கலப்பது உயிர்களென்றால்
பிறப்பது காதல்தான்
காலம் பார்த்து வருவதா
காதலெனும் காவியம்?
மனங்களால் கதைகள் பேசி
கருத்தினில் ஒன்றிய பின்
நாளும் காதலர் தினம்தானே
காதல் வாழ்கிறது இங்கே
காதலர்கள் கல்லறையில்
வாழ்த்த காதலர்கள்
காவியமாய் ஆனதில்லை
மதத்தின் பிரிவினால் காதல்
மறுதலித்த போதும்
சாதியின் பிரிவினால் காதல்
சாதலில் முடிந்த போதும்
பணத்திமிரினால் காதல்
பந்தாடப் பட்ட போதும்
மொழியின் பிரிவினால் காதல்
மழுங்கிப் போன போதும்
காதல் கதைகளில் வாழ்கிறது
காதலர்கள் பிரிந்த பின்பே
எமக்கு வேண்டாம் இந்த
பிரிந்து வாழும் காதல்
காதலர்கள் இணைந்து வாழும்
காதல் கோட்டைஒன்றை
எம் காதல் தேசத்தில்
காதலுக்கு காதல் சொல்லி
காவியமாய் வாழவைப்போம்...
No comments:
Post a Comment