Tuesday, February 12, 2013

பெண்கள்...



அதிகமாக பேசும் பெண்களும்
அதிக மௌனம் சுமக்கும் பெண்களும்
உண்மையில் ஒன்றே
தன் கவலைகளை 
சீக்கிரத்தில் வெளிப்படுத்துவதில்லை...

காதலர் தினம்...



கலப்பது உயிர்களென்றால்
பிறப்பது காதல்தான்
காலம் பார்த்து வருவதா
காதலெனும் காவியம்?
மனங்களால் கதைகள் பேசி
கருத்தினில் ஒன்றிய பின்
நாளும் காதலர் தினம்தானே

காதல் வாழ்கிறது இங்கே
காதலர்கள் கல்லறையில்
வாழ்த்த காதலர்கள்
காவியமாய் ஆனதில்லை
மதத்தின் பிரிவினால் காதல்
மறுதலித்த போதும்
சாதியின் பிரிவினால் காதல்
சாதலில் முடிந்த போதும்
பணத்திமிரினால் காதல்
பந்தாடப் பட்ட போதும்
மொழியின் பிரிவினால் காதல்
மழுங்கிப் போன போதும்
காதல் கதைகளில் வாழ்கிறது
காதலர்கள் பிரிந்த பின்பே

எமக்கு வேண்டாம் இந்த
பிரிந்து வாழும் காதல்
காதலர்கள் இணைந்து வாழும்
காதல் கோட்டைஒன்றை
எம் காதல் தேசத்தில்
காதலுக்கு காதல் சொல்லி
காவியமாய் வாழவைப்போம்...

Friday, February 1, 2013

நீ என் உலக அழகியடி நீ...



நான் உன் ரசிகனடி
தினம் தினம்
ரசித்துக் கொண்டே
இருக்கிறேனடி உன்னை

பள்ளிக்காலங்களில்
நீ செய்யும்
ஒவ்வொரு
செயல்களையும் ரசித்தேனடி

என் புத்தகத்தில்
உன் பெயரை எழுதி
அதில்
உன் முகத்தை ரசித்தேனடி
நீ கோபப்படும்
அழகினை ரசித்தேனடி
அதனால் தான்
தினம் தினம்
உன்னை ரசித்துகொண்டே
இருக்கிறேனடி

நீ கொள்ளை அழகியடி
என் எதிரிகள்
எண்ணிக்கை உச்சமடி

உன் அழகு முகம்கான
முழு நிலவும் உன்னை தேடுதடி
பிரபஞ்சத்தின் அழகெல்லாம்
உன் பின்னால நிற்குதடி

நீ என் உலக அழகியடி...

Wednesday, January 23, 2013

நீ & நான்...





உனக்குள் நானும்
எனக்குள் நீயும்
இருப்பதை மறந்து
நம்மை நாமே தேடுகின்றோம்
காரணம் இன்றி
உள்ளமோ உனை நினைக்குதடி
உயிரோ தடுக்கிறதே
உறவின் உச்சம் நீ
என்பதை நினைத்து...

நட்பு...



ஒன்று என்பது எண்களின் தொடக்கம்
அ என்பது எழுத்துக்களின் தொடக்கம்
அடக்கம் என்பது அறிவின் தொடக்கம்
ஆணவம் என்பது அழிவின் தொடக்கம்
ஆனால்
நட்பு என்பதே வாழ்க்கையின் தொடக்கம்...

Love...



ஸ்வரங்களையும் ரதங்களையும்
சொல்லி புரிந்து கொள்ள முடியாது
இசைத்து பார்த்தல் தான் புரியும்
ஆனால் புரிந்து கொண்டேன்
நீ உன் பெயரை சொல்லும்போது...

காதல் விரக்தி...




நான் ஒரு முட்டாள்
ஏமாற்றப்பட்ட பின்பும் அவளுக்காக ஏங்கித்தவிக்கிறேன்
வெந்த பின்பும் உயிர் வாழத்துடிக்கும் மீன் போல
தோற்றுப்போன பின்பும் தெருத் தெருவாய் அலைகிறேன்
அவள் முகம் பார்க்க

காய்ந்து போன சருகு போல
தேய்ந்துபோன வேளையிலும்
போகத்துடிக்கும் உயிர கூட
அவளோடு ஒரு முறை பேசிவிட்டுசெல்லாதோ
என ஏங்கித் தவிக்கிறேன்

அன்றெல்லாம் வெந்து போன இதயத்தில்
இன்றெல்லாம் வித்தியாசமான
அவளின் நினைவுகளால்
சுடு மணலில் மாட்டிக்கொண்ட
மண்புழுவாய் துடித்துக்கொண்டிருக்கின்றேன்

எவ்வளவுதான் என்னை அவள் வெறுத்தாலும்
அவளின் இதயம் எனும் பூஜை அறையின்
எங்கோ ஒரு மூலையில் எனது நினைவுகளும்
உறக்கம் கொள்ளும் எனும் நப்பாசையில்
வழ்த்துகொண்டிருக்கிறேன் அவளுக்காக...

என்னை மறந்து விடு...





தெருவோரம் நீ நடக்க
உன்னோடு நான் நடக்க
நமக்குள்ளே லவ் என்று
ஊரெல்லாம் பேசிச்சிரிக்க
அதைக்கேட்டு
உன் அண்ணன் எனக்கடிக்க
என் அக்கா உனக்கடிக்க
வேண்டாமடி காதல்
நான் உன்னை மறந்து விட்டேன்
நீயும் என்னை மறந்து விடு...

சொல்லப்படாத காதல்...



கரைதேடும் அலையாக 
கடல் தேடும் நதியாக
கவி பாடும் குயிலாக
மலை நாடு தாண்டி
நான் வந்தாலும்
உன் மீது நான் கொண்ட காதல்
என்னை தவிர நான் வணங்கும்
கடவுளுக்கு மட்டும் தான் தெரியும்...

அம்மா...



கோவில் கருவறையிலே சிற்பம்
என்னை தான் கருவறையிலேயே
சுமந்ததேன்றல் அது நீ தானம்மா

நானே என்னை பாரமாக நினைத்த போதும்
நீ என்னை பாசமாகவே பெற்றுடுத்தாய்
பாரத்திற்கு நான் அடையலாம் என்றால்
பாசத்திற்கு நீயே அகராதி

அறியாத வயதில் உன்னை அழைத்தேன் அம்மாவென்று
அப்போது என் மீது காட்டினா புரியாத அன்பு
அன்பின் உரியது உயர் நிலையென்றால்
அன்பே உருவானது உன் நிலையம்மா...
PAKEE Creation