Thursday, July 21, 2011

காதல் காதல் காதல் காதல் காதல்...



வலிகளை தாங்கும் என் இதயம்

விழிகளை மூடி அழுகிறது

காரணம் என்னவென்று சொல்லாது

இதுவரைக்கும் உன் நினைவுகளை

என் இதயம் மட்டுமே சுமந்தது

இப்போது என் விழிகளும் சேர்ந்து

உன் விம்பத்தை சுமக்கிறது

உன்னால் ஏற்பட்டது

என் மனதிற்கு காயம்......

காயமும் உன் காதலென்று

தெரியாமல் போனது ஏனோ...

மலர்ந்தும் மலராது

மொட்டோடு கருகியது

என் காதல்...

என் இதயத்தை

என்றோ உன்னிடம் தந்தேன்

ஆனால் நீ இறந்தும்

என் இதயத்தில்

வாழ்கிறாய் உயிராக...

அன்பான அன்றைய காதல்

இன்று கலைந்தது கனவாக

கண்ணீர் மட்டும் மிச்சம்...

நீ இன்றி வாழ,

ஆசை இல்லை தான்...

இருந்தும் கல்லறை கேட்குமே என்னிடம்

உன் உயிர் எங்கே என்று,

என்னவென்று சொல்ல

என் உயிர் உன்னிடம் என்று....

உன்னோடு கை கோர்த்து

இந்த உலகத்தை சுற்றி வர

ஆசை இருந்து தான் அழிந்தது

உன் உயிர் பிரியும் போது கூட

என் மடி சாய வேண்டும்

என்று நினைத்தேன்..

ஆனால் உன் இறப்பு கூட

எனக்கு தெரியாது போனது ஏனோ....

நீ அருகில் இல்லை என்ற

ஒன்றை தவிர

உன் நினைவுகளோடு

நான் வாழ்கின்றேன்

என்பதே உண்மை ..

பிடிக்கும்...


மழை எனக்கு பிடிக்கும்...

உன்னோடு சேர்ந்து

நனைகையில்......!

தனிமை எனக்கு பிடிக்கும்...

உன் நினைவுகளோடு

கலந்து இருக்கையில்....!

எழுத பிடிக்கும்...

உன் பெயரோடு என்

பெயர் சேர்த்து எழுத...!

நடக்க பிடிக்கும்..

உன் கையோடு என்

கை கோர்த்து

நடக்கையில.....!

இதேபோல்...!

உறங்க பிடிக்கும் ...

தினமும் இரவில் அல்ல....!

நீ..

என்னை காதலிக்கவில்லை

என்று சொன்னால்

நிரந்தரமாக என்..

"கல்லறையில் "......

நான் தோற்றுவிட்டேன்...


காதல்

என்ற மூன்று எழுத்துதான் என்னை திசை மாற்றி சென்றது

நான் கண்ட அந்த காதல் என்னை ஏமாற்றியது

நான் எழுப்பிய காதல் என்னை மோசம் செய்தது

எனக்கு யாரையும் பிடிக்கவில்லை

எனக்கு இந்த காதலையும் பிடிக்கவில்லை

மல்லிகை எனும் அந்த மனதில்

புன்னகை எனும் அந்த சிரிப்பில்

மெல்லிசை எனும் அந்த கானத்தில்

புல்வெளி எனும் அந்த குரலில்

நீ படிய பாட்டு இன்னும் என் காதில் ஜொலிக்கிறது

வானமே நீ போய்விடு

தென்றலே நீ ஓய்ந்துவிடு

புஷ்பமே நீ வாடிவிடு

இன்னும் என்னை கொள்ளாதே

நான் தோற்றுவிட்டேன்...

மறக்கவே முடியவில்லை...



கண்கள் மூடி

தூக்கத்தை தேடினேன் முடியவில்லை

கண்ணுக்குள் தெரிவது

நீ அல்லவா?

நீ

தான் என்னை

மறந்து விட்டாயே

இல்லை...இல்லை..நம் காதலை..

மறுபடியும் ஏன் வருகிறாய்? என் நினைவுக்குள்.

மறக்கவே முடியவில்லை

உன்னையும் நம் காதல் நினைவுகளையும்

மறந்துவிட அது என்ன நினைவுகளா?

இல்லை..என் வாழ்வின் நியங்கள்.

நானும் உன்னை

மறந்திடலாம் என்றென்னி

இறைவனிடம்வேண்டி நின்றேன்

அவளும் என்னை மறுத்துவிட்டாள்

மறுபடியும் வேண்டுகிறேன்

என் வாழ்வில்

நீ வேண்டும் இல்லையேல்

உன் நினைவில்

சிறிதேனும் எனக்கு வேண்டாம்...

