நான் ஒரு முட்டாள்
ஏமாற்றப்பட்ட பின்பும் அவளுக்காக ஏங்கித்தவிக்கிறேன்
வெந்த பின்பும் உயிர் வாழத்துடிக்கும் மீன் போல
தோற்றுப்போன பின்பும் தெருத் தெருவாய் அலைகிறேன்
அவள் முகம் பார்க்க
காய்ந்து போன சருகு போல
தேய்ந்துபோன வேளையிலும்
போகத்துடிக்கும் உயிர கூட
அவளோடு ஒரு முறை பேசிவிட்டுசெல்லாதோ
என ஏங்கித் தவிக்கிறேன்
அன்றெல்லாம் வெந்து போன இதயத்தில்
இன்றெல்லாம் வித்தியாசமான
அவளின் நினைவுகளால்
சுடு மணலில் மாட்டிக்கொண்ட
மண்புழுவாய் துடித்துக்கொண்டிருக்கின்றேன்
எவ்வளவுதான் என்னை அவள் வெறுத்தாலும்
அவளின் இதயம் எனும் பூஜை அறையின்
எங்கோ ஒரு மூலையில் எனது நினைவுகளும்
உறக்கம் கொள்ளும் எனும் நப்பாசையில்
வழ்த்துகொண்டிருக்கிறேன் அவளுக்காக...
No comments:
Post a Comment