்கை கூட
கனவு காண்கிறது
மேகத்தின் கனவு
வானவில்
இரவின் கனவு
ந்ட்சத்திரங்கள்
பூமியின் கனவு
மழை நீர்
ஆணின் கனவு
பெண்
கண்ணீரின் கனவு
புன்னகை
சொற்களின் கனவு
கவிதை
உண்மையின் கனவு
பொய்

கனவு கண்மூடி காணும் காட்சி
கனவு உறக்கத்தின் விழிப்பு
கனவு தூக்கம் போடும் புதிர்
கனவு ஆசைகளின் அந்தரங்க நீலப்படம்
கனவு காயங்கள் முகம் பார்க்கும் கண்ணாடி
கனவு நினைவுகளின் உளறல்
க‌ன‌வு ந‌ம‌க்கு நாமே பேசும் புரியாத‌ மொழி

க‌ன‌வு பொய்ய‌ல்ல‌
அது உண்மையின் நிர்வாண‌ம்
க‌ன‌வு ம‌னித‌னின்
அந்த‌ர‌ங்க‌ அறை
அங்கே தான் அவ‌ன்
த‌ன‌து நாட‌க‌ வேச‌ங்க‌ள் அனைத்தையும்
க‌ளைந்து விட்டு
நிஜ‌மாக‌ இருக்கிறான்

க‌ன‌வுக‌ளே ந‌ம‌க்கு
சிற‌குக‌ள் த‌ந்த‌ன‌
க‌ன‌வுக‌ளே புதிய‌ க‌ரைக‌ளுக்கு
ந‌ம்மை கொண்டு செல்லும்
க‌ல‌ங்க‌ரை விள‌க்காக‌ இருக்கின்ற‌ன‌

ஆக‌வே
க‌ன‌வுக‌ளால் வாழுங்க‌ள்
க‌ன‌வில் வாழாதீர்க‌ள்...

Wednesday, February 20, 2013

நண்பா...



இரு உடல்கள் இருந்தும்
ஒரே இதய துடிப்பு
நட்பு என்பது அருகில் இருந்து பேசுவது அல்ல
எங்கிருந்தாலும் சுய நலமில்ல
தாய் போல் அன்பு கொள்ளும் எவரும் நண்பனே

என் மீது கோபம் கொள்ளும்
உரிமை உனக்கு மட்டும்
நான் தருவேன் நண்பா
என்னை அடித்தாலும் திட்டினாலும்
வலிப்பது என்னவோ உனக்கு தான் நண்பா...

உன் ஒரு வார்த்தையில் என் வாழ்க்கை...



ஒரு வரி சொல்ல ஓராயிரம் இரவை கடக்கிறேன்
நீ ஒரு பார்வை பார்க்க ஒரு ஜென்மம் கடக்கிறேன்
உன் இதழ் சிரிப்பில் நீர்த்துளிகள் மொட்டுக்கள் ஆகின்றன
பெண்ணே
உன் ஒரு வார்த்தையில் என் வாழ்க்கை மலரட்டும்...

இரட்டை பிறவி...



நிலாவும் இரட்டை பிறவி என்று
உன் முகம் கண்ட பின்பு தான்
தெரிந்து கொண்டேன்...

அழகிய ராட்சசி...



ஒரு அழகிய ராட்சசியின் மீது காதல் கொண்டேன்
அவள் அழகால்,அன்பால், வார்த்தைகளால்
தினம் தினம் என்னை
சித்திரவதை செய்கின்றால்

என் இதயத்தை உன்னிடம் கொடுத்த பின்பு
நான் காதலன் ஆனேன்
என் இதயத்தை நீ வெறுத்த பின்பு
நான் கவிஞன் ஆனேன் ...

Tuesday, February 12, 2013

பெண்கள்...



அதிகமாக பேசும் பெண்களும்
அதிக மௌனம் சுமக்கும் பெண்களும்
உண்மையில் ஒன்றே
தன் கவலைகளை 
சீக்கிரத்தில் வெளிப்படுத்துவதில்லை...

காதலர் தினம்...



கலப்பது உயிர்களென்றால்
பிறப்பது காதல்தான்
காலம் பார்த்து வருவதா
காதலெனும் காவியம்?
மனங்களால் கதைகள் பேசி
கருத்தினில் ஒன்றிய பின்
நாளும் காதலர் தினம்தானே

காதல் வாழ்கிறது இங்கே
காதலர்கள் கல்லறையில்
வாழ்த்த காதலர்கள்
காவியமாய் ஆனதில்லை
மதத்தின் பிரிவினால் காதல்
மறுதலித்த போதும்
சாதியின் பிரிவினால் காதல்
சாதலில் முடிந்த போதும்
பணத்திமிரினால் காதல்
பந்தாடப் பட்ட போதும்
மொழியின் பிரிவினால் காதல்
மழுங்கிப் போன போதும்
காதல் கதைகளில் வாழ்கிறது
காதலர்கள் பிரிந்த பின்பே

எமக்கு வேண்டாம் இந்த
பிரிந்து வாழும் காதல்
காதலர்கள் இணைந்து வாழும்
காதல் கோட்டைஒன்றை
எம் காதல் தேசத்தில்
காதலுக்கு காதல் சொல்லி
காவியமாய் வாழவைப்போம்...

Friday, February 1, 2013

நீ என் உலக அழகியடி நீ...



நான் உன் ரசிகனடி
தினம் தினம்
ரசித்துக் கொண்டே
இருக்கிறேனடி உன்னை

பள்ளிக்காலங்களில்
நீ செய்யும்
ஒவ்வொரு
செயல்களையும் ரசித்தேனடி

என் புத்தகத்தில்
உன் பெயரை எழுதி
அதில்
உன் முகத்தை ரசித்தேனடி
நீ கோபப்படும்
அழகினை ரசித்தேனடி
அதனால் தான்
தினம் தினம்
உன்னை ரசித்துகொண்டே
இருக்கிறேனடி

நீ கொள்ளை அழகியடி
என் எதிரிகள்
எண்ணிக்கை உச்சமடி

உன் அழகு முகம்கான
முழு நிலவும் உன்னை தேடுதடி
பிரபஞ்சத்தின் அழகெல்லாம்
உன் பின்னால நிற்குதடி

நீ என் உலக அழகியடி...

Wednesday, January 23, 2013

நீ & நான்...





உனக்குள் நானும்
எனக்குள் நீயும்
இருப்பதை மறந்து
நம்மை நாமே தேடுகின்றோம்
காரணம் இன்றி
உள்ளமோ உனை நினைக்குதடி
உயிரோ தடுக்கிறதே
உறவின் உச்சம் நீ
என்பதை நினைத்து...
PAKEE Creation