என திட்டும் ஆசான்
நீ படிச்சி பாஸ் ஆகாட்டி
ஆடு மாடு தான் மேய்ப்பாய்
என ஆசீர்வதிக்கும் தந்தை
ஆடு மாடு மேய்க்கத்தான்
லாயக்கு என
யார் திட்டினாலும் கவலைப்படாதீர்கள்
நண்பர்களே
ஆடு மாடு மேய்ப்பது ஒன்றும்
கேவலமான தொழில் அல்ல
இந்த உலகுக்கு
நேர்வழி காட்ட வந்த
இறைதூதர்களும் தீர்க்கதரிசிகளும்
ஆடு மாடு மேய்த்தவர்கள் தான்
இறைதூதர் முகமது நபி அவர்கள்
நான் ஆடு மேய்த்திருக்கிறேன்
எல்லா இறைத்தூதர்களும்
ஆடு மேய்த்திருக்கிறார்கள் என்று
கூறி இருக்கிறார்
கீதாபதேசம் செய்த கிருக்ஷ்ணர்
ஆயர் குடியில் பிறந்தவர் தான்
இறைவனின் தூதுவர்களான
மோசே,யோசுவா, தாவீது
இவர்களும் மேய்ப்பவர்களே
இயேசு பெருமான்
நல்ல மேய்ப்பன் என்றே அழைக்கப்பட்டார்
மேய்ப்பவர்களுக்கு
ஞானம் பெற தகுதி கிடைக்கிறது
மேய்ப்பவன் தனது மந்தையை காப்பாற்ற
எப்போதும் விழித்திருக்கிறான்
விழிப்புணர்வு ஞானத்தின் வாசல்
அடுத்து அவர்களுக்கு
வாயில்லா பிராணிகள் மேல்
அன்பும் பரிவும் உண்டாகுகிறது
அன்பு ஞான மாளிகைக்கு
அழைத்து செல்லும் படிக்கட்டு
அவர்களுக்கு கிடைக்கும்
தனிமையும் ஓய்வும்
அவர்களை சிந்திக்க வைக்கிறது
சிந்தனை ஞானத்தின் திறவுகோல்...
No comments:
Post a Comment