Wednesday, January 11, 2012

அதிகம் விரும்புகிறேன்...



அன்பே!
வெற்றியில் கிடைக்கும்
பரிசுகளை விட
தோல்வியில் கிடைக்கும்
உன் தோள்களையே
அதிகம் விரும்புகிறேன்...

உன் நினைவுகள் மட்டும் தான்...



படிப்பது என்னவோ பாடங்கள் தான்
ஆனால்
மனப்பாடம் ஆவதெல்லாம்
உன் நினைவுகள் மட்டும் தான்...

உன் நினைவுகள் புதைந்து இருப்பதால்...



என் இதயம் கூட கல்லறை தான்
உன் நினைவுகள் அதில் புதைந்து இருப்பதால்...

வலி எவ்வளவு கொடுமை என்பது....



தவிக்கும் உள்ளத்துக்குத் தான் தெரியும்
வலி எவ்வளவு கொடுமை என்பது....

என் இதயத்தில் என்றும் நீயிருப்பாய்...




அன்பே
நீ
நினைத்து பார்க்கும் அளவிற்கு
என் உருவம் அமையாவிட்டாலும்
நீயே நினைத்துபார்க்காத அளவிற்கு
என் இதயத்தில் என்றும் நீயிருப்பாய்...

ப்ரியமானவளே...




பிடியின்றி விழுந்த குழி
புதைக்குழி என்றறிந்தும்
உன் இதயக்குழி என்பதால்
எழுந்துவர மனமில்லையென்
ப்ரியமானவளே...

என்னுடைய கற்பனைகள் என்னவளுக்கு தெரியாது...



சிலுவைகளின் வலி இறைவனுக்கு
தெரியாது ...!
சிற்பங்களின் ஆயுல் சிற்பிகளுக்கு
தெரியாது...!
சிறகுகளின் எடை பறவைகளுக்கு
தெரியாது... !
என்னுடைய கற்பனைகள் என்னவளுக்கு
தெரியாது...

உணர்வுகள் உனக்கிருந்தால் உணர்ந்திருப்பாய் என் அன்பை...




உணர்வுகள் இல்லையே
நடக்கும் கால்கள் எனக்கிருந்தும்
நடை பிணமாய் மாற்றினாய்

ஓடும் உள்ளம் எனக்கிருந்தும்
ஊனம் ஆக்கி என்னை அமர்த்தினாய்

உணர்வுகள் உனக்கிருந்தால்
உணர்ந்திருப்பாய் என் அன்பை

உனக்கது இல்லையே
என்ன செய்வேன் நான்...

நிஜமான வாழ்க்கை...



கனவுகள் ஆயிரம் இருந்தாலும்,
நினைவுகள் ஒன்றை மட்டும் நேசிப்பதே
நிஜமான வாழ்க்கை...

அன்பு!..



உலகில்
அனைத்துமே
சரிசமம்.
காதலில் மட்டும்
சற்று அதிகம் -
ஒருவர்மீது
மற்றொருவர் கொண்ட
அன்பு!..
PAKEE Creation