களவையும் கற்று மற என்றனர்…. காதலை கற்றேன் மறப்பதெப்படி?..


நீ வந்த போதும்

என் இத‌யத்தில் நுழைந்த போதும்

தடுக்க நினைக்கவில்லை காதலை

நீ போகின்ற போதும்

இதயம் வேகுகின்ற போதும்

என்னால் அடக்க முடியவில்லை

சோகத்தை

வார்த்தைகள்

கொடுக்கும் வலியை

அறிந்து கொண்டேன்..!

நீ நம் காதலைமறந்து

விடச் சொன்ன போது..!!

நீ சொன்னது கூட

எனக்கு வருத்தமில்லை...

என்னை நேசித்த உன் இதயத்தை

எங்கே கழற்றி வைத்தாய்

என்று மட்டும் சொல்லிவிட்டு செல்....!

உன்னால்

சந்தோஷங்கள் என்றால்

என்ன என்று

அறிந்து கொண்டேன்!

உன்னால்

துக்கங்கள் என்றால்

என்ன என்று

அறிந்து கொண்டேன்!

உன்னால்

சுகங்கள் என்றால்

என்ன என்று

அறிந்து கொண்டேன்!

உன்னால்

வலிகள் என்றால்

என்ன என்று

அறிந்து கொண்டேன்!

உன்னால்

காதல் என்றால்

என்ன என்று

அறிந்து கொண்டேன்!

உன்னால்

பிரிவு என்றால்

என்ன என்று

அறிந்து கொண்டேன்!

என் இதயம் துடிப்பது உனக்காக

அதை நீ ஏன் புரிந்து கொள்ள மறுத்தாய்..?

என் சுவாசத்தில் கலந்திருப்பது நீயடி

அதை நீ ஏன் உனர மறுத்தாய்...?

என் இதயம் இருப்பது உன்னிடம்

அதை நீ ஏன் காயப்படுத்த நினைக்கிறாய்..?

நான் கண்ணீர் சிந்துவது உன்னால்

அது தான் நீ விரும்புவது என்றால் சொல்லிவிடு..!

வாழ்னால் முழுவதும் கண்ணீரில் உருகி விடுகிறேன்..!

என்னை இழக்கப் போகிறேன்உன்னை இழக்க முடியாமல்..!

நீயாக வந்தாய்நான் நீயாக மறினேன்

நீயாக விலகுகிறாய்

முடியாதடி உன்னை பிரியஅடுத்த நிமிடமும்..!

நான் வாழ்வது சந்தேகமடி உயிரே

இன்னுமொரு நிமிடம் நான் வாழ்வது

நீ என்னிடம் வருவாய் மீண்டும் என்றுஉயிரே உயிர் வாழ்கிறேன் உனக்காகவே…!

மனசு மட்டும்மாறவே இல்லையே

மறுபடியும் மறுபடியும்

உன்னையே கேட்கிறது

உன்னைத் தேடும் என் இதயம் தினம்

கண்ணீர் வடிக்கின்றது

உன் எண்ணங்களை சுமந்த என் மனம்

சோகங்களால் வாடி நிற்கிறது

ஒரு முறையாவது உன்னுடன்

பேசக்கிடைக்காதா என்று - உன்

விழிகள் சந்திக்காத போதும் வார்த்தைகளாவது

எனை ஆறுதல்படுத்தாதா என

என்னவளே ஏன்

என்னை மறந்தாய்

என் இனியவளே ஏன்

என்னை பிரிந்தாய்

எங்கிருந்தாலும்

நீ வாழ்கவென

வாழ்த்திட என்

உதடுகள் அசைந்தாலும்

உள்ளம் ஊமையாய்

தினமும் அழுகிறதே

உணர்வுகள் வெடித்து சிதற்கிறதே

உயிரும் விடை பெற துடிக்கிறதே

உறக்கம் மறந்து போனதே

இரக்கம் காட்ட மாட்டாயா

இதய வாசல் திறப்பாயா..?

பழகியகாலம் பசுமையாய் உள்ளத்தில்

பிரிவின் துயரம் வலியாய் நெஞ்சத்தில்....

சிலர் இறந்து போனால் மனது மறந்து

போகும்

சிலர் மறந்து போனாலே மனது இறந்து

போகும்

முன்பு

சாலையை கடக்கும் போது கேளாமல்

என் கரம் பிடித்து வந்த என் தோழியே….

இன்று

வாழ்க்கையை கடக்க

நான் கரம் நீட்டியும்

என் கரம் பற்ற யோசனை ஏனோ…..

