வாடி மூர்க்கமாய் காதல் கொள்வோம்...
வாடி மூர்க்கமாய் காதல் கொள்வோம்
உன்னையும் என்னையும்
உரசி நெருப்பெடுத்து
குலக்காப்புக் கொள்கை எரிப்போம்
பின்னேரங்களில்
சாயும் சூரியனுக்கு
விடியல் பற்றி விமர்சிப்போம்
விதையாகிப் போன நம்
வீரரின் கல்லறை காட்டி
அமாவாசை இரவுகளை அகற்றுவோம்
வாடி மூர்க்கமாய் காதல் கொள்வோம்...
No comments:
Post a Comment