Sunday, March 27, 2011

என் காதல்...



என் காதல் இறந்து போனது
ஒரு நொடியில்,

பிடிக்காததால் அல்ல..
என் அன்பு உனக்கு புரியாததால்...

நானா இன்னும்...



நானா இன்னும் உனக்குள்
இருக்கிறேன் என்பதை
உணர்த்தியது,

எனக்கு உன் கண்ணீர்
துளிகள்..

Saturday, December 25, 2010

என்மேல் பாசம் வைப்பவர்களையும் வெறுக்கிறேன்...


என்மேல் பாசம்
வைப்பவர்களையும் வெறுக்கிறேன்
சில நாட்கள் பாச மழையில்
என்னை நனையவைத்து விட்டு
பல நாட்கள் கண்ணீரில் என்னை
மூழ்க வைத்து விட்டு செல்கிறார்கள்...

என்னால் மறக்க முடியவில்லையே...


அன்பே உன்னை மறக்க வேண்டும்
என்றுதான் தினமும் நினைக்கின்றேன்
ஆனால் உன் பார்வைகள் என் மேல்
விழூந்த அந்த நாளை...
உனக்காய் நான் கவிதை எழுதிய
அந்தநாட்களையும் உனக்காக
ஒவ்வோர் நிமிடமும் இதயம் அனலாய்
கொதிக்க காத்திருந்த அந்த
இனிய நாட்களையும் சேர்த்து
மறக்கத்தான் ஆனால் என்னால்
மறக்க முடியவில்லையே...

சொர்க்கத்தில் அல்லவா இருந்திருப்பேன் ...


உந்தன் நினைவுகளே என்னை
இவ்வளவு சந்தோசமாய் வைத்திருக்கே
உந்தன் நிஜங்கள் எவ்வளவு சந்தோசமாய்
வைத்திருந்திருக்கும் சொர்க்கத்தில் அல்லவா
இருந்திருப்பேன்...

இன்னும் ஆயிரம் ஜென்மம் வேண்டும்.....


இன்னும் ஆயிரம் ஜென்மம் வேண்டும்
அப்போதெல்லாம் உன் நிழலை விட
நெருக்கமா நான் உன்னுடன் வேண்டும்
உந்தன் சுவாசத்தில் நான் வாழ வேண்டும்
சத்தியமா சொல்றேன் நினைவுகள் வேண்டாம்
உன்னுடனான நிஜங்களே வேண்டும் ....

Sunday, November 14, 2010

அழியாத காதல்...


நீ பேசும் பேச்சு,நான் வாங்கும் மூச்சு..
நீ கொடுத்த முத்தம்,என் இதயத்தில் ரத்தம்..
உயிரில்லாத என் உடலுக்கு,உயிர் கொடுத்தவள் நீ..
துடிக்காத என் இதயத் துடிப்பை,துடிக்க வைத்தவள் நீ..
என் உயிரை நீ அழிக்கலாம்,உன் மீது கொண்ட காதலை ஜென்மத்திற்கும் அழிக்க முடியாது...

நீ ஏற்படுத்திய காயத்தின் பிரதிபலிப்பு...

நீ ஏற்படுத்திய காயத்தின் பிரதிபலிப்பு
என் கண்களின் கண்ணீர்...
நீ என்னை பிரிந்ததின் பிரதிபலிப்பு
என் அண்ணன் எழுப்பிய கல்லறையில்
எனது ஆழ்ந்த நித்திறை...

காதல் ரோஜா...


காதல் எனும் மலரைப் பறிக்க
ரோஜா தோட்டத்திற்குள் அனுமதியின்றி நுழைந்த நான்
கையிலொரு அழகிய மலரைப் பறித்துக்கொண்டு
வெளியே வந்தேன்...
கையில் வைத்திருந்த ரோஜாவைப் பார்த்து ரசித்தவர்களின்
கண்களுக்கு புலப்பட வாய்ப்பில்லை
என் கையில் தென்படும் கீறல்களும் காயங்களும்...

உயிரையே துறந்தேன் நான்...

இமைக்க மறந்தேன் நான்-என்
கண்களுக்குள் நீ தஞ்ஞம் புகுந்ததால்
இதயத் துடிப்பை நிறுத்தினேன் நான்-என்
இதயத்திற்குள் உறங்கும் உன்
தூக்கம் கெட்டு விடும் என்பதால்
உயிரையே துறந்தேன் நான்-நீ
என்னை மறந்து இன்னொரு ஆணை மணம் புரிந்ததால்..
PAKEE Creation