மழையில் நான் நனையவில்லை

ஈரம் காய்ந்து போவதற்கு…..

மணலில் நான் விழவில்லை

உதறி விட்டு நடப்பதற்கு…..

களவையும் கற்று மற என்றனர்….

காதலை கற்றேன்

மறப்பதெப்படி?

நேசிக்கும் முன் யோசி

நேசித்தப்பின் யோசிக்காதே

அதுநேசித்த இதயத்தையே காயப்படுத்தும்

வாழ்க்கையெனும் பேருந்தில் ஏறிச் செல்ல…

நாம் எடுத்துக் கொண்ட பயணச்சீட்டு…..

காதல்.

அதை பாதியிலேயே கிழித்தெறிந்து விட்டு

என்னை இறக்கி விட்டுச் சென்று விடாதே!

உன்

கோபங்களைதாபங்களை

மன்னித்துவிடுகிறேன்

முத்தத்தால் நீ முடிப்பதானால்!

என் கண்ணீர்

துளிகளால்

உனக்கு வைரமாலை!

காய்வதேயில்லை!

நீ தந்த

முத்தங்களின் ஈரம்!

பார்வை விட்டு

போன பின்னும்

என்னில் சிறகடிக்கும்

உனக்கான எண்ணங்கள்

பெய்த பிற்பாடும்

மழைக்கின்ற

மரம் கணக்காய்...

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்...



என் கண்ணில் மலர்ந்து

என்னுள் நுழைந்து

என்னவளாய் ஆனவளே..!

என் உறவில் கரைந்து

என் எழுத்தில் நிறைந்து

என் கவிதையுமாய் ஆனவளே..!

ஒவ்வொரு கணமும் உன்னைத்தானடி

தேடிக் கொண்டிருக்கிறேன்..?

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்..?

உனக்காக இங்கொருவன் பிறப்பெடுத்திருக்கிறான்

என்பதை அறியாமல்

இத்தனை நாளாய் நீ எங்கிருந்தாய்..?

இந்த ரோஜா ஏனடா

இவ்வளவு சிவப்பாக இருக்கிறது

என்று என்னிடம் கேட்கிறாய்..?

அடி அசட்டுப் பெண்ணே

உனைக் கண்ட ரோஜா மலர் இவள் அழகிற்கு

நான் ஈடில்லையே

என்று வெட்கப்பட்டு நிற்பதால்

வந்த சிவப்படி..!

உன் செவ்விதழ் திறந்து பேசுவதில்…

நீ வள்ளல் என்பதை ஒத்துக் கொள்கிறேன்..!

அதே வேளையில்

உன் செவ்விதழ்களை மூடி

எனக்கொரு முத்தமிடு…

என்றால் மட்டும் கொடுக்க மாட்டேன்

என கஞ்சத் தனம் செய்கிறாயே அது ஏன்?

வள்ளலிடம் கஞ்சத்தனம் கூடாது பெண்ணே..!

நீ வள்ளலாய் இருந்தால்தான்

இந்த வறியவனுக்கு வாழக்கையே..!

உன் கார்மேகக் கூந்தலின் வாசம் பிடித்து

வானில் நடக்க ஆசை..!

உன் வெண்டை விரல்களைக்

களைந்து விளையாட ஆசை..!

உன் தண்டைக் கால்களில்

கொலுசாய் மாறி கலகலவென ஒலிக்க ஆசை ..!

உன் கெண்டை விழிகளின்

இமையாய் மாறி உன்னை

கண்ணடிக்க ஆசை..!

ஆசைகள் அன்புக்கு அடிபணியுமா..?

அன்புக்கு ஆசைகள் அடி பணியுமா..?

பெண்ணழகே பதில் சொல்..!

என் வீட்டுக் கண்ணாடி கூட

உன் கட்சிதானடி..!

என்னைக் காட்டச் சொன்னால்

அது உன்னைக் காட்டுகிறது பார்..!

வெண்முத்துப் பற்களை

வைத்துக் கொண்டு

பொன் முத்து வாங்க வாங்க வருகிறாயே..!

என்ன மேதாவித் தனம் இது..?

நீயோ முத்துச்

சிரிப்பை உதிர்த்து விட்டாய்..!

நானோ…

உன்னிடமிருந்து சிதறிய

முத்துக்களை

என்

மனதிற்குள் கோர்த்துக் கொண்டிருக்கிறேன்...

அன்னையே...



ஈரைந்து மாதம்

கருப்பையில்

வாழ் முழுதும்

உன் மனதில்...

அறியா வயதில்

தெரியாமல் செய்த பிழை

வாலிப வயதில்

தெரிந்து செய்த தவறு

இரண்டும் பொறுத்தாய்...

