Tuesday, March 20, 2012

எனது கவிதை...


மனதை நெகிழ வைப்பதுதான் கவிதை என்றால்
அவளின் சந்தோசங்கள்தான் எனது கவிதை

மனதை உருக்குவதுதான் கவிதை என்றால்
அவளின் சோகங்கள்தான் எனது கவிதை

மனதுக்கு ஆறுதல் தருவதுதான் கவிதை என்றால்
அவளின் பேச்சுதான் எனது கவிதை

மனதை லேசாக்குவதுதான் கவிதை என்றால்
அவளின் சுவாசம்தான் எனது கவிதை

மனதை தொடுவதுதான் கவிதை என்றால்
அவளின் முத்தம்தான் எனது கவிதை

மனதுக்கு பிடித்ததுதான் கவிதை என்றால்
அவள்தான் எனது கவிதை...

நேசிக்கின்றேன்...

உன்னை எந்த அளவிற்கு நேசிக்கின்றேன்
என்பது எனக்கு தெரியாது ஆனால் நீ
இருக்கும் வரை மட்டும் என் உயிர் இருக்க வேண்டும்
காரணம் உன்னை அன்றி வேறு
ஒருவரையும்
இப்பிறவியில் என்னால் நேசிக்க முடியாது...

Thursday, March 1, 2012

எனக்கு விருது வழங்கிய கலைக்கு நன்றிகள்...





எனக்கு விருது (versatile blogger award) வழங்கி பெருமைப்படுத்திய
கலை
அவர்களுக்கு எனது மனம் நெகிழ்ந்த நன்றிகள்


மேலும் என்னுடன் விருது பெற்ற சக நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்

எனக்கு விருது வழங்கிய கலை இணையதளம்

எனக்கு பிடித்த ஏழு விசயங்கள்:

1 . இசையில் கரைந்து போவது
2 . இயற்கை அழகை ரசிப்பது
3 . புத்தகங்கள் வாசிப்பது
4 . குழத்தைகளோட விளையாடுவது
5 . தனிமையில் இருப்பது அதிகம் பிடிக்கும்
6 . என் கூட இருப்பவர்களை கவலையாக இருக்க விட மாட்டேன்
7 . பயணம் செய்வது பிடிக்கும்


நான் இந்த விருதை கீழ்கண்ட ஐந்து பதிவுலக நண்பர்களுக்கு அன்புடன் அளிக்கிறேன்


பெயரைச் சொடுக்கினால் அவர்களது வலைப்பூ விரியும்

என் விருதையும் அழைப்பையும் அன்புடன் ஏற்குமாறு கேட்டுக் கொள்கிறேன்
உங்களுக்குப் பிடித்த ஏழு விஷ்யங்களை பதிவர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்

Tuesday, February 28, 2012

தலையணை...


இருவரும் சேர்ந்து உறங்கத்தான்
தலையணை வாங்கினேன்
அதுவும் தனிமையானது
என்னைப் போலவே!

ஒவ்வொரு ஆணும் மறக்க கூடாத கவிதை...

உன்னை கருவில் சுமத்த பெண்ணையும்
உன் கருவை சுமக்கும் பெண்ணையும்
நீ கல்லறை செல்லும் வரை நேசி...

புன்னகைப்பாயா...


பூமியில் நிலைத்த நிலவே!
புன்னகைப்பாயா -பெண்ணால்
புண்ணான என் மனதைப் பார்த்து...

என் ஆயுள் குறைகிறது...


ஒரு நொடி அவள்
சிரித்துப் பேசினால்
நூறு நொடி என் ஆயுள் நீள்கிறது.
ஒரு துளி கண்ணீர் சிந்தினால்
நூறுநாள் என்
ஆயுள் குறைகிறது...

என் காதலை...


பூமிக்குள் புதைத்து வைத்தாலும்
உன் புன்னகையை தோண்டி எடுப்பேன்.
இதழ்களுக்கிடையில்
அடம்பிடிக்கும் காதலை
இழுத் தெடுப்பதுவா கஸ்ரம்...

உனக்கு தெரியாது...


நீ காதலித்த போதும்
சொன்னேன்
என் காதலின் ஆழம்
உனக்கு தெரியாதென்று

நீ என்னை விட்டு பிரிந்த போதும்
சொல்கின்றேன்
என் வலிகளின் ஆழம்
உனக்கு தெரியாதென்று...

உன் நினைவினால்...


என் விழியில் வழியும் நீர்
உன் பிரிவினால் அல்ல
நீ வேண்டாம் என்று
விட்டு சென்ற பின்னும்
என்னைத் துரத்தும்
உன் நினைவினால்...
PAKEE Creation