Monday, December 12, 2011

உன்னை பார்த்த பிறகு தான்...



உன்னை பார்த்த பிறகு தான்
எனக்கு காதலிக்கும் ஆசை வந்தது
ஆனால் தொடவும் முடியவில்லை தொடரவும் முடியவில்லை...

என்னை வெறுத்தால்...



உன்னிடம் சொல்லாமல் இருந்த போது
மன வேதனை சொல்லிய பின்பு
மரண வேதனை நீ யோ என்னை வெறுத்தால்...

நீயும் கலைந்து போவாய் என்பதால்...



கண் திறக்க இஷ்ரமில்லை
கண்மடலை நான் திறந்தால்
கனவோடு சேர்ந்து நீயும்
கலைந்து போவாய் என்பதால்...

என் இதயம் உன்னை மறப்பதில்லை...



கனவுகள் பிறக்கும் போது
விழிகள் திறப்பதில்லை
உடலைவிட்டு உயிர் பிரிம் போது
உயிர் இறப்பதில்லை
என்னைவிட்டு நீ போன பின்பும்
என் இதயம் உன்னை மறப்பதில்லை...

அம்மாவாசை...



நிலவும் காதலில் தோற்றது போலும்
துக்கத்தை அனுசரிக்கிறது இன்று
அம்மாவாசை...

என் இதயத்தினை...



கடன் அன்பை முறிக்கும்
என கூறி நான் அளித்த அத்தனையும் திருப்பி தந்து விட்டாய்
உன்னால் முடிந்தால் திருப்பி கொடு
உன்னிடம் நான் இழந்த என் இதயத்தினை...

என் கதையை...



உன் விழிகளுக்கு
கண்ணீர் துளிகள் வேண்டுமாயின்
என்
கதையை எடுத்துப்படி அது
சொல்லித்தரும் உனக்கு...

உன் அழகான நினைவுகள் மட்டுமே...




உன்னை நினைத்துக்கொண்டு
உனக்காக காத்து கொண்டிருக்கும்
என் இதயத்திற்கு ஆறுதல் என்னவென்று தெரியுமா ?
எனக்குள்ளே இருக்கும்
உன் அழகான நினைவுகள் மட்டுமே...

மடிந்து போனேன்...




நீ என்னவள் இல்லை என்று அறிந்த நொடியில்
நான் உறையவில்லை
நீ
என்னோடு இருந்த நொடிகள் பொய்யானவை
என்று அறிந்த தருணத்தில் மடிந்து போனேன்...

என் கண்கள்...



வறண்டு போவதில்லை
என்
கண்கள் உன் காதலுக்காய்
ஏங்கி அழும் போது...
PAKEE Creation