பள்ளி செல்லும் வயதில்

உனை வீட்டு நீங்கியதில்லை..

இன்று உனை கண்டே ஆகியது

மாதங்கள் பல..

உனை நினைக்க ஒரு தினம்

தேவை இல்லை - மறந்தால்

தானே நினைக்க !!!...

அம்மா... அம்மா...அம்மா...



அம்மா.

உன்னை உச்சரிக்கும் போதெல்லாம்

எனக்குள்

நேசநதி

அருவியாய் அவதாரமெடுக்கிறது.

மழலைப் பருவத்தின்

விளையாட்டுக் காயங்களுக்காய்

விழிகளில் விளக்கெரித்து

என்

படுக்கைக்குக் காவலிருந்தாய்.

பசி என்னும் வார்த்தை கூட

நான் கேட்டதில்லை

நீ

பசியை உண்டு வாழ்ந்திருக்கிறாய் .

என் புத்தகச் சுமை

முதுகை அழுத்தி அழுதபோது

செருப்பில்லாத பாதங்களேடு

இடுப்பில் என்னை

இரண்டரை மைல் சுமந்திருக்கிறாய்.

அகரம் அறிமுகமான ஆரம்ப நாட்களில்

அன்பின் அகராதியை எனக்கு

அறிமுகப் படுத்தியது

என் தலை கோதிய உன் விரல்களல்லவா ?

எனது சிறு சிறு வெற்றிகளுக்கு

கோப்பைகள் கொடுத்தது

உனது

இதயத் தழுவலும்

பெருமைப் புன்னகையுமல்லவா ?

வேலை தேடும் வேட்டையில்

நகர நெரிசல்களில் கீறல் பட்ட போது

ஆறுதல் கரமானது

உனது ஆறுவரிக் கடிதமல்லவா ?

எனக்கு வேலை கிடைத்தபோது

நான் வெறுமனே மகிழ்ந்தேன்

நீதானே அம்மா

புதிதாய்ப் பிறந்தாய் ?

உனக்கு முதல் சம்பளத்தில்

வாங்கித்தந்த ஒரு புடவையை

விழிகளின் ஈரம் மறைக்க

கண்களில் ஒற்றிக் கொண்டாயே

நினைவிருக்கிறதா ?

இப்போதெல்லாம்

என் கடிதம் காத்து

தொலை பேசியின் ஒலிகாத்து

வாரமிருமுறை

போதிமரப் புத்தனாகிறாய்

வீட்டுத் திண்ணையில்.

எனக்கும்

உன் அருகாமை இல்லாதபோது

காற்றில்லா ஓர் வேற்றுக் கிரகத்துள்

நுழைந்த வெறுமை.

போலியில்லா உன்முகம் பார்த்து

உன் மடியில் தலைசாய்த்து

என் தலை கோதும் விரல்களோடு

வாழத்தான் பிடித்திருக்கிறது எனக்கும்

இந்த

வாழ்க்கை நிர்ப்பந்தங்கள் தான்

வலுக்கட்டாயமாய்

என் சிறகுகளைப் பிடுங்கி

வெள்ளையடிக்கின்றன...

நான் உனக்கு மட்டுமே பிள்ளையாக பிறப்பேனம்மா...


ன் வாழ்வின் ஓவியத்தை

வரையும் தூரிகையே -

உந்தன் வளர்ப்பின் வண்ணத்தில்

அழகுடன் மின்னுபவன் நான்;

பாட்டின் ஜதிபோல

எனக்குள் என்றும் ஒலிக்கும் உயிர்ப்பே – உன்

அசைவில் மட்டுமே அசைந்து -

நீ அணைந்தால் அணையும் விளக்கு நான்;

டைபாதையின் முட்களை மிதித்து – என்

கால்வலிக்கா பூமிமலர்களாய் பூத்துப் போன – அர்ப்பணமே

உன் அன்பிற்கு – அன்றும் இன்றும்

நீ மட்டுமே; நீ மட்டுமே; உனக்கு ஈடானாய்!

ண்மையில், காற்றின் சப்தத்தை

இசையாக்கிக் கொடுத்த ஒரு

யாழின் பெருமை -

உன்னையே சாரும் அம்மா!

னியும், வாழ்க்கை என்று ஒன்று உண்டெனில்

இன்னொரு பிறப்பென்று ஒன்று உண்டெனில்

நீ யாருக்கு வேண்டுமாயினும் அம்மாவாக இரு

நான் – உனக்கு மட்டுமே பிள்ளையாக – பிறப்பேனம்மா...

PAKEE Creation